Sunday, December 16, 2007

மாதங்களில் நான் மார்கழி..



சென்ற ஆண்டு மார்கழி மாதத்தில் போட்ட பதிவு... சில மாற்றங்களுடன்..

மார்கழி மாததிற்கு என்ன சிறப்பு??

தேவர்களுக்கு நம்முடைய ஒரு ஆண்டு ஒரு நாளை போன்றது..ஒரு மாதம் அவர்களுக்கு இரண்டு மணி நேரம். அப்படி அவர்களின் ஒரு நாளில் இந்த மாதம் காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை. அவர்களின் பிரம்ம முகூர்தாமதலால் இது மிகவும் விசேஷமான மாதமாக கருதப்படுகின்றது..

கண்ணன் ஏன் மாதங்களில் தான் மார்கழி என்று கூறினான்...



மார்கழி மாத்தில் மட்டுமே எல்லா மதத்தினருக்கும் பண்டிகை அமைந்துள்ளது

இந்துக்களுக்கு - வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்,ஹனுமத் ஜெயந்தி..

கிறுத்துவர்களுக்கு - கிறுஸ்துமஸ்

முஸ்லீம்களுக்கு - பக்ரீத்

அது மட்டுமல்ல!!

மார்கழி மாதத்தில் தான் ஒஸோன் படலம் பூமிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.. இது காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பூமிக்கு மிக அருகாமையில் உள்ளது.. ஒஸோனை சுவாசித்தால் முடைய உடம்புக்கு நல்லது.. ஆகவே பெண்களை காலையில் கோலமும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர்...




ஆண்டாள் பிறந்த ஊரான ஸ்ரீவல்லிப்புத்தூரின் கோவில் கோபுரம் தான் நமது தமிழ்நாட்டின் சின்னமாக வைக்க பட்டுள்ளது..

மேற்கூறிய காரணங்களால் தான் மார்கழி மாதம் சிற்ப்பானதாக உள்ளது.காலையில் சீக்கிரமாக எழுந்து எல்லாரும் பயன் பெறுவோமாக..

Monday, November 19, 2007

சூறாவளி சுற்று பயணம் - புது டில்லி

டில்லில இந்திரா காந்தி அம்மையார் வீட்டை பார்த்த அப்புறம் போன இடம் குதுப் மினார்...



இரவு நேரத்தில் குதுப்மினார்

அழகான கட்டிட கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.. குதுப் உதின் ஐபக் என்பவரால் ஆரம்பிக்க பட்டு அவருடைய மருமகன் இல்டுமிஷ் என்பவரால் மேலும் சில மாடிகள் கட்டப்பட்டு பிருஸ் ஷா என்பவரால் முடிக்க பட்டது.. இது 72.5மீட்டர் உயரம் உடையது. உலகிலேயே மிக உயரமான கற்களால் செய்ய பட்ட மினரெட் இந்த குதுப்மினார் ....





குதுப்மினரோட அழக ரசிச்சிகிடே நாம அடுத்ததா போக போற இடம் தாமரை கோவில்.. இதுக்கு இன்னொரு பெயர் ஜந்தர் மந்தர்.. இந்த இடம் மிகவும் அழகாக தாமரை பூவை போன்று வடிவமைக்க பட்டுள்ளது.. ஒன்பது நுழைவாயில்களை கொண்ட இந்த கோவிலில் இரண்டயிராத்து ஐந்நூறு பேர் உட்காரும் வசதி படைத்தது ... இதன் உள்ளே நுழைந்தால் மனதில் ஒரு பெரிய அமைதி நம்மை ஆட்கொள்கிறது என்றால் மிகைஆகாது.. உள்ளே நுழைவதற்கு முன்பே நம்மை அமைதி காக்க வேண்டுகின்றனர்.


முகலாய கட்டிட கலைக்கு ஒரு குதுப்மினார் என்றால் நம்முடைய கட்ட கலைக்கு ஒரு அக்ஷர்தாம் கோவில் என்றால் அது தவறல்ல ..அழகான ராஜஸ்தானில் இருந்து எடுத்து வந்த பிங்க் நிற கற்களால் செய்ய பட்டுள்ளது...

