Tuesday, January 30, 2007

தளபதி மீண்டும்!!!!



ரொம்ப நாளைக்கு அப்புறம் நேத்திக்கி கே டிவில தளபதி பார்த்தேன்!!!
என்ன நல்ல படம்!! ஒரு ஒரு காட்சியும் ரசிச்சு எடுத்து இருப்பார் மணிரத்னம்!!!
ரஜினியொட நடிப்பாகட்டும், மம்முட்டியொட நடிப்பாகட்டும், அரவிந்த சுவாமி ஆகட்டும் எல்லாரும் நல்லா நடிச்சு இருப்பாங்க!!!

தனியா காமெடி டிராக் எதுவுமே இல்லேனாலும் போர் அடிக்காத படம்...
ரஜினியோட அறிமுகமாகட்டும், மம்முட்டியோட அறிமுகமாகட்டும் எல்லாம் சூப்பர்...
ரஜினி அமரிஷ் பூரிகிட்ட தனக்கு தேவராஜ் தான் முக்கியம்னு சொல்லும் போதும்...அதுக்கு மம்முட்டி வந்து ரஜினி கிட்ட என்கிட்ட யாராவது வந்து "சூர்யா விட்டுடு நான் உன்ன பெரிய ஆளாக்கி காட்டரேன்னு சொல்லி இருந்தா நான் போயிருபேனோ என்னவோனு சொல்லும் போதும் சரி ரெண்டு பேரும் நல்லா நடிச்சு இருப்பாங்க.

அதே மாதிரி மம்முட்டி ரஜினிக்காக போய் பெண் கேட்கும் போதும்.. அது மறுக்க படும் போது மம்முட்டி அதுக்காக வருத்தபடும்போதும் , அதை ரஜினி அழகாக புரிஞ்சுக்கும் போதும் ரெண்டு பேரும் வெளுத்து வாங்கி இருப்பாங்க!!!

ஷ்ரிவித்யாவும் ஜெயசங்கரும் எல்லாருமே நல்லா நடிச்சு இருப்பாங்க!!!!
பானுப்ரியா தான் கொஞ்சம் வேஸ்ட்னு தோனும்...
அதன் மூலம் கூட இவங்க நட்போட அழத்தை அழ்காக விளக்கி இருப்பார்!!!
இளையராஜாவோட இசை சொல்லவே வேண்டாம்.. எப்பொழுதும் போல சூப்பர்...
கடைசி காட்சில கூட சூப்பர் ஸ்டார் சூப்பர் நடிப்பு!!!!
நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுத்த படம்....
மணிரத்னம் நினைத்தால் கூட இப்படி ஒரு படத்தை திரும்ப தர முடியுமா அப்படிங்கரது சந்தேகம் தான்!!!!

16 comments:

sumathi said...

ஹாய் சுதா,

ஆமாம், நான் கூட பாத்தேன். அதுல
ரஜினி தன் அம்மானு தெரிஞ்சதுக்கு அப்பறம் அவங்களை கோவில்ல பாக்கும் போதும் சரி, அவங்க தலையிலயிருந்து விழுந்த அந்த ஒரு மல்லிகை பூவை எடுத்து கையில வச்சிக்குற அந்த சீனும் ரொம்பவே பிடிக்கும் எனக்கு.

ரவி said...

சூப்பர் ஸ்டார் படத்தை எப்போ பார்த்தாலும் ரசிக்கலாம்...."தில்லு முல்லு" பார்த்திருக்கீங்களா ?

Hariharan # 03985177737685368452 said...

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு தியேட்டர்ல பார்த்தாதான் சூப்பரா ரசிக்கலாம். சின்னத்தாயவள் பாட்டுக்கு ஒரு மல்லிகைப்பூவை சினிமாஸ்கோப் ஸ்க்ரீன் முழுக்க வர்றா மாதிரியான க்ளோசப் காட்சிகள்ன்னு.

சென்னை ஆல்பட் தியேட்டர்ல பார்த்தது. ஜி.வீ ரஜினிக்கு ஒருகோடி சம்பளம் தந்த படம்.

