Sunday, January 03, 2010

Director Shankar Blogging!!!

Director Shankar has started blogging about Endhiran... So anyone has any questions can post there and get answers if you are all lucky enuf....


http://www.directorshankaronline.com/

Friday, December 18, 2009

PAA - The movie




The story:-
Amol Arte(Abhishek bachhan) meets Vidya( Vidya Balan) in London where he is studying and she is doing her medical in Gynaecology. Both of them fall in love and gets into relationship because of which Vidya becomes pregnant. But Amol is not for the kid at that point of time because he wants to become a politician and asks Vidya to abort it. Vidya comes back to her mother (Arundhati Naag) in India and plans to have the kid without Amol. The kid is none other than Auro(Amitabh Bachchan). Auro is a witty and intelligent kid with progeria which is a ageing disease in kids. Eventhough he is only 13 he looks like a 60 yr old.Auro knows about his condition. His mischievous eyes hide a sagely mind, and it’s touching how he tries to make life easier for his mom. Little wonder then that he is greatly adored by people around him. In one of the school functions he gets an award from Amol Arte for his exhibit. On that day night Vidya realises that he has taken the award from his own father. The children infected with progeria dont live more than 13. So Vidya informs Auro that Amol is his father. What happens then and how Auro brings his father and mother together is the next part of the story.

Abhishek bachhan has done a very good role. We would all see what kind of a politician we all would aspire in him.
Vidyabalan also has done her role in such a wonderful way that she exactly fits into that character
Arundhati Naag(mother of Vidya) needs a special mention. I dont know how many mothers would really want her daughter to have the kid without the father being known to the kid. But she has supported her daughter very well in the movie
Paresh Rawat (father of Abhishek) also has done his role well. Eventhough he doesnt have much of talent to be shown in this movie.
Special mention to Vishnu(Amitabh's class mate) for his wonderful performance.The scene in which he, Vishnu (Pratik Katare), spits fire against his father in a telephonic conversation with Auro brings the house down with laughter.
and also to the girl whom Auro is afraid of ...
Last but not the least Auro - Performance personified... What an acting.. infact if you are unaware that its amitabh, you would really not identify him at all..Amitabh Bachchan convinces you from shot one that he is Auro - that's the sign of an incredible talent.Such a makeup and performance..
Balki - The pertinent area where Balki scores heavily is in creating authentic, lived-in sets and wonderfully female characters– Auro's family with the comely Vidya and grandmom (brilliantly played)-- are delightfully familiar but also wholly original creations. Not to forget refreshingly liberated in attitude
Ilayaraja- Music is done by ilayaraja though we know that all of them are soothing.
PC Sriram - Camera needs a special mention too...

A VERY GOOD MOVIE WORTH WATCHING EVEN WITH LITTLE HITCHIKIS HERE AND THERE..!!! WORTH EVERY PENNY YOU PAY...

I infact personally feel that amitabh has groomed himself so well for his age. He has taken so much of care to groom to his age which not many of the south indian actors have done or doing...

Friday, October 09, 2009

அன்பு நெஞ்சங்களே அணி திரண்டு வாரீர்.. உதவி செய்ய... !!!!

அன்பு நெஞ்சங்களாகிய ப்ளாக் உலக பெருமக்களே... உங்களிடம் ஒரு உதவி கோரி வந்துள்ளேன்...
உங்களால் முடிந்தால் செய்யவும்.. அப்படி இல்லை என்றால் உங்களுக்கு தெரிந்த உதவி செய்ய கூடிய அன்பர்களிடம் சொல்லவும்
கீழே குடுத்துள்ள சுட்டிக்கு போகவும் அதில் அவர்களின் தேவைகள் கொடுக்க பட்டுள்ளன. இந்த நிறுவனம் உடல் ஊனமுற்றோர்களுக்கு உதவுகிறது.. ஆதலால் நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும் அப்படி இல்லை என்றால் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லவும் இப்படியே நமக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி அவர்களால் இயன்ற உதவிகளை செய்யட்டுமே... !!!

