முதல் பகுதி இங்கே பார்க்கவும்...இப்போ பகுதி இரண்டு!!!
ஒரு பெண் உங்களிடம் மயங்க நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து!!!1) நீ இன்று மிகவும் அழகாக இருக்கிறாய் அப்படினு தினமும் சொல்லனும்
2) இந்த கலர் ரொம்ப பொருத்தமா இருக்கு உனக்கு அப்படினு எந்த கலர் போட்டுக்கிட்டாலும் சொல்லனும்.
3) நீ இப்போ எல்லாம் ஒழுங்காவே சாப்பிடுவது இல்லை (ரொம்ப இளைத்து போய்விட்டாய்)னு சொல்லனும்.
4) ஒவ்வோரு நாளும் உன் வயது குறைந்துக்கொண்டே வருகிறதுனு சொல்லனும்.
5)உன்னுடன் பேசும் போது என் கவலை எல்லாம் பஞ்சா பறந்து போகுதுனு சொல்லனும்.
ஒரு பெண்ணை ஆச்சர்யப்படுத்த செய்ய வேண்டிய ஐந்து!!1)போன் செஞ்சு அவங்க எதிர்ப்பார்க்காத தருணத்தில் நான் உன்னை காதலிக்கிரேன்னு சொல்லனும்.
2) அவங்க வேலை செய்யற ஆபீஸுக்கு அப்பப்போ பூ மற்றும் சாக்லேட் அனுப்பனும்.
3) மெழுகுவர்த்தி ஒளியில் ஒரு டின்னருக்கு கூட்டி போகனும்.
4) அவங்க நீண்ட நாளா வாங்கனம்னு இருக்கிற விஷயத்தை வாங்கி குடுத்து ஆச்சர்யபடுத்தனும்.
5) இரண்டு பேர் மட்டும் தனியாக ஊருக்கு சென்று அங்கு அவங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கவும்.
எல்லாவற்றையும் விட சுலபமான வழி நம்ம அம்பி சொல்லிட்டாரு..ப்ளாக் எழுதனுமாம்..(செய்தி தொடர்புதுறை அமைச்சராச்சே.. தட்டாதீங்க!!!)
இத பார்த்துட்டு என்னொட ரங்கமணியோட புலம்பல்கள்..போட்ட பத்து விஷயத்துக்கும்..1) இல்லாட்டி பூரி கட்டை தான் பறக்கும்.
2) எந்த கலர் போட்டாலும் ஒரு வித்தியாசமும் தெரியல. தலையெழுத்து.
3) ஆமாம் ரொம்ப இளைத்து தான் போயிட்டே.. முன்னாடி ஆல்டோ கார் வச்சி இருந்தேன்.. இப்போ மடடார் வான் வச்சி இருக்கேன்.
4) ஆமாமாம் என்னோட பாட்டியோட பார்த்தா நீ இளமையா தான் இருக்கே..
5) உன்னோட பேசறத விட எனக்கு கவலையான விஷயம் இல்லை அது தான்.
6) அவஙக எதிர்பார்க்காத தருணத்தில் அப்படினா நம்ம சுயநினைவு இழந்து இருக்கும் போதுனு அர்த்தம்.
7) அப்போ தானே அவங்க ஆபீஸ்ல இருக்கிறவங்க எல்லாம் கொஞ்சம் நம்ம கஷ்டத்தை புரிஞ்சுக்கிட்டு யாரும் கல்யாணமே பண்ணிக்க மாட்டாங்க.
8) நிறைய லைட் எல்லாம் இருந்து உன்னோட முகத்தை பார்த்தா அப்புறம் சாப்பிட்ட மாதிரி தான்.
9) என்ன பெரிய நீண்ட நாள் ஆசை.. எங்க அம்மாவ விட எல்லா தீபாவளிக்கும் அதிகமா ஜரிகை போட்ட புடவை வேணும் அது தானே?
10) இரெண்டு பேர் மாத்திரம் ஊருக்கு போகாம பின்ன என்னோட நண்பர்களை வேற கூட்டிப் போய் நான் உங்கிட்ட படற அவஸ்த்தை எல்லாம் தெரிஞ்சுக்கணுமா??
11) @ அம்பி: இதெல்லாம் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி சொல்ல கூடாதா??? நல்லா இரு!!! ம்ம்ம்ம் நான் எதுவும் கேக்கலை !!! எனக்கில்லை எனக்கில்லை!! சொக்கா!!