Monday, September 03, 2007

சூறாவளி சுற்றுப் பயணம்..பாகம் இரண்டு...

ஒரு வழியா 2.25க்கு ராய்ப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம்.. ஒரே பசி வேறு வயிற்றை கிள்ளியது..சரி ரயில் எத்தனை மணிக்கு எந்த ப்ளாட்பாரத்துக்கு வருதுன்னு தெரிஞ்சுக்க போனோம்.. நல்ல வேளையாக ரயில் பத்து நிமிடம் லேட்டுனு சொன்னாங்க.. சரி இன்னும் பதினைந்து நிமிடம் இருக்குனு என்னோட ரங்கு போய் அங்கே இருந்த ஓட்டலேர்ந்து ரெண்டு சாப்பாடு வாங்கிட்டு வந்தாரு.

அப்புறம் ஒரு வழியா லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கிட்டு மாடிப்படி ஏறி ப்ளாட்பார்முக்கு வருவதற்க்கும் ட்ரேயின் வருவதற்க்கும் சரியாக இருந்தது.. நல்ல ஏசில புக் பண்ணிருந்தாரு.. இடம் பார்த்து உக்கார்ந்தோம்..அப்புறம் சாப்பாட்டை தொறந்து சாப்பிட்டோம்.. சும்மா சொல்லக்கூடாது சூப்பரா இருந்துச்சி சாப்பாடு.. நாலு சப்பாத்தி, ஒரு கப் சாதம், ஒரு தால், ஒரு பன்னீர் கரேவி, வென்டைக்காய் கறி,தயிர், குலோப் ஜாமுன், அப்பளாம், ஊறுகாய் எல்லாம் அழகா பேக் பண்ணி குடுத்திருந்தாங்க. ரயில் நிலையத்தில் இவ்வளவு நல்ல சாப்பாட்டை நான் எதிர்ப்பார்க்கவில்லை..நல்லா சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தோம். அதுக்குள்ள பிலாஸ்பூர் வந்துடுச்சி..ராய்ப்பூரிலிருந்து 1.30 மணி நேரம்.. 4.30 மணிக்கு போயாச்சு. அங்கே என்னுடய கஸின் வந்திருந்தாரு எங்களை கூட்டி கொண்டுப்போக. அங்கிருந்து அவங்க வீட்டுக்கு சரியா 6 மணி நேரம் எடுக்குமாம்.
இரவு 11 மணி ஆகி விட்டது அவங்க வீட்டுக்கு போய் சேருவதற்கு. என்னுடைய கஸின் கோல் இந்தியாவில் வேலை செய்கிறார். இந்த மாதிரி ஒரு ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு ஊர். அது டவுனா?? சிட்டியா?? கிராமமா?? எதுவுமே சொல்ல முடியாத ஒரு இடம். இங்க இருக்கிறவங்க எல்லாம் அவங்க அவங்க ஊர்ல ஒருத்தருக்கு உடம்பு சரி இல்லை உடனே போகனம் அப்படினாக்கூட ஒரு நாள் வேணும். ப்ளைட்ல போகனம்னா கூட ஒன்னு ராய்ப்பூர் வரணம். இல்லட்டி வரனாசி வரணம். ரொம்ப கஷ்டம்..ரயில்னா தென்னிந்தியா வறத்துக்கு மூனு நாள் வேண்டும்.
நாங்க பயணம் செஞ்ச வழி நெடுகிலும் ஒரு பஸ்ஸைக்கூட காணம். என்னோட கஸினுக்கு ஒரே சந்தோஷம். அவங்க இங்க வந்த ஒரு பதினைந்து வருஷத்துல அவங்க வீட்டுக்கு வந்த முதல் சொந்தம் நாங்க தான். என்னங்க பண்றது.. அவ்வளவு தள்ளி இருக்கு அந்த இடம். பக்கத்துல பார்க்கறதுக்கும் ஒண்ணும் கிடையாது. என்னனா ஒரு நல்ல பிரேக். நம்ம இருக்கிற ஒரு ஒட்டமான வாழ்வை தான்டி அமைதியா ஒரு வாழ்க்கை. பி.ஏஸ்.என்.எல்லை தவிர ஒரு மோபைல் நெட்வர்க்கும் வேலை செய்யலைனு ஒரே சந்தோஷம் எனக்கு.
சரி களைப்பு நீங்க இன்னிக்கி ரெஸ்ட் எடுப்போம்.. அப்புறம் அடுத்த எடத்துக்கு போவோம் சரியா??

