Monday, April 30, 2007
மைசூர் அரண்மனை.. என் பார்வையில்!!!!
தெனிந்தியா என்றாலே அனைவருக்கும் அழகான கோயில்கள், அரண்மனைகள் இப்படி தான் நினைவுக்கு வரும்..
கர்நாடகாவும் அதற்கு விதிவிலக்கில்லை எனலாம். பெங்களூர் எனறவுடன் நினைவுக்கு வருவது சனிக்கிழமை இரவும அருகில் உள்ள மைசூரும் தான்.
மைசூர் என்றவுடன் அங்கு அரண்மனையும், கிருஷ்ணராஜ சாகர் அணையும், சாமுண்டி ஹில்ஸும்,ஸ்ரீரங்கப்பட்டினம் இப்படி பல இடங்கள் உள்ளன.
அட என்னடா இது பில்டப்பு எல்லாம் பலமா இருக்கேனு பார்க்கறீங்களா?? வேற ஒண்ணும் இல்லை சமீபத்துல மைசூர் போயிருந்தேன்.. அது தான். அங்கே மைசூர் மஹாராஜாவின் அரண்மனைக்கும் சென்றிருந்தேன்..
எவ்வளவு அழகான அரணமனை, எத்தனை அழகான வேலைப்பாடுகள், எத்தனை அழகான ஓவியங்கள், இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ...
இது எல்லாம் எல்லாரும் சொல்றதுதான்.. ஆனா நம்ம கொஞ்சம் வேற மாதிரி சொல்ல வேண்டாமா?? அதுனால தான் இப்படி ஒரு பில்டப்பு...
சரி இப்பொழுது கதைக்கு போகலாம். 1399ல் யதுராஜா என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதுதான் வோடையார் சாம்ராஜ்யம்.. அவர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தனர். யதுராஜாவும் அவருடைய சந்ததிகளும் இருனூறு வருஷங்களாக ஆண்டு வந்தனர். அவர்கள் அவர்களுடைய அளுகைக்குள்ப்பட்ட ராஜியத்தையும் விரிவுப்படுத்தி வந்தனர்..
அவ்வாறு அந்த வம்சத்தின் ஒன்பதவாது தலைமுறையில் வந்தவர் தான் ராஜ வோடையார்..(1578-1617)அவர் மிகுந்த வீரமுடையவராகவும், கலை,கலாச்சாரம் அகியவற்றை போற்றுபவராகவும் இருந்தார். அவருடைய தலைமையின் கீழ் அவர்களுடைய எல்லைகள் விரிவாக்கப்பட்டன.
அப்பொழுது அவர் ஒரு முறை ஸ்ரீரங்கப்பட்டினத்தை நோக்கி படையெடுத்து அப்பொழுது இருந்தவரான ஸ்ரீரங்கராயா என்பவரிடம் இருந்து கைபற்றினார்.ஸ்ரீரங்கராயர் அவருடைய இரு மனைவிகள். அதில் ஒருவர் தான் அலமேலம்மா. அவர் ஸ்ரீரங்கநாதரின் மனைவியான ரங்கனாயகியிடம் மிகுந்த பக்தியுடன் இருந்தார். ஒவ்வோரு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் அவருடைய முத்தாலான ஒரு மூக்குத்தியும் மற்றும் அவருடைய அனைத்து நகைகளும் தாயார் ரங்கனாயகியின் மேனியை அலங்கரிக்கும்.
மற்ற நாட்களில் அவைஅனைத்தும் அலமேலம்மவிடமே இருக்கும். இதனை கண்ட ராஜவுடையார் தன்னுடைய படைகளை அலமேல்லம்மா தங்கி இருந்த மாலங்கி என்ற இடத்துக்கு அனுப்பி அந்த நகைகளை அவரிடமே ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அலமேலம்மா அதனை செய்ய மறுத்து நகைகளுடன் ஒடினார். படை அவரை துரத்திக்கொண்டு ஓடியது..
