அலகாபாத்லேர்ந்து ராத்திரி ரயில் ஏறி கார்த்தால ஏழு மணிக்கு டில்லி போய் சேர்ந்துடும்னு சொன்னாங்க... ஆனா கார்த்தால ஏழு மணிக்கு சொல்றாங்க.. மதியம் ஒரு பன்னிரெண்டு மணி ஆகிடும்னு சாதாரணமா சொல்றாங்க.. என்ன கொடுமை இது பிகர பார்த்த ஏமாந்த சிங்கம்லே ஏஸ்!!!! சரின்னு ரயில்ல கிடைச்ச பிரட் சாப்டுட்டு மதியம் சூப்பரா தலைநகரத்துக்கு வந்தாச்சு... வெயில் ஜாஸ்தியா இருந்துச்சு..
அங்கேர்ந்து ஹோடல்லுக்கு போய் நல்ல குளிச்சி கீழ போய் அன்னபூர்ணா அப்படின்னு ஒரு ஹோட்டல்ல சாப்டோம் சும்மா சொல்ல கூடாது சூப்பரா இருந்துது சாப்பாடு.. சாப்டுட்டு டில்லி சுத்தி பார்க்க கிளம்பியாச்சு... மொதல்ல போன இடம் இந்திரா காந்தி வீடு.. பெரிய வீடு.. நிறைய இருக்கு பார்க்க .. ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி இருவரின் சின்ன வயசு படங்கள் பார்க்க இனிமை..
ராஜிவ் காந்தி குழந்தையாக....
நேரு இந்திரா காந்தியின் கல்யாணத்துக்கு நெய்து குடுத்த புடவை....
இந்திரா காந்தியின் கணவர் அவருக்கு செய்து குடுத்த பரிசு ....
காலன் பிரதமரை சந்தித்த இடம்
காலனை சந்தித்த போது உடுத்தியிருந்த புடவை
ராஜிவ் காந்தியை குண்டுகள் துளைத்தப்போது அவர் அணிந்திருந்த உடை...
சந்தோஷத்தோடு வீட்டுக்குள் போன போதும் கனத்த மனசுடன் தான் வெளியே வர முடிகிறது... :(
மீண்டும் டில்லியில் சந்திக்கலாம் ... அடுத்த முறை குதூப் மினார், ஜந்தர் மந்தர் மற்றும் அக்ஷர்தம் கோவில்களை பார்க்கலாம்.....
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
என்ன சுமதியக்கா நான் தான் பஷ்டு போலிருக்கு. :p
இந்த ஏஸை விட மாட்டாங்க போலிருக்கு. :)))
அக்ஷர்தாம் கோவில் படங்களுக்கு வெயிட்டிங்க்.
ம்ம்ம்! கனமான படங்கள்..
நானும் டில்லிக்கு போய் இருக்கேன் பல தடவை.. அஷ்ர்தாமை தவிர வேற எங்கும் போனது இல்லை..
எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்...
ரைட் நடத்துங்க..
இந்திரா-ராஜீவ் அஞ்சலிப் பதிவு மாதிரி ஆயிடுச்சுக்காவ்......
ஏனிவே, இருவரும் அஞ்சலி செலுத்த தகுந்தவர்களே.
Post a Comment