மார்பிளிலும் சிற்பங்கள் செதுக்க பட்டுள்ளது.. நான் எத்தனை அந்த கோவிலை பற்றி கூறினாலும் அதன் அழகை நீங்களே கண்களால் கண்டு களியுங்கள்.. உங்கள் பார்வைக்காக சில படங்கள்..





அங்கு ஒரு மூன்று மணி வாக்கில் சென்றால் இரவு ஏழு மணி வரை நிடனமாக காணலாம்.. கேமரா, செல்போன் ஆகியவை உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை.. இரவில் விளக்குகளில் இதன் அழகை கான கண் கோடி வேண்டும். இரவில் இங்கு இசைகேற்ப நடமாடும் தண்ணீர் வீழ்ச்சி உள்ளது.. மற்றும் படகு சவாரியும் உள்ளது..
இதில் இன்ட்ரோ என்ற இடத்தில் க்ளிக்கவும்...இங்கு க்ளிக்கி அக்ஷர்தாமை நேரில் பார்த்த புண்ணியத்தை பெறவும்..

பதினேழு நிமிட வீடியோ பார்க்கவும்..

அடுத்து நாம் ஹரித்வாரில் சந்திப்போம்...

Thursday, November 15, 2007

சூறாவளி சுற்று பயணம் - தலைநகரம் டில்லி .....

அலகாபாத்லேர்ந்து ராத்திரி ரயில் ஏறி கார்த்தால ஏழு மணிக்கு டில்லி போய் சேர்ந்துடும்னு சொன்னாங்க... ஆனா கார்த்தால ஏழு மணிக்கு சொல்றாங்க.. மதியம் ஒரு பன்னிரெண்டு மணி ஆகிடும்னு சாதாரணமா சொல்றாங்க.. என்ன கொடுமை இது பிகர பார்த்த ஏமாந்த சிங்கம்லே ஏஸ்!!!! சரின்னு ரயில்ல கிடைச்ச பிரட் சாப்டுட்டு மதியம் சூப்பரா தலைநகரத்துக்கு வந்தாச்சு... வெயில் ஜாஸ்தியா இருந்துச்சு..


அங்கேர்ந்து ஹோடல்லுக்கு போய் நல்ல குளிச்சி கீழ போய் அன்னபூர்ணா அப்படின்னு ஒரு ஹோட்டல்ல சாப்டோம் சும்மா சொல்ல கூடாது சூப்பரா இருந்துது சாப்பாடு.. சாப்டுட்டு டில்லி சுத்தி பார்க்க கிளம்பியாச்சு... மொதல்ல போன இடம் இந்திரா காந்தி வீடு.. பெரிய வீடு.. நிறைய இருக்கு பார்க்க .. ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி இருவரின் சின்ன வயசு படங்கள் பார்க்க இனிமை..

ராஜிவ் காந்தி குழந்தையாக....


நேரு இந்திரா காந்தியின் கல்யாணத்துக்கு நெய்து குடுத்த புடவை....


இந்திரா காந்தியின் கணவர் அவருக்கு செய்து குடுத்த பரிசு ....


காலன் பிரதமரை சந்தித்த இடம்


காலனை சந்தித்த போது உடுத்தியிருந்த புடவை


ராஜிவ் காந்தியை குண்டுகள் துளைத்தப்போது அவர் அணிந்திருந்த உடை...

சந்தோஷத்தோடு வீட்டுக்குள் போன போதும் கனத்த மனசுடன் தான் வெளியே வர முடிகிறது... :(

மீண்டும் டில்லியில் சந்திக்கலாம் ... அடுத்த முறை குதூப் மினார், ஜந்தர் மந்தர் மற்றும் அக்ஷர்தம் கோவில்களை பார்க்கலாம்.....