Sukriti

Friday, September 18, 2009

நவராத்திரி ஸ்பெஷல்!!!!

அழகியின் ஒன்பது அவதாரங்கள்!!!!

எல்லாமே ரொம்ப அழகா இருக்குல்ல... (உடைகளை தான் சொன்னேன்.. :))

யாருக்காவது ஏதாவது கவிஜை தோனிச்சுனா தயவு செய்து கம்மன்டவும்..









Thursday, September 10, 2009

பிசி பேளா ஹுளி அன்னா..

எனதருமை தம்பி திரு.கில்ஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த சமையல் குறிப்பு..

முதலில் இதற்கு தேவையான பொடி செய்வது எப்படின்னு பார்க்கலாம்...

பொடி செய்ய தேவையான பொருட்க்கள்...
காய்ந்த மிளகாய் - 6
ஜீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
தனியா - 3 டீஸ்பூன்
கிராம்பு - 4
பட்டை - 2 துண்டு
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
துருவிய கொப்பரை - 1 கப்..
எண்ணெய் - வறுக்க தேவையான அளவு..

மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்று ஒன்றாக வறுத்து பின்பு கரகரப்பாக பொடி செய்து வைத்து கொள்ளவும்.. தேவையான சமயத்தில் உபயோகிக்கலாம்..




துவரம் பருப்பு - 1/2 கப்
அரிசி - 1 கப்
புளி - 1/2 கப் (நன்றாக கெட்டியாக கரைத்தது.. )
அறிந்த காய்கறிகள் - 1/2கப்( காரட், உருளை கிழங்கு, பீன்ஸ், பட்டாணி)
அறிந்த பச்சை மிளகாய்- 4
நெய் - 1tbsp
கடுகு - 1/2 tsp
மஞ்சள் பொடி - 1 tsp
கருவேப்பிலை - சிறிதளவு
கடலை பருப்பு - 1/2 tsp
உளுத்தம் பருப்பு - 1/2 tsp
முந்திரி பருப்பு - 3 tsp
உப்பு - தேவைக்கேற்ப

அரிசி பருப்பு இரண்டையும் நன்கு களைந்து அனைத்து காய்கறிகளையும் சேர்த்து
மஞ்சள் பொடி, பிசி பேளா பொடி உப்பு சேர்த்து குக்கரில் ஒரு கப்புக்கு நான்கு கப் வீதம் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைத்துக்கொள்ளவும். பிறகு குக்கரை திறந்து நன்றாக கொதிக்க வைத்த புளி தண்ணீரை அதில் சேர்த்து கிளறவும்.. நெய்யில் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு, கருவேப்பிலை அனைத்தையும் தாளித்து அதில் சேர்த்து சுட சுட ராய்தாவுடன் பரிமாறவும்.. அப்பளத்துடனும் பரிமாறலாம்..

Thursday, August 27, 2009

கோத்துட்டாங்கயயா..கோத்துட்டாங்க... !!!!!

நம்மள கோர்த்து விட்டுட்டாரு கில்சு... தம்பி கோர்த்து விட்ட அப்புறம் போடாம இருக்கலாமா?? மரியாதையா ...
அதனால என்னோட தொடர் பதிவு..

1. அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
இறைவனோட படைப்பு எல்லாமே அழகு தான்... அதனால அது நிரம்தரமானதே. என்ன ஒரொரு கால கட்டத்துல நமக்கு அதோட விவரிப்பு மாறலாம்.
சிறிய வயதில் நமக்கு நம் அப்பா அம்மா நமக்கு செய்வது அழகாக தெரியும்
அப்புறம் நமது நண்பர்கள் அழகா தெரிவாங்க
வயது வந்த பிறகு எதிர் பால் மக்கள் அழகாக தெரிவாங்க.
அப்புறம் நமக்கு பிறகும் குழந்தை ... இப்படி நமக்கு அந்த அந்த வயசில் அழகின் முகவரி மாறிக்கிட்டே இருக்கும்.

