Wednesday, February 28, 2007

அப்துல் கலாம் அவர்கள் கனவு காண சொன்னது சரியா??

ஏதோ நம்ப ஜனாதிபதி சொன்னாரேன்னு நானும் கனவு கண்டேன்!! என்ன கனவு? அது பலிச்சுதானு நீங்களே பார்த்து தெரிஞ்க்கோங்க!!!

ஒரு அழகான சின்ன கார்... (ஆபீஸ்லேர்ந்து தான்!!)அத நிறுத்தி வைக்க ஒரு நல்ல சின்ன இடம்!!!!வேலை செய்ய ஒரு நல்ல இடம்!!!(அது தாங்க க்யுபிக்கிள்!!!)வேலைக்கு நடுவுல ஒய்வு எடுக்க நல்ல வசதியான இடம்!!!(அது யாருப்பா அது வேலையே ஒய்வெடுப்பதுதானானு உண்மை எல்லாம் சொல்றது!!!)அப்பப்போ மீட்டிங்க்கு ஒரு நல்ல ரூம்!!!(என்ன மீட்டிங்னு எல்லாம் கேட்கப்படாது)நம்பளுக்கு உதவிக்கு ஒரு நல்ல பிகர்!!(நம்பளே வேஸ்ட் அப்ப்டிங்கரது வேற கதை)இப்படி எல்லாம் சின்ன சின்னதா ஒரு கனவு கண்டா நம்பளுக்கு கடைசில என்ன கிடைச்சுதுனு பாருங்கப்பு!!!
.
.
.
.
.
.
.
.


இப்போ சொல்லுங்க என்னோட நிலைமைக்கு அப்புறமும் நம்ப ஜனாதிபதி சொன்னது சரியா?? (அது தாங்க கனவு காண்றது)

Tuesday, February 27, 2007

Salary Theorem for Employees !!!!

This post is dedicated to people who are searching for a new job!!!


Courtesy : Funtoosh!!!!

உன்னை காதலிக்கிறேன்!!!

ஒருத்தரை பிடிக்காமல் போக பல காரணங்கள் இருக்கலாம்... ஆனால் பிடித்திருப்பதற்க்கு காரணங்கள் சொல்வது கடினம்...
அதே போல தான் ஒருத்தரை காதலிப்பதற்க்கும்!!!
(சரி சரி பில்டப்ப இத்தோட நிறுத்திக்கறேன்!!)

காதலிக்க சில காரணங்கள்!!!


என்ன நடந்தாலும்
எங்கு நடந்தாலும்
நீ மட்டும்
எப்படி அமைதியாக
இருக்கிறாய்!!
(என்ன பண்றது உன்னோட இருக்கறதுனால தான்னு சொல்ல முடியலியே!!!)

உன்னை நான் நன்கு
அறிந்து இருப்பதால்
தானே உன்னை
காதலிக்கிறேன்..
(ஆஹா என்ன கண்டுபிடிப்பு!!)

என் முகத்தில்
எந்த நேரத்திலும்
புன்னகையை
வரசெய்கிறாய்!!!
(என்ன செய்வது இல்லாட்டி நம்ப புன்னகை அவுட்)

உன்னுடன் இருக்கும் போது
என் வாழ்வின்
சுவை கூடுகின்றது!!
(ம்ம்ம் நீ சமைக்கின்ற சாப்பட்டுல சுவையே இல்லேனு வேற எப்படி சொல்றதாம்??)

என்னை என்னுடைய
மோசமான
தருணங்களிலும்
காதலிக்கின்றாய்!!!
(இல்லாட்டி சப்பாத்தி கட்டை தானே பறக்கும்.. அதுக்கு பயந்து தான்!!)

உன்னை நான்
உன் வாழ்க்கையின்
எல்லைக்கு கூட்டி
செல்லும் போதும்
பைத்தியம் பிடிக்காமல்
இருக்கின்றதே!!
(ஒருத்தருக்கு ஒரு வாட்டி தான் பைத்தியம் பிடிக்கும்.. அது தான் உன்னை காதலிக்க அரம்பிச்சவுடனே பிடிச்சாசே!!)

என்னுடைய நண்பர்கள்
உறவினர்களை
பிடிக்காவிட்டாலும்
நீ அனுசரித்து
போகிறாய்
(என்ன பண்றது எத்தனை நாள் தான் தரையிலும் திண்ணையிலும் படுத்து தூங்கறது!!!)

நான் உன்னை
காதலிக்கறேன்
என்று சொல்லும்
போது உன்
கண்களில் கானும்
உணர்ச்சிகளுக்காக!!!
(நம்ம கண்ணுல உணர்ச்சியா?? உடம்புல தான் இல்ல கண்ணுலயாவது இருக்கட்டுமே!!)