Wednesday, November 14, 2007

சூறாவளி சுற்று பயணம் - அலகாபாத்

கயா எல்லாம் சுத்தி பார்த்தாச்சு.. புத்த கயா பார்க்க நேரமின்மை காரணமா அங்கேர்ந்து ரயில்ல அலகாபாத் வந்தாச்சு.. அலகாபாத்ல நிறைய இடங்கள் இருக்கு சுத்தி பார்க்க.. ஆனந்த் பவன், ஹனுமான் மந்திர், காளி கோவில் இப்படி நிறைய இருக்கு.. போய் சேர்ந்த அன்னிக்கி ரெஸ்ட். என்னா ரயில்ல போய் சேரும் போது இராத்திரி ஆகிடிச்சி.. அதனால போய் தூங்கிட்டு காலை ஏழு மணிக்கு எல்லாம் ரெடி ஆயாச்சு. அங்கே திருமதிகள் எல்லாம் வேணி தானம் அப்படின்னு ஒன்னு பண்றாங்க...



அது என்னனா தம்பதிகள் ரெண்டு பேரும் சேர்ந்து உக்கார்ந்து எனக்கு தெரிஞ்சோ தெரியாமலோ என்னோட கனவிலோ நினைவிலோ உனக்கு துரோகம் செஞ்சு இருந்தா அதை எல்லாம் இன்னியோட இந்த திரிவேணி சங்கமத்துல கரைசிக்கிரேன்.. இனிமே அந்த மாதிரி தவறுகள் செய்ய மாட்டேன் அப்படின்னு பூஜை செய்து திரிவேணி சங்கமத்துக்கு போய் அங்கே திருவாளர் திருமதிக்கி தலைக்கு பின்னல் போட்டு கடைசில கொஞ்சமா முடியை வெட்டி சங்கமத்துல போடணும். அது மட்டும் இல்லாம பூஜை செய்து சங்கமதுல குளிக்கும்போது புது புடவை கட்டிக்கணும் அதை நமக்கு பூஜை செய்றவங்களுக்கு தானமா குடுத்துட்டு வரணும். இங்கேயும் இறந்து போனவங்களுக்கு திதி குடுக்கறாங்க... கங்கை, சரஸ்வதி, யமுனா ஆகிய மூணு நதி சங்கமம் ஆகிற இடம் தான் திரிவேணி சங்கமம். கங்கையும், யமுனையும் தான் கண்ணுக்கு தெரியுது ஆனா சரஸ்வதி தெரிவது இல்ல.. ஏன்னா அது கண்ணுக்கு தெரியாம கீழ ஓடுவதாக ஐதீகம். நம்ம ஜடைல மூணு கால்கள் போட்டு பின்னல் போட்டாலும் ரெண்டு தான் தெரியும்.. அதுப்போல ....

சரி நம்ம திரிவேணி சங்கமத்துல குளிச்சாச்சு.... அங்கேர்ந்து வெளில வந்தவுடன் ஒரு ஹனுமான் கோவில் இருக்கு. முழுக்க தரைல செதுக்கினது சஞ்சீவி மலைய தூக்கிட்டு போகற மாதிரி.. அது எல்லாம் பார்த்துட்டு போய் சாப்டுட்டு மாலைல ஆனந்த பவன்..



இங்கே தான் நேருஜி அப்புறம் இந்திர காந்தி ரெண்டு பேரும் பிறந்தாங்க.. நேருஜி வளர்ந்த வீடு வாழ்ந்த வீடு ஒரு சின்ன டாகுமெண்டரி பிலிம் காட்றாங்க. அதுலேர்ந்து கொஞ்ச தூரத்துல துளசிதாசோட கோவில் அப்புறம் படே ஹனுமான் மந்திர், ஒரு தேவி கோவில் இருக்கு அலகாபாத்ல பார்க்க..




இது எல்லாம் சுத்தி பார்த்துட்டு நாம அடுத்ததா தலைநகர் டெல்லிக்கு பயணம் செய்ய போறோம்.. சரியா... மீண்டும் சந்திக்கலாம் டெல்லில ....