ம்யூசிக் ஸ்பெஷல் ரெக்கார்டிங்குக்கு நெதர்லாண்ட்ஸ் பிலிப்ஸ் கம்பெனிகிட்ட போனப்ப இளையராஜா செய்திருந்த ரெக்கார்டிங்கை கூடுதலா மேம்படுத்த வழியில்லைன்னு சொன்னாங்கன்னு ஜி.வியே ஒரு இண்டர்வியூலே சொன்னார்.

ராக்கம்மா கையத்தட்டு பாட்டுக்கு 150 வயலின் யூஸ் பண்ணாங்களாம். மூணு ரோவா வயலினிஸ்டை வச்சு. ஒவ்வொரு வரிசையிலும் வயலின்கள் 20, 30, 40 வயசான வயலின்கள் பயன்படுத்தி ரெக்கார்டிங் இளையராஜா செய்தார் தளபதிக்காக!

மணி ரத்னத்தோட ரத்னச் சுருக்கமான டயலாக்குகள் ரொம்பப் பிரபலமானது

நல்ல படம். 16 வருஷம் ஓடிருச்சு ஜஸ்ட் லைக் தட் :-)

dubukudisciple said...

ஹாய் சுமதி!!!
நீங்க சொல்றது ரொம்ப சரி!!! இன்னும் எத்தனையோ காட்சிகள் இருக்கின்றன படத்தில் என்னால் விமர்சனம் செய்ய படாதவை

dubukudisciple said...

ஹாய் செந்தழல் ரவி!!!
முதல் வருகைக்கு நன்றி!!
நீங்க சொல்றதும் ரொம்ப சரி!!! எத்தனை தடவை பார்ததாலும் அலுக்காது ரஜினியுடைய படங்கள்!!! தில்லு முல்லு, நெற்றி கண், நல்லவனுக்கு நல்லவன் இப்படி நிறைய இருக்கு லிஸ்ட்

Naufal MQ said...

படத்தில் டாப், பின்னனியில் இழையோடும் அந்த 'சின்னத் தாயவள்' இசைதான். ராசா! நீ நல்லாயிருய்யா!!

நாமக்கல் சிபி said...

தளபதி என்னோட ஃபேவரைட் லிஸ்டுல எப்பவும் இருக்குற படம்!

"காட்டுக் குயிலு மனசுக்குள்ள" பாட்டு கலக்கலா இருக்கும்!

நாமக்கல் சிபி said...

//"தளபதி மீண்டும்!!!!" //

தலைப்பைப் பார்த்துக் கொஞ்சம் குழம்பிட்டேன்!

Unknown said...

தலைவர் படத்தைப் பற்றி எழுதியிருக்கீங்க... வாழ்த்துக்கள்..

Anonymous said...

//மணிரத்னம் நினைத்தால் கூட இப்படி ஒரு படத்தை திரும்ப தர முடியுமா அப்படிங்கரது சந்தேகம் தான்//

unmai thaan ejamaan! kaatu kuyilu paatula ilayarajaa pattaya kilappi iruppar. photography also summa nachunu irukkum.

Syam said...

I too agree SS padatha evalo time vena paarkalaam... Batsha vum ithula onnu :-)

Arunkumar said...

மணிரத்னம் படத்த எப்போ பாத்தாலும் இனிக்கும். அதுவும் இது தலைவர் நடிச்சது. சூப்பரான படம். அந்த நாள் ஞாபகத்த நெஞ்சில வர வச்சிட்டீங்க :)

ஜி said...

பழைய படத்துக்கு புது விமர்சனம்.... சூப்பர்... தல படம்னா தல படம்தான்...

இதுல ஸ்பெசாலிட்டியே ரெண்டு தலைங்க கை கோத்துக்கிட்டதுதான்... (இன்னொரு தலை மம்மூட்டி இல்ல...)

குசும்பன் said...