2. காதல் மனிதனுக்கு அவசியமா?
மிகவும் அவசியம்... காதல் இல்லாமல் நாம் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது...
நம்ம சுத்தி இருக்கறத நாம நம்மை அறியாமல் காதல் செஞ்சிக்கிட்டே தான் இருக்கோம்

3. கடவுள் உண்டா?
நிச்சயமாக என்ன எல்லாருக்கும் அம்மா இருக்காங்களே..
யாரோ சொல்லியது கடவுள் எல்லா இடத்துலயும் இருக்க முடியாதுங்கறதுனால தான் அம்மாவை படைச்சாராம். அதனால இதுல சந்தேகத்துக்கு இடமே இல்லை..

4. பணம் அவசியமா?
அவசியம் ஆனா எவ்வளவு அப்படிங்கறது அவங்க அவங்க மனச பொறுத்தது..
சிலருக்கு மாருதி கார் வாங்கற ஆசை இருக்கும் சிலருக்கு பி.எம்.டபிள்யு கார் வாங்கற ஆசை இருக்கும்..

நான் கோத்து விடுவது...
கீதா மாமி
சுமதி அக்கா
அம்பி
கே ஆர் எஸ்
..

Biriyani - Method 2

Ingredients
400 gms. basmati rice
250 gms. cauliflower, cut into flowerettes
100 gms. green peas, shelled
100 gms. carrots, cut into 2.5 cm. long pieces
100 gms. french beans, cut into diamond shaped pieces
3 potatoes, cut into four pieces each
2 black cardamoms
4 green cardamoms
4 cm. cinnamon
4 cloves
8 peppercorns
1 tsp. shahjeera
3 bay leaves
Few strands saffron

Masala for the vegetables:
250 g. onions, sliced
3/4 cup curd
4 tsp. chilli powder
3 tsp. ginger-garlic paste
2 tsp. mint paste
1 1/2 tsp. garam masala powder
1 1/2 tsp. coriander-cummin powder
Salt to taste
3 tbsp. ghee or more
Ghee for deep frying onions
For the garnish:
2 tomatoes, sliced
2 capsicums, sliced
2 onions, fried till crisp
Few mint leaves

Method

To prepare the vegetables:

1. Wash the vegetables and dry them well.
2. Mix all the ingredients for the masala, well except the ghee, and marinate the vegetables in it for one hour.
3. Heat ghee and deep fry the onions till well browned. Remove from ghee.
4. When cool, grind to a paste.
5. Wash and cook the rice in double the quantity of water. When done, remove the rice and spread it in a plate.
6. Keep aside to cool.

To prepare the rice:
7. Lightly roast the saffron, powder and sprinkle over the rice.
8. Heat ghee in a kadai and season it with the whole spices.
9. Add the vegetables and saute for five minutes. 10. Add a little water and cook the vegetables till done and almost dry.
11. In a baking dish arrange alternate layers of rice and the prepared vegetables.
12. Top with garnish and bake in a moderately hot oven for 20 minutes.

Serve hot with raita and papad

Wednesday, August 19, 2009

நூறாவது பதிவு !!!!


விளையாட்டாக ஆரம்பித்த ப்ளாக் இப்பொழுது நாலாவது வருஷத்தில் என்னுடைய நூறாவது பதிவை பதிவு செய்வதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது... !!!
நம்ப முடியாத வகையில் இத்தனை பதிவுகளையும் பொறுமையாக படித்து அதற்கு கம்மென்ட் போட்ட அனைத்து ப்ளாக் யூனியன் பெருமக்களுக்கு நன்றி...
வலை உலகத்துக்கு வந்து நிறைய நண்பர்கள்... என்னுடைய சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டு என்னுடைய சோகங்களின் போது எனக்கு தோள் கொடுத்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் ஆயிரம்...
எத்தனை முறை அனைவரையும் கேலியும் கிண்டலும் செய்தாலும் அக்கா அக்கா என்று அனைவரும் என்னிடம் காட்டும் அன்பிற்கு அளவுகோலே இல்லை...
என்னை நேரில் சந்திக்க வேண்டி வந்த அனைத்து உள்ளத்திற்கும் நன்றி...