Tuesday, October 30, 2007

சூறாவளி சுற்றுப் பயணம்..கயா

எல்லாரும் சௌக்கியமா?? ரொம்ப நாள் ஆச்சு நான் என்னுடைய பயணத்தை பத்தி எழுதி... நான் எல்லாரையும் மாதிரி ஆணி கடப்பாரைன்னு எல்லாம் பொய் எல்லாம் சொல்ல மாட்டேன். எல்லாம் ஒரு சோம்பேறிதனம் தாங்க.. மன்னிச்சிகோங்க.
சரி போன பதிவுல வரானாசிக்குனு ஒரு மூணு தனி சிறப்பு இருக்குன்னு சொன்னேன் இல்லையா.. அது என்னனா அங்கே காக்கைகளே கிடையாது, மாடு முட்டாது, அப்புறம் அங்கே மணமுள்ள மலர்களே கிடையாது..

இது காசிலேர்ந்து கயா போகிற வழி...


இப்படியாக நல்லா காசிய சுத்தி பார்த்துட்டு அங்கேர்ந்து ஒரு கார்ல கயாக்கு கிளம்பினோம். காசிலேர்ந்து கயா ரோட்வழியா ஆறு மணிநேரம் ஆனது.. ஆனா டிரைவர் ஒரு எடத்துல கூட நிறுத்த மாட்டேன்னு சொல்லிட்டாரு.. அவ்வளவு நக்சல் பயம் வழி நெடுக. ஏதாவது ஹோட்ல்ல நிறுத்துங்க டீ குடிக்கனம்னு சொன்ன கூட முடியாதுன்னு சொல்லிட்டாரு. ஆத்திர அவசரத்துக்கு கூட முடியாதுன்னு சொல்லிட்டாரு.. அப்படி இப்படின்னு ஒரு வழியா ராத்திரி பத்து மணிக்கு வந்து சேர்ந்தோம் கயாக்கு... காலைல ஒரு ஏழு மணிக்கு எல்லா காரியங்களும் முடிச்சோம். எங்க கூட வந்த பெரியவங்க எல்லாம் இறந்து போனவங்களுக்கு காரியம் செய்ய போய்ட்டாங்க.

இது தான் விஷ்ணு பாதம் கோயில் ...

இது விஷ்ணு பாதம்...

இங்கே என்ன விசேஷம்னா இங்க இறந்து போனவங்களுக்கு ஒரு தரம் காரியங்கள் பண்ணிட்டா அப்புறம் வாழ்நாள் முழுக்க நம்மளால காரியம் பண்ண முடியலேனாலும் தவறு இல்ல. விஷ்ணு பாதம்னு ஒரு கோயில் இருக்கு அங்கே தான் இந்த காரியங்கள் எல்லாம் பண்றாங்க.


பால்குனி நதி ...

இந்த கோயில் பால்குனி நதிக்கரை ஓரத்துல இருக்கு. கயாசுர்னு ஒரு அசுரன் இருந்ததாகவும் அவனை விஷ்ணு தன்னுடைய காலால் மிதித்து கொன்று அவனை கல்லாக மாற்றியதாக தல புராணம். அப்படி மிதித்த போது ஏற்ப்பட்ட பாததிதின் சுவடை இந்த கோயிலில் வைத்து ஆராதனை செய்கின்றனர்.

ஆலமரம் ...

அதே போன்று மற்றொரு விசேஷமான விஷயம் இங்கே ஒரு ஆல மரம் இருக்கு அதன் மேல் பாகம் இங்கேயும் நடு பாகம் காசியிலும் வேர் பாகம் அலகாபாதிலும் இருப்பதாக கூறுகின்றனர். இந்த ஆல மரத்தை சாட்சியாக வைத்துக்கொண்டு தான் உங்களுக்கு மிகவும் பிடித்த பழம், காய்,ஸ்வீட் ஆகியவற்றை விட வேண்டும். உண்மையில் நமக்கு பிடித்துள்ள அகம்பாவம், கோவம், பொறாமை ஆகியவற்றை விட வேண்டும் கால போக்கில் அது மாறி விட்டது.