ஹூம் இப்பதான் "மீண்டும் அன்பே சிவம்"ன்னு விமர்சனம் போட்டு பெருசுங்க கண்ணு கலங்க்கிட்டு இருந்தாங்க. இப்ப "மீண்டும் தளபதி" ஸீஸன் போலருக்கு...நடத்துங்க...

அவனவன் "பொல்லாதவன்", "மோசமானவன்" ரேஞ்சுக்கு ஆராய்ச்சி நடத்தினா நீங்க தொல்பொருள் ஆராய்ச்சிலேயே மூழ்கியிருக்கீங்க! வாழ்க ! :-))))))

butterfly Surya said...

மணிரத்னம் நீங்கள் கலைஞனா, திருடனா?



அவர் மௌனராகம், இதயக்கோயில், பகல்நிலவு என்று எடுத்துக்கொண்டிருந்த வரை ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் அரசியல் சினிமா எடுக்கிறேன் என்று ஆரம்பித்து வாந்திதான் எடுத்தார். காஷ்மீர்ப்பிரச்சினை, வடகிழக்கு மாநிலங்களின் தேசிய இனப்பிரச்சினைகள் என ஒரு இழவும் தெரியாது ஏதாவதொன்றை எடுத்துத் தள்ளி விமர்சகர்களிடம் நார்நாராய்க் கிழிபட்டார்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க மணிரத்னம் ஏதாவது சொந்தமாய் யோசித்துப் படமெடுத்திருக்கிறாரா என்றால் அதுவும் கிடையாது. அவர் சுட்ட இடங்கள்.

நாயகன் - காட்பாதர்
திருடா திருடா - கிளிப்ஹேங்கர்
ரோஜா - ஒருமாதிரியாக ராமாயணத்தை உல்டா செய்தது.
தளபதி - மகாபாரத உல்டா
பம்பாய் - ஓட்டல் ருவாண்டாவை மோசமாக உல்டா அடித்தது.
ஆயத எழுத்து - அகிரோ குரோஷாவைக் கேவலப்படுத்தியது.

நாயகனில் 'காட்பாதர்' படத்தில் மார்லின்பிராண்டோ தலையைச் சொறிவதைக்கூட காப்பியடித்து கமல் சொறிவார். அனேகமாக மணியின் படங்களிலேயே தேறுவது 'அஞ்சலி' மட்டும்தான். (ஒருவேளை அது திருடப்பட்ட படத்தை நான் பார்க்காமல் கூட இருந்திருக்கலாம்)

இப்போது மணிரத்னம் 'குரு' என்று ஒரு படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதனுடைய கதையைச் சமீபத்தில் (2006ல்தான்) ஒரு பத்திரிகையில் படிக்க நேர்ந்தது. அந்த கதை வேறு ஒன்றுமில்லை. ஆர்சன் வெல்ஸ் என்னும் இயக்குனரால் எடுக்கப்பட்ட 'சிட்டிசன் கேன்' என்னும் படத்தின் அதே கதைதான்.முடிந்தால் அந்த படத்தின் டி.வி.டியைப் பாருங்கள். மணிரத்னம் அதைச் சுடமாட்டார் என்று (தைரியம் இருந்தால்) பந்தயம் கட்டுங்கள். குரு வெளியாகும்வரை பொறுத்திருங்கள்.ஒருவேளை அப்படி இல்லாமல் இருந்தால் பந்தயம் கட்டுபவர்களுக்கு மணிரத்னத்தால் காப்பியடிக்கப்பட்ட மேற்கத்தியப்படங்களின் டி.வி.டிக்கள் இலவசமாக வழங்கப்படும்.

இந்தியாவில் காப்பியடிப்பவன் தான் கலைஞன் என்றால் கலைஞனை என்ன சொல்வார்கள்?

thanx: http://sugunadiwakar.blogspot.com/2006/12/blog-post_27.html

Surya
Dubai

Anonymous said...

thalapathi padatha ippo enathukku nee vimarsanam panra. unnai ellam entha naai blog open panna solluchu... A** H***s