நான் ப்ளாக் எழுத காரணமாக இருந்த எனது குரு திரு.டுபுக்கு அவர்களுக்கும் நன்றி...



எனது நூறாவது பதிவுக்கு வருகை தந்து இருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இந்த கேக்..

எனக்கு மெயிலில் வந்த மெசேஜ் !!! உங்களில் பலருக்கும் வந்திருக்கும்.. இருப்பினும் என்னை கவர்ந்ததால் இங்கு பதிவிடுகிறேன்...

One day Maths teacher asked her students to list the names of the other students in two sheets of paper, leaving a space between and asked them to write the nicest things about them against each name.When they finished their assignment she took it and the following saturday she wrote down the name of each student and listed what everyone else said about them.
On Monday she gave each student their list and the entire class was smiling and said 'I never knew that I meant anything to anyone! I never knew that others liked me so much'. was the comment from all the students.No one ever mentioned of those papers in class again.The exercise had accomplished its purpose. The students were happy with themselves and one another. That group of students moved on

Several years later, one of the students was killed in'Kargil' war and his teacher attended the funeral.The place was packed with his friends. One by one those who loved him took a last walk. The teacher was the last one to bless .
After the funeral, most of Sanjay's former classmates were there. Sanjay's mother and father were there, obviously waiting to speak with his teacher.'We want to show you something,' his father said, taking a wallet out of his pocket 'They found this on Sanjay when he was killed. We thought you might recognize it.'
Opening the billfold, he carefully removed two worn pieces of notebook paper that had obviously been taped, folded and refolded many times. The teacher knew without looking that the papers were the ones on which she had listed all the good things each of Sanjay's classmates had said about him.'Thank you so much for doing that,' Sanjay treasured it.'All of Sanjay's former classmates started to gather around and said that all of them have treasured it in some or other way. One of them said 'I think we all saved our lists'That's when the teacher finally sat down and cried. She cried for Sanjay and for all his friends who would never see him again.The density of people in society is so thick that we forget that life will end one day. And we don't know when that one day will be.So please, tell the people you love and care for, that they are special and important. Tell them, before it is too late.
Remember, you reap what you sow.. What you put into the lives of others comes back into your own.

HAVE A GLORIOUS DAY

நமக்கு அனைவருக்கும் நண்பர்கள் பலர் இருந்தாலும் அவர்களுக்கு என்று நாம் நேரம் ஒதுக்குவது மிகவும் கடினமாகி விட்டது.. நம்மில் எத்தனை பேர் நம் நண்பர்களிடம், அவர்களிடம் நமக்கு பிடித்த விஷயங்களை சொல்லி இருக்கிறோம்.. அவர்கள் நமக்கு செய்த உதவிகளுக்கோ, நமக்கு அழ கொடுத்த தோல்களுக்கோ, நம்முடன் பகிர்ந்து உண்ட உணவுகளுக்கோ, நம்முடன் செலவு செய்த அந்த தருங்களுக்கோ நன்றி தெரிவித்து இருக்கிறோம்.. இனிமேலாவது மாதத்தில் ஒரு முறையோ, முடியாமல் போனால் வருடத்தில் ஒரு முறையோ நண்பர்களுடன் அந்த வருடத்தில் அவர்கள் நமக்கு செய்த நன்மைகளையும் அதனால் நாம் அடைந்த சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்வோமே...