சரி கயா சுத்தி பார்த்தாச்சு.. இங்கேர்ந்து இருபத்தி ஐந்து கிலோமீட்டர் தூரத்துல தான் புத்தகயா இருக்கு இங்கே தான் புத்தர்க்கு போதி தந்த போதி மரம் எல்லாம் இருக்கு.. நேரமின்மை காரணமா நாங்க போகலை. சரி அடுத்து அலகாபாத் போக தயாரா இருங்க கூடிய விரைவில் சந்திக்கிறேன்.. :)

Wednesday, September 19, 2007

சூறாவளி சுற்றுப் பயணம்..வாரனாசி (2)

என்னங்க கங்கை ஆரத்தி எல்லாம் நல்லா பார்த்தீங்களா?? போய் சேர்ந்த அன்னிக்கி அது தான் பார்த்தேன்..



கங்கைக்கு சில புனிதங்கள் எல்லாம் இருக்கு..அந்த தண்ணில மாத்திரம் பாசியே பிடிக்காது அதுனால நீங்க எவ்வளவு நாட்கள் வேணும்னாலும் அதனை ஒரு பாட்டிலிலோ இல்ல சொம்பிலோ வச்சிக்கலாம். அந்த தண்ணீல குளிச்சா பாவம் எல்லாம் போயிடும்னு நம்பறாங்க..அவ்வளவு சக்தி இருக்கு அந்த தண்ணீல. எல்லா விதமான அசுத்தங்களையும் போக்கும் சக்தி அந்த ஜலத்துக்கு இருக்கு..


இந்த காட் அப்படிங்கறதுல ரெண்டே ரெண்டு காட்ல தான் இறந்து போனவர்களுக்கான காரியங்கள் செய்ய விடுவாங்க.. அது வந்து மனிகர்னிகா காட், ஹரிஷ் சந்திரா காட். இந்த இடங்களுல பிணத்தை எரிப்பதை எல்லாம் நாம கண்ணால பார்க்கலாம். இங்கே தச அச்வமேத காட் அப்படினு ஒண்ணு இருக்கு. இங்கே பத்து அஸ்வமேத யாகங்கள் பிரம்மா செய்ததாக ஐதிகம்.துளசி காட் அப்படிங்கறது வந்து துளசிதாஸுக்கு அப்புறமா பேர் வந்தது.. அதுக்கு முன்னாடி இதுக்கு லொலர்க் காட் அப்படின்னு பேர் இருந்ததா சொல்லறாங்க..இங்கே தான் துளசிதாசர் தன்னோட ராமாயணத்தை பாடினதா சொல்றாங்க. அப்படி பாடும் போது அவருடைய சுவடி கங்கையில் விழுந்துவிட்டதாம். ஆனாலும் அச்சுவடி தண்ணீல முழுகாம மேலேயே மிதந்ததாம்.



அடுத்த நாள் காலையில ஒரு படகுல எல்லாரும் ஏறி ஹசி காட்லேர்ந்து ஒவ்வொரு காட்டா பார்த்து ரசிச்சிக்கிட்டே பஞ்ச கங்கா காட் கிட்ட வந்தாச்சுஅங்கேதான் இறங்கி கங்கைல குளியல்..குளியல் போட்ட அப்புறம் அங்கேயே மேலே வேணி மாதவன் கோயில் பார்க்கலாம்.அங்கே போய் அதை பார்த்த அப்புறம் அங்கேர்ந்து கொஞ்ச தூரத்துல காசி விஸ்வநாதர் கோயில் இருக்கு.. ரொம்ப சின்னதா இருக்கு இந்த கோயில்.. அதுக்கு பக்கத்துல நந்திக்கு தனியா ஒரு கோயில் இருக்கு அங்கேர்ந்து பார்த்தா ஒரு மசூதி தெரியும். முன்னாடி அதுதான் காசி விஸ்வனாதர் கோயிலா இருந்ததாக கூறுகின்றனர்..



