Wednesday, November 14, 2007

சூறாவளி சுற்று பயணம் - அலகாபாத்

கயா எல்லாம் சுத்தி பார்த்தாச்சு.. புத்த கயா பார்க்க நேரமின்மை காரணமா அங்கேர்ந்து ரயில்ல அலகாபாத் வந்தாச்சு.. அலகாபாத்ல நிறைய இடங்கள் இருக்கு சுத்தி பார்க்க.. ஆனந்த் பவன், ஹனுமான் மந்திர், காளி கோவில் இப்படி நிறைய இருக்கு.. போய் சேர்ந்த அன்னிக்கி ரெஸ்ட். என்னா ரயில்ல போய் சேரும் போது இராத்திரி ஆகிடிச்சி.. அதனால போய் தூங்கிட்டு காலை ஏழு மணிக்கு எல்லாம் ரெடி ஆயாச்சு. அங்கே திருமதிகள் எல்லாம் வேணி தானம் அப்படின்னு ஒன்னு பண்றாங்க...



அது என்னனா தம்பதிகள் ரெண்டு பேரும் சேர்ந்து உக்கார்ந்து எனக்கு தெரிஞ்சோ தெரியாமலோ என்னோட கனவிலோ நினைவிலோ உனக்கு துரோகம் செஞ்சு இருந்தா அதை எல்லாம் இன்னியோட இந்த திரிவேணி சங்கமத்துல கரைசிக்கிரேன்.. இனிமே அந்த மாதிரி தவறுகள் செய்ய மாட்டேன் அப்படின்னு பூஜை செய்து திரிவேணி சங்கமத்துக்கு போய் அங்கே திருவாளர் திருமதிக்கி தலைக்கு பின்னல் போட்டு கடைசில கொஞ்சமா முடியை வெட்டி சங்கமத்துல போடணும். அது மட்டும் இல்லாம பூஜை செய்து சங்கமதுல குளிக்கும்போது புது புடவை கட்டிக்கணும் அதை நமக்கு பூஜை செய்றவங்களுக்கு தானமா குடுத்துட்டு வரணும். இங்கேயும் இறந்து போனவங்களுக்கு திதி குடுக்கறாங்க... கங்கை, சரஸ்வதி, யமுனா ஆகிய மூணு நதி சங்கமம் ஆகிற இடம் தான் திரிவேணி சங்கமம். கங்கையும், யமுனையும் தான் கண்ணுக்கு தெரியுது ஆனா சரஸ்வதி தெரிவது இல்ல.. ஏன்னா அது கண்ணுக்கு தெரியாம கீழ ஓடுவதாக ஐதீகம். நம்ம ஜடைல மூணு கால்கள் போட்டு பின்னல் போட்டாலும் ரெண்டு தான் தெரியும்.. அதுப்போல ....

சரி நம்ம திரிவேணி சங்கமத்துல குளிச்சாச்சு.... அங்கேர்ந்து வெளில வந்தவுடன் ஒரு ஹனுமான் கோவில் இருக்கு. முழுக்க தரைல செதுக்கினது சஞ்சீவி மலைய தூக்கிட்டு போகற மாதிரி.. அது எல்லாம் பார்த்துட்டு போய் சாப்டுட்டு மாலைல ஆனந்த பவன்..



இங்கே தான் நேருஜி அப்புறம் இந்திர காந்தி ரெண்டு பேரும் பிறந்தாங்க.. நேருஜி வளர்ந்த வீடு வாழ்ந்த வீடு ஒரு சின்ன டாகுமெண்டரி பிலிம் காட்றாங்க. அதுலேர்ந்து கொஞ்ச தூரத்துல துளசிதாசோட கோவில் அப்புறம் படே ஹனுமான் மந்திர், ஒரு தேவி கோவில் இருக்கு அலகாபாத்ல பார்க்க..




இது எல்லாம் சுத்தி பார்த்துட்டு நாம அடுத்ததா தலைநகர் டெல்லிக்கு பயணம் செய்ய போறோம்.. சரியா... மீண்டும் சந்திக்கலாம் டெல்லில ....

14 comments:

Sumathi. said...

hai DD,

Haiyaa naan thaan firstu.naan thaan first.

Dubukku said...

Kalakala suthareenga pola. Nice photos.

Anandha bhavan -nu kettaudane southindian hotelonnu nenaichen cha...:)

Dreamzz said...

jollya niraiya idam pathuteenga! superu!

தி. ரா. ச.(T.R.C.) said...

akka kasile ennathai vittu vantheenka? pakkathu veettu aalota
aappukaliyaa?

ambi said...

படம் எல்லாம் நல்லா வந்ருக்கு.

//நம்ம ஜடைல மூணு கால்கள் போட்டு பின்னல் போட்டாலும் ரெண்டு தான் தெரியும்//

அடடா! என்ன ஒரு தத்துவம், நோட் பண்ணிக்கறேன். :p

dubukudisciple said...

Haiyaa naan thaan firstu.naan thaan first.//
வாங்க சுமதி நீங்க தான் பர்ஸ்ட்

dubukudisciple said...

வாங்க குரு ரெம்ப நாள் ஆச்சு நம்ம கடை பக்கம் வந்து.. உடம்பு எப்படி இருக்கு இப்போ???

dubukudisciple said...

jollya niraiya idam pathuteenga! superu!///
ஜாலியா இல்ல அவசர அவசரமா பார்த்தேன்

dubukudisciple said...

akka kasile ennathai vittu vantheenka? pakkathu veettu aalota
aappukaliyaa?///
என்னங்க உங்களுக்கும் அக்காவா இது எல்லாம் ரெம்ப ஓவர் சொல்லிட்டேன்...
காசில இல்ல கயால தான் விடனும்.. எனக்கு மாமனார் இருகர்த்துனால அவரு விட்ட போதுமாம் நான் விட வேண்டாம்னு சொல்லிடாங்க.. :)

dubukudisciple said...

யக்கா உங்க புண்ணியத்துல அலகாபாத்தை மீண்டும் ஒரு முறை சுத்தி பார்த்தாச்சு :) ஆனந்த பவன் நாங்க போயிருந்த போது திறக்கல ஏதோ ஒரு வாரநாளில் திறக்க மாட்டாங்க அது என்னிக்குன்னு மறந்துப்போச்சு.///
தாங்க்ஸ் வேதா..

dubukudisciple said...

படம் எல்லாம் நல்லா வந்ருக்கு.
////
வாங்க வாங்க பாதை மாறி வந்துடீங்களா ???

dubukudisciple said...

படம் எல்லாம் நல்லா வந்ருக்கு. //
தாங்க்ஸ் அம்பி..

நாகை சிவா said...

படம் ஷோக்கீதே :)

சரி சரி நானும் டில்லிக்கு போறேன்...டில்லிக்கு போறேன்

மெளலி (மதுரையம்பதி) said...

//ஏன்னா அது கண்ணுக்கு தெரியாம கீழ ஓடுவதாக ஐதீகம். நம்ம ஜடைல மூணு கால்கள் போட்டு பின்னல் போட்டாலும் ரெண்டு தான் தெரியும்.. அதுப்போல ....//

அட, அட....கலக்கிட்டீங்க மேடம்.