Monday, January 08, 2007

மும்பையில் எனது சுகமான அனுபவங்கள்!!!!

சென்ற சனிக்கிழமை ஞாயிற்று கிழமைகளில் என்னுடைய கணவரின் அலுவகத்தில் ஒரு பிரிவு உபசாரனை விழாவிற்காக பம்பாய் செல்ல வேண்டி இருந்தது!!! இது என்ன பெரிய விஷயம் இதை போய் பெருசா ப்ளாக் எழத வந்துட்டியேனு நீங்க எல்லாம் நினைக்கலாம்!!!அங்கே நடந்த பல நல்ல விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்ற நல்லெண்ணம் தானுங்கோ!!நாங்க எல்லாரும் தங்குவதர்க்காக ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு மாதத்திற்க்கு முன்பே ஏற்பாடு செய்ய பட்டிருந்தது!!நாங்க பெங்களூர்லேர்ந்து காலை 11.30மணிக்கு விமானதில் ஏறி பம்பாய் 12.45 மணிக்கு அங்கு சென்று மதியம் 1.30 மணி அளவில் ஹோட்டில் சென்று அங்கு தங்குவதாக ப்ளான்... நாங்கள் பம்பாயில் இறங்கியவுடன் அங்கு எங்களுக்காக ஹோடலில் இருந்து கார் வந்து இருந்தது.. என்னுடைய கணவரின் ஒரு சிநேகிதர் எங்களை அவருடைய வீட்டிற்க்கு அழைத்து செல்ல வந்து இருந்த காரணத்தால் ஹோடலில் இருந்து வந்த ஒட்டுனரிடம் நாங்கள் வேறு ஒரு இடத்திற்க்கு செல்வதால் அவருடன் வர இயலாது எனவும் 3.30மணி அலவில் ஹோடலுக்கு வருவோம் என்றும் சொல்லி அவரை அனுப்பிவிட்டு நண்பரின் வீட்டுக்கு சென்று உணவருந்தி விட்டு ஹோட்டலுக்கு சென்றால் வந்துது சோதனை!! எங்களை ஒரு மணி நேரம் தேவுடு காக்க வைத்து விட்டு தான் தங்குவதற்க்கு அறை குடுத்தார்கள்... கேட்டதர்க்கு அறையை சுத்தம் செய்து கொண்டிருபதாக தகவல்!!! தலைஎழுத்து!!!!சரி என்று மாலை கிளம்பி பிரிவு உபசாரணை நடக்கும் இடத்திற்க்கு சென்றோம்.. அங்கு எங்களுக்கு உணவு ஏற்பாடு செய்ய வேண்டிய இடத்தில் பார்த்தால் வேறு ஒரு அலுவலகத்தின் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது!!!ஒரு வழியாக நாங்கள் விழாவை முடித்து சாப்பாடிற்க்கு சென்றால் அங்கு தட்டுக்கள் அடுக்கி வைக்கபட்டிருந்தன!!சரின்னு சாப்பாட்டுக்கு போய் கைல பீங்கான் தட்டு எடுத்தா அதுல கருப்பு கருப்பா இருந்துச்சு.. சரின்னு அங்க இருந்த அண்ணாச்சிய என்னங்க இதுனு கேட்டா அவரு அது தட்டுல இருக்கிற டிசைன்னு சொல்லிட்டாரு!!! சரினு கைல குடுத்த தட்ட டிஸ்சு காகித்தால துடைச்சா ஒரே கருப்பு கருப்பா அழுக்கு!!!!இதுக்கு ஒரு ப்ளேட்டுக்கு ஆயிரம் ரூபாயிக்கு மேல செலவு!!!சரின்னு ரூம்முக்கு வந்து தூங்கியாச்சு!!!எல்லாத்துக்கும் கீரீடம் ஞாயிற்று கிழமை தானுங்க!!!
ஞாயிற்றுக்கிழமை காலைல மின்சாரம் இல்லை!!! பத்து இருபது நிமிடங்கள் வரவே இல்லை!! சரின்னு கிழ ரிசெப்ஷனுக்கு தொலை பேசில ஏங்க மின்சாரத்துக்கு பேக் அப் எதுவும் இல்லையானு கேட்டேன்.. ஒ!! இருக்கு அனுப்பி வைக்கிரேன்னு சொன்னாங்க!! என்ன அனுப்பி வைக்க போரீங்கனு கேட்டா மெழுகுவர்த்தினு சொன்னங்க பாருங்கா வாழ்க்கையே வெறுத்து போச்சு!!!
வாழ்க மும்பை!!! வாழ்க ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்!!!

8 comments:

Sumathi. said...

ஹாய் சுதா,

ஆக ஒரு நல்ல இனிமையான அனுபவம் கிடைச்சுது இல்லயா....!!!!

மெலட்டூர். இரா.நடராஜன் said...

ஆச்சர்யமாக இருக்கிறது! மும்பையில் அதுவும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இப்படியா! விழாவை நடத்தியவர்கள் ஏன் கண்டு கொள்ளாமல் விட்டார்கள்? புரியவில்லை. விமான பயணம் செய்து வரும் ஒரு அலுவலக அதிகாரியை இந்த அளவுக்கு மோசமாக ட்ரீட்மெண்ட் செய்ததில் எங்கோ பெரிய தவறு நடந்திருக்கிறது. நீங்கள் எப்படி சும்மா விட்டீர்கள்? காசு வாங்கிக் கொண்டு சரியான சேவையை செய்யாதவர்களை தட்டிக் கேட்க வேண்டும்.

Anonymous said...

என்னங்க...அவங்கள பிடி பிடின்னு பிடிச்சு உலுக்கி இருக்க வேண்டாமா? சும்மாவா வந்தீங்க?? பைசாவ திருப்பி குடுன்னு கேக்கலையா?

Syam said...

அது ஐந்து நட்சத்திர அந்தஸ்து உள்ள ஹோட்டலா இல்ல ஹோட்டல் பேரு பைவ் ஸ்டார் ஆ..நல்லா செக் பண்ணீங்களா....அதிலும் அந்த மின்சாரத்துக்கு பேக் அப் சூப்பரு :-)

dubukudisciple said...

ஹாய் சுமதி!!
தாங்க்ஸ் முதல் கமெண்டு போட்டதுக்கு!! இனிமையான அனுபவம் கிடைக்குதோ இல்லையொ நாம தான் பார்த்துக்கிட்டே இருக்கோமே எங்கெ எங்கெனு... ஏன்னா பதிவு போடனுமே

dubukudisciple said...

நடராஜன் வாங்க!!!
முதல் தடவை போல இருக்கு நம்ம ப்ளாக் பக்கம்... என்ன் பண்ரது நாம சும்மா போனவங்க தானே.. அது வீட்டுக்காரரோட ஆபீஸ் விஷயம்.. நாம தலையிட்டு எதுக்கு வம்பு??

dubukudisciple said...

என்ன பண்றது டுபுக்கு சார்...
நாங்க இந்தியாவுல இருக்கோம் உங்கள மாதிரியா?? லன்டன்லனா கேக்கலாம்..
அது வீட்டுக்காரரோட ஆபீஸ் விஷயம்.. நாம தலையிட்டு எதுக்கு வம்பு??

dubukudisciple said...

நாட்டாமை!!
ஏற்கனவே நொந்து நூடுல்ஸாகி எழுதி இருக்கேன்.. அதுல வேற காமடி பண்ரீங்க!!