Tuesday, August 28, 2007

நான் மிகவும ரசித்த விளம்பரம்...

இது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் மும்பையின் போக்குவரத்து மிகுந்த சாலையில் அமைக்கப்பட்ட விளம்பரம்....








அடுத்து என்ன நடந்தது பாருங்கள்...






சில நாட்களுக்கு பிறகு....










கடைசியாக..



Monday, August 27, 2007

சூறாவளி சுற்றுப் பயணம்..பாகம் ஒன்று..


இந்தியாவின் சிலிக்கான் நகரமாம் பெங்களூரில் இருந்து சிங்கார சென்னைக்கு ஒரு நாளைக்கு ஏழு ரயில்கள் இருந்தும் வார இறுதியில் செல்ல வேண்டும் என்றால் ஒரு பதினைந்து நாளைக்கு முன்பாவாது முன்பதிவு செய்ய வேண்டும்.. அப்படி எல்லாம் முன்பதிவு செஞ்சு ஆகஸ்ட் மாசம் பத்தாம் தேதியன்று பெங்களூர் மெயிலில் சென்னைக்கு புறப்பட தயாராகினோம்.
ஒரு வழியா நம்ம ரங்கு வீட்டுக்கு வந்து.. எல்லாம் பெட்டியில எடுத்து வச்சு கண்டொன்மென்ட் ரயில் நிலையத்துக்குப் போய் ரயில் ஏறியாச்சு.
கார்த்தால அஞ்சு மணிக்கெல்லாம் சிங்கார சென்னை வந்தாச்சு..

எங்களுக்கு காலை 10.45க்கு ராய்பூருக்கு விமானம்.. அங்கிருந்து 2.30 மணிக்கு பிலாஸ்பூருக்கு ரயில்..
சரி அது தான் இவ்வளவு நேரம் இருக்கே அதுக்குள்ள நாம ராய்பூருக்கு போய் சேர்ந்திடலாம்னு ரயில் டிக்கெட் முன்பதிவு பண்ணியாச்சு..
சென்னைக்கு போய் அம்மா வீட்டுல கார்த்தால இட்லி எல்லாம் சாப்பிட்டு அம்மா சாதம் கட்டி தரேன்னு சொன்னதை பெரிய பிகு பண்ணி வேண்டாம்னு சொல்லிட்டு 8.45க்கு விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டு அங்கே கரெக்டா 9.15க்கு போய் சேர்ந்தாச்சு.


நம்ம ரங்கு சொன்னாரு ஒரு ஒரு மணி நேரத்துல நாம ராய்பூர்க்கு போயிடலாம்னு .. விமான நிலையத்துல ஒரு பெரிய குண்டு காத்துட்டு இருந்தது.. விமானம் ஒரு மணி நேரம் லேட்.. அங்கே இருந்த அம்மாக்கிட்ட இங்கேர்ந்து ராய்ப்பூர்க்கு எவ்வளவு நேரம்னு கேட்டா அது ரொம்ப நிதானமா 11.45க்கு விமானம் கிளம்பினா 2.30க்கு போய் சேர்ந்துடலாம்னு சொல்லிட்டாங்க.. அட கடவுளே.. சரின்ன்னு ஒரு வழியா 11.45க்கு கிளம்பீச்சி..12.45க்கு விசாகப்பட்டினத்துல போய் தரை இறங்கிச்சு விமானம்.. அங்கே ஒரு அரை மணி நேரம்
நின்னு நிதானமா 1.15க்கு கிளம்பி 1.50க்கு ராய்ப்பூர் போயாச்சு.. இத்தன மணி நேரம் விமானத்துல வெறும் ரெண்டு நமுத்துப்போன குக்கீஸ் குடுத்தாங்க..

இது தான் ராய்ப்பூர் விமான நிலையத்துல இருந்து ரயில் நிலையம் போகும் வழி..

ராய்ப்பூர் விமான நிலையத்துல இருந்து வெளில வந்து எவ்வளவு நேரம் ஆகும் ரயில் நிலயத்துக்குனு கேட்டா அரை மணி நேரம்னு சொல்லிட்டாங்க.அங்கேர்ந்து ஒரு டாடா சுமோல கிளம்பியாச்சு..

என்ன ரயில்ல ஏறினேனா? இல்லையான்னு அடுத்த பதிவுல பார்க்கலாமா?

Friday, August 24, 2007

சூறாவளி சுற்றுப் பயணம்..அறிமுகம்!!!!!

எல்லாரும் எப்படி இருக்கீங்க???

நான் நல்லா இருக்கேன்.

ஒரு வாரம் சூறாவளி சுற்று பயணம் போயிட்டு வந்தேன்..

ஒரு வாரத்துல ஆறு ஊருக்கு போயிட்டு வந்தாச்சி...

ஒரு வாரம் ஊருக்கு போனதுனால வேற ஆபீஸ்ல ஒரே ஆணி சேர்ந்துப்போச்சு..
அதை எல்லாம் இன்னிக்கி ஒரு வழியா முடிச்சாச்சு..

அது தான் உங்க எல்லாருக்கும் ஒரு வணக்கம் வச்சிட்டு.. எல்லாரையும் நான் போன ஊருக்கு எல்லாம் கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்..

எல்லாரும் இந்த வார கடைசில எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கிட்டு தயாரா இருங்க.. சரியா??

எந்த இடம் எல்லாம் போக போறோம்னு தெரியனும் இல்ல??
1) மொதல்ல பெங்களூரில் இருந்து சென்னை.
2) சென்னையில் இருந்து ராய்பூர்.
3) ராய்பூரில் இருந்து பிலாஸ்பூர்
4) பிலாஸ்பூரில் இருந்து பிஷ்ரம்பூர்.
5) பிஷ்ரம்பூரில் இருந்து வாரனாஸி
6) வாரனாசியில் இருந்து கயா
7) கயாவில் இருந்து அலகாபாத்.
8) அலகாபாதில் இருந்து டெல்லி
9) டெல்லியில் இருந்து ஹரித்வார்
10) டெல்லியில் இருந்து திரும்பவும் பெங்களூர்

அதுனால எல்லாரும் தயாரா இருங்க..
சரி..அடுத்த வாரம் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அக்கா டுபுக்கு டிஸைப்பிள்!!!

Monday, August 06, 2007

இன்று ஒரு தகவல்!!!

ஷாய்முக்கு ஒரு நல்ல தகவல்!!!

Learn how to break a beer bottle with your bare hands!! Awesome party trick to show to your friends but be careful!