15 comments:

Sumathi. said...

ஹாய் சுதா,

//நல்ல வேளையாக ரயில் பத்து நிமிடம் லேட்டுனு சொன்னாங்க..//

அட, இது பரவாயில்லையே.. நான் இது வரைக்கும் போனதுல ஒரு நாள் கூட தப்பி தவறி கூட ரைட் டைம்க்கு வந்ததும் இல்ல போனதும் இல்ல...

Sumathi. said...

ஹாய் சுதா

//அங்கே இருந்த ஓட்டலேர்ந்து ரெண்டு சாப்பாடு வாங்கிட்டு வந்தாரு.//

அதானே, ரயில்வே கேண்டீல இருந்து வாங்கியிருந்தால தெரியும் லட்சணம்...

Sumathi. said...

ஹாய் சுதா,

//நாலு சப்பாத்தி, ஒரு கப் சாதம், ஒரு தால், ஒரு பன்னீர் கரேவி, வென்டைக்காய் கறி,தயிர், குலோப் ஜாமுன், அப்பளாம், ஊறுகாய் எல்லாம் அழகா பேக் பண்ணி//

என்னாது ஜாமுனா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அந்த ஹோட்டல் வாழ்க...

Sumathi. said...

ஹாய் சுதா,

//பி.ஏஸ்.என்.எல்லை தவிர ஒரு மோபைல் நெட்வர்க்கும் வேலை செய்யலைனு ஒரே சந்தோஷம் எனக்கு.//

அப்போ நீங்க வேறயா? அதான்...

Sumathi. said...

ஹாய்

ஒரு 5 போட்டாச்சு....அப்பாலிக்க வரேன்...

Dreamzz said...

//நாங்க பயணம் செஞ்ச வழி நெடுகிலும் ஒரு பஸ்ஸைக்கூட காணம். என்னோட கஸினுக்கு ஒரே சந்தோஷம். அவங்க இங்க வந்த ஒரு பதினைந்து வருஷத்துல அவங்க வீட்டுக்கு வந்த முதல் சொந்தம் நாங்க தான். என்னங்க பண்றது.. அவ்வளவு தள்ளி இருக்கு அந்த இடம்//
ஆஹா! நல்ல இடம் :)

Dreamzz said...

எப்படியோ ட்ரெயின்ன பிடிச்சுடீங்க :)

My days(Gops) said...

//ஒரு வழியா 2.25க்கு ராய்ப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம்//

ஏன் அங்க ரெண்டு வழி இல்லையா?

My days(Gops) said...

// நல்ல வேளையாக ரயில் பத்து நிமிடம் லேட்டுனு சொன்னாங்க.. //

அவ்வளவு தானா? வாழ்க லல்லு...

My days(Gops) said...

//ரயில் நிலையத்தில் இவ்வளவு நல்ல சாப்பாட்டை நான் எதிர்ப்பார்க்கவில்லை..//

ஹி ஹி ஒருவேளை அவரு அந்நியன் படம் பார்த்து இருப்பாரு போல..

My days(Gops) said...

//ரயில்னா தென்னிந்தியா வறத்துக்கு மூனு நாள் வேண்டும்.
//

ரொம்பவே ஒதுக்கு புறத்துக்கு போயிட்டாரு போல,

அந்த ஊரு போட்டோ இருந்தா காட்டுங்கள்

My days(Gops) said...

//சரி களைப்பு நீங்க இன்னிக்கி ரெஸ்ட் எடுப்போம்.. அப்புறம் அடுத்த எடத்துக்கு போவோம் சரியா?? //

சரிங்க அக்கா..

My days(Gops) said...

13 போட்டாச்சி

Ms Congeniality said...

enna look aye maathiteenga pola?nalla iruku :)

cheena (சீனா) said...

சுற்றுப் பயணம் சென்றால் பயணக் கட்டுரை எழுதுவது பள்ளியில் தான் என்று நினைத்தேன். இங்குமா - எப்படியாயினும் சுவாரசியமாக இருந்தது