
என் அயர்ச்சியின் போது
உன் மடியில் என் தலை சாய்த்தேன்
என் அயர்ச்சி என்னை விட்டு
காணாமல் போனது!!!

என் கண்களில் சோகம் குடி கொள்ளும் போது
உன் கண்களால் என் கண்களை வருடினாய்
என் கண்களில் மகிழ்ச்சி
தாண்டவமாடியது!!!

வேலை பளுவினால் என் கைகள் வலித்த போது
உன் கைகளால் என் கைகளை தடவினாய்
என் கைகளின் வலி
உன்னுடையதானது!!!

யார் சொன்னது தாயால் மட்டுமே
தன்னலமற்ற அன்பை தர முடியும் என்று!!
என் அன்பாலும் தர முடியும்
தன்னலமற்ற அன்பை

இந்த தன்னலமற்ற அன்பினை
அனுபவிக்க இன்னும் எத்தனை
ஜன்மங்கள் வேண்டுமானலும் அடைவேன்
அன்பே உன்னை என் கணவராய்!!
13 comments:
//எத்தனை
ஜன்மங்கள் வேண்டுமானலும் அடைவேன்
அன்பே உன்னை என் கணவராய்!!
//
ROTFL :) so futurelayum avara freeya vudarathaa illa! :p
btw, nice kavithais. :)
ஹாய் சுதா,
//என் அன்பாலும் தர முடியும்
தன்னலமற்ற அன்பை..//
அப்பாபாபாபாபாபாப்பா... பின்னிட்டீங்க...
//எத்தனை
ஜன்மங்கள் வேண்டுமானலும் அடைவேன்
அன்பே உன்னை என் கணவராய்!!//
இதுக்கு நான் அம்பியோட சேந்துட்டேன்பா....
சூப்பரா எழுதறீங்க....ம்ம்ம்ம்ம்ம்ம்...
எவ்வளவு பீலிங்கோட கவிஜ போட்டுக்கீரேன்!!! என்னா காமெடி இது அம்பி???
அஹா... அஹா... ஆஹா..
இந்த மாதிரி கவிதை எழுதுறவங்கள நாம் என்னிக்கும் தட்டிக் கொடுக்கணும். இருங்க... உங்க நேம நம்ம லிஸ்ட்ல ஆட் பண்ணிட்டு வாறேன்...
ஒரே கவிதயா போட்டு தள்றீங்க....என்ன பட்டு புடவைக்கு பிளான் போட்டு இருக்கீங்களா :-)
கவிதை சூப்பருங்க. அதுக்கு படங்களும் சூப்பர்.
//
//என் அன்பாலும் தர முடியும்
தன்னலமற்ற அன்பை..//
//
கலக்கிட்டீங்க டுபுக்குடிசைப்பில்
@Ambi:
//so futurelayum avara freeya vudarathaa illa! :p//
LOL!konja naaldhan,appuram idhae dialogue unga veetla kaetkum.
அருமையா எழுதியிருக்கீங்க DD.உண்மையான உணர்ச்சிகள்.அம்பி வீட்டிலேயும் இதேதான் நடக்கும்.அப்போ என் சார்பாவும் சேர்த்து வைத்து கலாட்டா பண்னுங்கோ அவங்களை.
ஜி!!
தாங்க்ஸ் !!! உங்க ப்ளாக்ல என்னோட பெயர சேர்த்துக்கறேனு சொன்னதுக்கு!!!
ச்யாம்!!!
ஹி ஹி ஹி!!!
இந்த பதிலிலேயே புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்!!!
அருண்!!
உங்க கருத்துகளுக்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
அருண்!!
ஏதோ இப்பவாவது பொய் இல்லனு ஒத்துக்கிட்டீங்களே ...
சரியா சொன்னீங்க ... SKM!!!!
Post a Comment