
இந்தியாவின் சிலிக்கான் நகரமாம் பெங்களூரில் இருந்து சிங்கார சென்னைக்கு ஒரு நாளைக்கு ஏழு ரயில்கள் இருந்தும் வார இறுதியில் செல்ல வேண்டும் என்றால் ஒரு பதினைந்து நாளைக்கு முன்பாவாது முன்பதிவு செய்ய வேண்டும்.. அப்படி எல்லாம் முன்பதிவு செஞ்சு ஆகஸ்ட் மாசம் பத்தாம் தேதியன்று பெங்களூர் மெயிலில் சென்னைக்கு புறப்பட தயாராகினோம்.
ஒரு வழியா நம்ம ரங்கு வீட்டுக்கு வந்து.. எல்லாம் பெட்டியில எடுத்து வச்சு கண்டொன்மென்ட் ரயில் நிலையத்துக்குப் போய் ரயில் ஏறியாச்சு.
கார்த்தால அஞ்சு மணிக்கெல்லாம் சிங்கார சென்னை வந்தாச்சு..

எங்களுக்கு காலை 10.45க்கு ராய்பூருக்கு விமானம்.. அங்கிருந்து 2.30 மணிக்கு பிலாஸ்பூருக்கு ரயில்..
சரி அது தான் இவ்வளவு நேரம் இருக்கே அதுக்குள்ள நாம ராய்பூருக்கு போய் சேர்ந்திடலாம்னு ரயில் டிக்கெட் முன்பதிவு பண்ணியாச்சு..
சென்னைக்கு போய் அம்மா வீட்டுல கார்த்தால இட்லி எல்லாம் சாப்பிட்டு அம்மா சாதம் கட்டி தரேன்னு சொன்னதை பெரிய பிகு பண்ணி வேண்டாம்னு சொல்லிட்டு 8.45க்கு விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டு அங்கே கரெக்டா 9.15க்கு போய் சேர்ந்தாச்சு.

நம்ம ரங்கு சொன்னாரு ஒரு ஒரு மணி நேரத்துல நாம ராய்பூர்க்கு போயிடலாம்னு .. விமான நிலையத்துல ஒரு பெரிய குண்டு காத்துட்டு இருந்தது.. விமானம் ஒரு மணி நேரம் லேட்.. அங்கே இருந்த அம்மாக்கிட்ட இங்கேர்ந்து ராய்ப்பூர்க்கு எவ்வளவு நேரம்னு கேட்டா அது ரொம்ப நிதானமா 11.45க்கு விமானம் கிளம்பினா 2.30க்கு போய் சேர்ந்துடலாம்னு சொல்லிட்டாங்க.. அட கடவுளே.. சரின்ன்னு ஒரு வழியா 11.45க்கு கிளம்பீச்சி..12.45க்கு விசாகப்பட்டினத்துல போய் தரை இறங்கிச்சு விமானம்.. அங்கே ஒரு அரை மணி நேரம்
நின்னு நிதானமா 1.15க்கு கிளம்பி 1.50க்கு ராய்ப்பூர் போயாச்சு.. இத்தன மணி நேரம் விமானத்துல வெறும் ரெண்டு நமுத்துப்போன குக்கீஸ் குடுத்தாங்க..

இது தான் ராய்ப்பூர் விமான நிலையத்துல இருந்து ரயில் நிலையம் போகும் வழி..
ராய்ப்பூர் விமான நிலையத்துல இருந்து வெளில வந்து எவ்வளவு நேரம் ஆகும் ரயில் நிலயத்துக்குனு கேட்டா அரை மணி நேரம்னு சொல்லிட்டாங்க.அங்கேர்ந்து ஒரு டாடா சுமோல கிளம்பியாச்சு..
என்ன ரயில்ல ஏறினேனா? இல்லையான்னு அடுத்த பதிவுல பார்க்கலாமா?
14 comments:
யக்கா.. கதை சூப்பரு... செம விருவிருப்பா இருக்கு....
// இத்தன மணி நேரம் விமானத்துல வெறும் ரெண்டு நமுத்துப்போன குக்கீஸ் குடுத்தாங்க..//
அதயும் வேணாம்னா சொன்னீங்க!!??
//என்ன ரயில்ல ஏறினேனா? இல்லையான்னு அடுத்த பதிவுல பார்க்கலாமா? //
டென்சனாகீது... சீக்கிரமா சொல்லுங்கக்கா...
//என்ன ரயில்ல ஏறினேனா? இல்லையான்னு அடுத்த பதிவுல பார்க்கலாமா? //
இது என்ன மெகா தொடரா?
ஹாய் சுதா,
//விமானத்துல வெறும் ரெண்டு நமுத்துப்போன குக்கீஸ் குடுத்தாங்க..//
அக்கா ரொம்ப தாமாசு...
ஹாய் சுதா,
@ d4deepa..
//இது என்ன மெகா தொடரா?//
அதானே.. சரியா தான் கேட்டு இருக்கீங்க...
k4k
vanga vanga.. thankes...
அதயும் வேணாம்னா சொன்னீங்க!!?? ///
iruntha pasikum edayum vendamnu solra nilamaila naan irukala :))
டென்சனாகீது... சீக்கிரமா சொல்லுங்கக்கா///
sollama enga poga poren
இது என்ன மெகா தொடரா? ///
pinna pathu naal kadaiyache.. eppadi oru postla mudikarthu
அக்கா ரொம்ப தாமாசு... ///
enaku vayatherichal..ungaluku thamasa??? :(
நல்லா இருக்கு பதிவு! :) அடுத்த பாகம் சீக்கிரம்!
//விமான நிலையத்துல ஒரு பெரிய குண்டு காத்துட்டு இருந்தது.. விமானம் ஒரு மணி நேரம் லேட்..//
நம்ம ஊருல என்னிக்கு பஸ்,ரயில்,விமானம் எல்லாம் சரியான நேரத்துல கிளம்பி இருக்கு????
cha naan kuda vimana nilayam bomb scarenu builduponu ennachen..seekram part 2 podunga
Post a Comment