கவிஜ என்னுடையது!!
(அதுக்கு நம்ப ரங்கமணியோட
பின்னூட்டங்களும் குடுத்து இருக்கேன்!!)


Disclaimer:- -இது ஒரு காமெடிக்காக இடப்பட்ட பதிவு மட்டுமே... யாரையும் (காதலையும்/ காதலிப்பவரையும்) புண்படுத்தும் எண்ணம் எதுவும் இல்லை

Sunday, February 25, 2007

கோயிலுக்கு எதுக்கு போகனும்???

நம்ப பாட்டுக்கு ஏதோ நம்பளுக்கு தெரிஞ்சா மாதிரி பொண்ணுங்க போட்டோ எல்லாம் போட்டுட்டு இருந்தா நம்ப குரு வந்து வேற ஏதாவது எழுதுங்கனு சொல்லிட்டாரு... அதை வேற இன்னோரு நண்பர் வழி மொழிஞ்சுட்டு போய்ட்டாரு!!!
சரி ஏதாவது எழுதிடனம்னு முடிவு பண்ணி இன்னிக்கி எழுதரேன்!!! யாரெல்லாம் துப்பனமோ வந்து துப்பிட்டு போங்கப்பு!!

கோயிலுக்கு எதுக்கு போகனும்???


அது தான் வீட்டிலேயே படம் எல்லாம் வச்சி விளக்கு ஏத்தி சாமி கும்பிடரோமே அப்புறம் எதுக்கு கோயிலுக்கு போகனும்?? அதே சாமி தானே அங்கேயும்னு சொல்ரது காதுல விழுது!!!கோயிலில் ஒரு ஒரு நேரத்துக்கும் ஒரு ஒரு மாதிரி மந்திரங்கள் சொல்ல படுகின்றன... அவ்வாறு சொல்ல படுகின்ற மந்திரஙளில் இருந்து எழும் அதிர்வுகள் கோயிலின் உட்புரத்திலேயே சுற்றி சுற்றி வருகின்றன.. கோயிலின் அமைப்பும் அவ்வாரே அமைக்கபட்டுள்ளது!! (முக்கோண வடிவில்)
நாம் நம்முடைய மன சஞ்சலத்துடன் அங்கே செல்கிறோம்!!


அங்கு செல்லும் போது அங்குள்ள அதிர்வுகளில் உள்ள நமக்கு தேவையானவற்றை நம்முடைய உடம்பு கிரக்கித்து கொள்கின்ரது!! ஆதலால் தான் நமக்கு ஒரு வித மன அமைதி கிடைக்கின்றது!!!

மேலும் பழைய கோயில்களில் எல்லாம் கருங்கற்கள் போட்டு இருப்பார்கள் பிரகாரத்தில்!! அதன் மீது நடக்கும் போது அது நம்முடைய கால்களுக்கு நல்ல ஒரு அக்கு பிரஷர் முறையாக கருதபட்டது!! அதனால் தான் ஒரு சுற்று செய்ய கூடாது!! மூன்று சுற்றாவது சுற்ற வேண்டும் என்றனர்...
Disclaimer: இது அனைத்தும் ஒரு புத்தகத்தில் படித்தவையே!!
ஏதெனும் தவறு இருப்பின் மன்னிக்கவும்!!
ஏதெனும் திருத்தம் தேவைபட்டால் அதையும் தெரிவிக்கலாம்!!
யார் யார் கல் எரிய நினைக்கிறீங்களோ எரியலாம்.. ஆனால் சிறிய கற்களாக இருத்தல் நல்லது

Friday, February 23, 2007

Parvati Melton

Marubadiyum Figure!!!

என்னடா இது எப்போ பாரு பிகருங்க படமே போடரோமே ஒரு மாறுதலுக்காக ஆளுங்க படம் போட்டா இது செல்லாதுனு சொல்லிட்டு போய்ட்டாங்க!!!


நம்ப பிகருங்க படம் போடரவங்கனே முடிவு பண்ணிடாங்க போல இருக்கு!!!


சரி அதை தப்பாக்க வேண்டாம்னு தானுங்க இந்த பதிவு!!!


பார்த்துட்டு எல்லாரும் உங்க பேராதரவ தரனும்னு கேட்டுகறேன்....


அப்பாடா ....... ஒரு சோடா ஒடைங்கப்பு!!!

Thursday, February 22, 2007

அடடா!!! 25வது பதிவு!!!

நினைச்சாலே ஆச்சரியமா இருக்கு!!

இப்போ தான் அரம்பிச்சா மாதிரி இருக்கு!!!

ப்ளாக் அரம்பிச்சு எல்லாருடைய பேராதரவோட இன்னிக்கி இது சாத்தியம் ஆகி இருக்கு!!!
நிறையா கமெண்டுரவங்களுக்கு தான் இந்த கேக்
அதனால ஸ்டார்ட் மீஜிக்!!!

Ladies Special!!!!