காசி விஸ்வனாதர் தரிசனத்துக்கு பால், தூத்பேடா,கங்கை ஜலம், வில்வ மாலை எல்லாம் எடுத்துட்டு போறாங்க.கோயிலுக்குள் ஒரு பேனா கூட எடுத்து போக முடியாத படி பாதுக்காப்பு போட்டு வச்சிருக்காங்க.. அதுனால வெறும் கைய வீசிட்டு போவது நல்லது. இல்லாட்டி அங்கே ஏதாவது கடையில தான் வச்சிட்டு போகனும்.


காசி விஸ்வநாதரை தரிசனம் செஞ்சுட்டு வந்தா அப்புறம் விசலாட்க்ஷி,அன்னப்பூரணி அப்புறம் வட விருட்ஷம்
இது எல்லாம் தரிசனம் செய்யலாம்.இந்த வட விருட்ஷம் அப்படிங்கறது என்னனா ஒரு ஆல மரம். அதோட இலை எல்லாம் கயாவிலும், தண்டு இங்கே காசிலயும், வேர் அலகாபாத்லயும் இருக்கறதா ஐதிகம். காசிக்குனு ஒரு மூணு விஷயம் ப்ரபலமா இருக்கு அது என்னனு அடுத்த பதிவுல பார்க்கலாமா??
மீண்டும் காசியில் சந்திப்போம்...

Wednesday, September 12, 2007

சூறாவளி சுற்றுப் பயணம்..வாரனாசி

சரி நல்லா ஒய்வு எடுத்தாச்சு.. ஞாயிற்றுக்கிழமை.
திங்கள் கிழமை கார்த்தால கிளம்பியாச்சு.. வாரனாசிக்கு..
காலை பதினோரு மணி அளவுல கிளம்பி சாயந்திரம் ஆறு மணிக்குப் போய் சேர்ந்தாச்சு..
அட என்னங்க ஊரு இது ...
எங்க பார்த்தாலும் ஒரே கூட்டம். நிறைய சைக்கிள் ரிக்க்ஷாவ பார்க்கலாம். ஊரும் சுத்தமா இல்லை..
இந்த ஊர்ல மிக பிரபலம்:
1) கங்கை நதி
2) காசி விஸ்வனாதர் கோயில்
3) வேணி மாதவன் கோயில்
4) அன்னப்பூரணி
5) வட விருட்ஷம்
6) ஆஞ்சநேயர் கோயில்
7) துளசி தாஸ் கோயில்


கங்கை:- கங்கைய பத்தி சொல்லனம்னா நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். அவ்வளவு அழகா இருக்கு..இங்கே நிறைய காட் அப்படினு படித்துறைகள் இருக்கு.. ஒவ்வோரு காட்டுக்கும் ஒவ்வொரு பேரு..அறுப்பத்தி நான்கு காட் இருக்கு..


இது தான் காட் அப்படிங்கறது

அசி காட், பஞ்சகங்கா காட், ப்ரயாக் காட், மணிகர்னிகா காட், ஹரிஷ்சந்திரா காட் இப்படினு பல பேரு..


இங்கே பார்க்கவேண்டியது சாயந்திரம் நடக்கும் ஆரத்தி.. ரொம்ப நல்லா இருக்கு. ஏழு மணிக்கு மேல கங்கைக்கு ஆரத்தி நடக்கிறது. அதோட சில போட்டோ எல்லாம் போட்டு இருக்கேன்.






மீண்டும் கங்கை கரையில் சந்திக்கலாம்.....

Monday, September 03, 2007

சூறாவளி சுற்றுப் பயணம்..பாகம் இரண்டு...

ஒரு வழியா 2.25க்கு ராய்ப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம்.. ஒரே பசி வேறு வயிற்றை கிள்ளியது..சரி ரயில் எத்தனை மணிக்கு எந்த ப்ளாட்பாரத்துக்கு வருதுன்னு தெரிஞ்சுக்க போனோம்.. நல்ல வேளையாக ரயில் பத்து நிமிடம் லேட்டுனு சொன்னாங்க.. சரி இன்னும் பதினைந்து நிமிடம் இருக்குனு என்னோட ரங்கு போய் அங்கே இருந்த ஓட்டலேர்ந்து ரெண்டு சாப்பாடு வாங்கிட்டு வந்தாரு.