ஒடிய அலமேலம்மா என்ன ஆனார்? இதனால் ராஜவுடையார் சந்தித்த கஷ்டங்கள் என்னென்ன??நானூறு வருடங்களாக இந்த ராஜ பரம்பரை சந்தித்து வரும் சாபம் என்ன?? அடுத்த பதிவில் ....
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
1st.... :-D
சரித்திர க்லாஸில் மை பிரண்ட் படிச்சதா சரித்திரமே இல்லை..
நீங்க திரும்பவும் சரித்திரம் படிக்க சொல்றீங்களே..
நல்லா இருக்கா இது???
ஹாய் சுதா,
ஓஓஓஒ...இதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருகோஓஒ..?
சீக்கிரமா சஸ்பென்ஸ் வக்காம போடுங்க..சரியா?
my friend!!!
sarithiram illa idu.. idu kathai
neenga ketukonga!!
naan kelvi ellam ketka matene
sumathi
aamaanga!! idula ivalavu kadai iruku
solren koodiya seekiram
technically me thaan thirdu!
superrra staart panni irukeenga. suspense ellam vechu! very good. naanum tdy post podaren. :)
hmm supera irukku kathai.. naanum mysore poyirukken.. aana intha kathaya kettathu illai
ellarum suspensekku addict aayitteenga.. suspense vekkama kathaye ezhutha matteengala. :( :(
correcta kathai interesting-a pohuthennu nenaicha thodarum pottutteenga.. :)
குற்றம்
நடந்தது என்ன?
thodaruma :-(
-porkodi
இத்தனை வரலாற்று விஷயங்களா? அதுவும் உங்கள் பதிவில்.. :)
படங்களைப் போட்டு பதிவுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் உங்கள் பதிவில் இப்போது ஆரம்பம் serious.. :)
சரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்பது ஒரு அலாதியான விஷயம்! அதனால் அடுத்த சரித்திர பதிவு எப்போங்க?
சரித்திரதிதிற்கு முன்னாடி ஒரு படப் பதிவப் போட்டு அசத்த மறந்திடாதீங்க..
வந்ததுக்கு அடையாளமா வட்டமா..அதாங்க roundaaaaaaa
ஒரு 15
மைசூர் அரண்மனை போயிருக்கேன். ஆனா இந்த கதையெல்லாம் தெரியாது..
//நானூறு வருடங்களாக இந்த ராஜ பரம்பரை சந்தித்து வரும் சாபம் என்ன??//
இதுலயும் சஸ்பென்ஸா? நடத்துங்க. நடத்துங்க..
மாத்தி மாத்தி நீங்களும் அம்பியும் மைசூர் பதிவுகளா, DD
/சரித்திர க்லாஸில் மை பிரண்ட் படிச்சதா சரித்திரமே இல்லை..
நீங்க திரும்பவும் சரித்திரம் படிக்க சொல்றீங்களே..
நல்லா இருக்கா இது???//
ippadi ellaam sollak koodathunGka cikgu :-)
/ஒடிய அலமேலம்மா என்ன ஆனார்? இதனால் ராஜவுடையார் சந்தித்த கஷ்டங்கள் என்னென்ன??நானூறு வருடங்களாக இந்த ராஜ பரம்பரை சந்தித்து வரும் சாபம் என்ன?? அடுத்த பதிவில் .... //
அட சஸ்பென்ஸா? காத்திருக்கிறேன் DD
நல்லாயிருக்கே கதை, காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு....
/மதுரையம்பதி
aahaa! neengalum potaacha tour pathi! kalakkals thaan!
//அட என்னடா இது பில்டப்பு எல்லாம் பலமா இருக்கேனு பார்க்கறீங்களா??//
thalaippu thaan padichitomla ;)
25?
enna ithu ellarum history lesson edukka aarambichutanga? enna achu ellarukkum? blog unionle sera ithu oru mukkiyamana padama?
Post a Comment