அப்புறம் ஒரு வழியா லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கிட்டு மாடிப்படி ஏறி ப்ளாட்பார்முக்கு வருவதற்க்கும் ட்ரேயின் வருவதற்க்கும் சரியாக இருந்தது.. நல்ல ஏசில புக் பண்ணிருந்தாரு.. இடம் பார்த்து உக்கார்ந்தோம்..அப்புறம் சாப்பாட்டை தொறந்து சாப்பிட்டோம்.. சும்மா சொல்லக்கூடாது சூப்பரா இருந்துச்சி சாப்பாடு.. நாலு சப்பாத்தி, ஒரு கப் சாதம், ஒரு தால், ஒரு பன்னீர் கரேவி, வென்டைக்காய் கறி,தயிர், குலோப் ஜாமுன், அப்பளாம், ஊறுகாய் எல்லாம் அழகா பேக் பண்ணி குடுத்திருந்தாங்க. ரயில் நிலையத்தில் இவ்வளவு நல்ல சாப்பாட்டை நான் எதிர்ப்பார்க்கவில்லை..நல்லா சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தோம். அதுக்குள்ள பிலாஸ்பூர் வந்துடுச்சி..ராய்ப்பூரிலிருந்து 1.30 மணி நேரம்.. 4.30 மணிக்கு போயாச்சு. அங்கே என்னுடய கஸின் வந்திருந்தாரு எங்களை கூட்டி கொண்டுப்போக. அங்கிருந்து அவங்க வீட்டுக்கு சரியா 6 மணி நேரம் எடுக்குமாம்.
இரவு 11 மணி ஆகி விட்டது அவங்க வீட்டுக்கு போய் சேருவதற்கு. என்னுடைய கஸின் கோல் இந்தியாவில் வேலை செய்கிறார். இந்த மாதிரி ஒரு ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு ஊர். அது டவுனா?? சிட்டியா?? கிராமமா?? எதுவுமே சொல்ல முடியாத ஒரு இடம். இங்க இருக்கிறவங்க எல்லாம் அவங்க அவங்க ஊர்ல ஒருத்தருக்கு உடம்பு சரி இல்லை உடனே போகனம் அப்படினாக்கூட ஒரு நாள் வேணும். ப்ளைட்ல போகனம்னா கூட ஒன்னு ராய்ப்பூர் வரணம். இல்லட்டி வரனாசி வரணம். ரொம்ப கஷ்டம்..ரயில்னா தென்னிந்தியா வறத்துக்கு மூனு நாள் வேண்டும்.
நாங்க பயணம் செஞ்ச வழி நெடுகிலும் ஒரு பஸ்ஸைக்கூட காணம். என்னோட கஸினுக்கு ஒரே சந்தோஷம். அவங்க இங்க வந்த ஒரு பதினைந்து வருஷத்துல அவங்க வீட்டுக்கு வந்த முதல் சொந்தம் நாங்க தான். என்னங்க பண்றது.. அவ்வளவு தள்ளி இருக்கு அந்த இடம். பக்கத்துல பார்க்கறதுக்கும் ஒண்ணும் கிடையாது. என்னனா ஒரு நல்ல பிரேக். நம்ம இருக்கிற ஒரு ஒட்டமான வாழ்வை தான்டி அமைதியா ஒரு வாழ்க்கை. பி.ஏஸ்.என்.எல்லை தவிர ஒரு மோபைல் நெட்வர்க்கும் வேலை செய்யலைனு ஒரே சந்தோஷம் எனக்கு.
சரி களைப்பு நீங்க இன்னிக்கி ரெஸ்ட் எடுப்போம்.. அப்புறம் அடுத்த எடத்துக்கு போவோம் சரியா??

Tuesday, August 28, 2007

நான் மிகவும ரசித்த விளம்பரம்...

இது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் மும்பையின் போக்குவரத்து மிகுந்த சாலையில் அமைக்கப்பட்ட விளம்பரம்....








அடுத்து என்ன நடந்தது பாருங்கள்...






சில நாட்களுக்கு பிறகு....










கடைசியாக..



Monday, August 27, 2007

சூறாவளி சுற்றுப் பயணம்..பாகம் ஒன்று..


இந்தியாவின் சிலிக்கான் நகரமாம் பெங்களூரில் இருந்து சிங்கார சென்னைக்கு ஒரு நாளைக்கு ஏழு ரயில்கள் இருந்தும் வார இறுதியில் செல்ல வேண்டும் என்றால் ஒரு பதினைந்து நாளைக்கு முன்பாவாது முன்பதிவு செய்ய வேண்டும்.. அப்படி எல்லாம் முன்பதிவு செஞ்சு ஆகஸ்ட் மாசம் பத்தாம் தேதியன்று பெங்களூர் மெயிலில் சென்னைக்கு புறப்பட தயாராகினோம்.
ஒரு வழியா நம்ம ரங்கு வீட்டுக்கு வந்து.. எல்லாம் பெட்டியில எடுத்து வச்சு கண்டொன்மென்ட் ரயில் நிலையத்துக்குப் போய் ரயில் ஏறியாச்சு.
கார்த்தால அஞ்சு மணிக்கெல்லாம் சிங்கார சென்னை வந்தாச்சு..

எங்களுக்கு காலை 10.45க்கு ராய்பூருக்கு விமானம்.. அங்கிருந்து 2.30 மணிக்கு பிலாஸ்பூருக்கு ரயில்..
சரி அது தான் இவ்வளவு நேரம் இருக்கே அதுக்குள்ள நாம ராய்பூருக்கு போய் சேர்ந்திடலாம்னு ரயில் டிக்கெட் முன்பதிவு பண்ணியாச்சு..
சென்னைக்கு போய் அம்மா வீட்டுல கார்த்தால இட்லி எல்லாம் சாப்பிட்டு அம்மா சாதம் கட்டி தரேன்னு சொன்னதை பெரிய பிகு பண்ணி வேண்டாம்னு சொல்லிட்டு 8.45க்கு விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டு அங்கே கரெக்டா 9.15க்கு போய் சேர்ந்தாச்சு.


நம்ம ரங்கு சொன்னாரு ஒரு ஒரு மணி நேரத்துல நாம ராய்பூர்க்கு போயிடலாம்னு .. விமான நிலையத்துல ஒரு பெரிய குண்டு காத்துட்டு இருந்தது.. விமானம் ஒரு மணி நேரம் லேட்.. அங்கே இருந்த அம்மாக்கிட்ட இங்கேர்ந்து ராய்ப்பூர்க்கு எவ்வளவு நேரம்னு கேட்டா அது ரொம்ப நிதானமா 11.45க்கு விமானம் கிளம்பினா 2.30க்கு போய் சேர்ந்துடலாம்னு சொல்லிட்டாங்க.. அட கடவுளே.. சரின்ன்னு ஒரு வழியா 11.45க்கு கிளம்பீச்சி..12.45க்கு விசாகப்பட்டினத்துல போய் தரை இறங்கிச்சு விமானம்.. அங்கே ஒரு அரை மணி நேரம்
நின்னு நிதானமா 1.15க்கு கிளம்பி 1.50க்கு ராய்ப்பூர் போயாச்சு.. இத்தன மணி நேரம் விமானத்துல வெறும் ரெண்டு நமுத்துப்போன குக்கீஸ் குடுத்தாங்க..

இது தான் ராய்ப்பூர் விமான நிலையத்துல இருந்து ரயில் நிலையம் போகும் வழி..

ராய்ப்பூர் விமான நிலையத்துல இருந்து வெளில வந்து எவ்வளவு நேரம் ஆகும் ரயில் நிலயத்துக்குனு கேட்டா அரை மணி நேரம்னு சொல்லிட்டாங்க.அங்கேர்ந்து ஒரு டாடா சுமோல கிளம்பியாச்சு..

என்ன ரயில்ல ஏறினேனா? இல்லையான்னு அடுத்த பதிவுல பார்க்கலாமா?