Monday, November 19, 2007

சூறாவளி சுற்று பயணம் - புது டில்லி

டில்லில இந்திரா காந்தி அம்மையார் வீட்டை பார்த்த அப்புறம் போன இடம் குதுப் மினார்...



இரவு நேரத்தில் குதுப்மினார்

அழகான கட்டிட கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.. குதுப் உதின் ஐபக் என்பவரால் ஆரம்பிக்க பட்டு அவருடைய மருமகன் இல்டுமிஷ் என்பவரால் மேலும் சில மாடிகள் கட்டப்பட்டு பிருஸ் ஷா என்பவரால் முடிக்க பட்டது.. இது 72.5மீட்டர் உயரம் உடையது. உலகிலேயே மிக உயரமான கற்களால் செய்ய பட்ட மினரெட் இந்த குதுப்மினார் ....





குதுப்மினரோட அழக ரசிச்சிகிடே நாம அடுத்ததா போக போற இடம் தாமரை கோவில்.. இதுக்கு இன்னொரு பெயர் ஜந்தர் மந்தர்.. இந்த இடம் மிகவும் அழகாக தாமரை பூவை போன்று வடிவமைக்க பட்டுள்ளது.. ஒன்பது நுழைவாயில்களை கொண்ட இந்த கோவிலில் இரண்டயிராத்து ஐந்நூறு பேர் உட்காரும் வசதி படைத்தது ... இதன் உள்ளே நுழைந்தால் மனதில் ஒரு பெரிய அமைதி நம்மை ஆட்கொள்கிறது என்றால் மிகைஆகாது.. உள்ளே நுழைவதற்கு முன்பே நம்மை அமைதி காக்க வேண்டுகின்றனர்.


முகலாய கட்டிட கலைக்கு ஒரு குதுப்மினார் என்றால் நம்முடைய கட்ட கலைக்கு ஒரு அக்ஷர்தாம் கோவில் என்றால் அது தவறல்ல ..அழகான ராஜஸ்தானில் இருந்து எடுத்து வந்த பிங்க் நிற கற்களால் செய்ய பட்டுள்ளது...

மார்பிளிலும் சிற்பங்கள் செதுக்க பட்டுள்ளது.. நான் எத்தனை அந்த கோவிலை பற்றி கூறினாலும் அதன் அழகை நீங்களே கண்களால் கண்டு களியுங்கள்.. உங்கள் பார்வைக்காக சில படங்கள்..





அங்கு ஒரு மூன்று மணி வாக்கில் சென்றால் இரவு ஏழு மணி வரை நிடனமாக காணலாம்.. கேமரா, செல்போன் ஆகியவை உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை.. இரவில் விளக்குகளில் இதன் அழகை கான கண் கோடி வேண்டும். இரவில் இங்கு இசைகேற்ப நடமாடும் தண்ணீர் வீழ்ச்சி உள்ளது.. மற்றும் படகு சவாரியும் உள்ளது..
இதில் இன்ட்ரோ என்ற இடத்தில் க்ளிக்கவும்...இங்கு க்ளிக்கி அக்ஷர்தாமை நேரில் பார்த்த புண்ணியத்தை பெறவும்..

பதினேழு நிமிட வீடியோ பார்க்கவும்..

அடுத்து நாம் ஹரித்வாரில் சந்திப்போம்...

8 comments:

நாகை சிவா said...

அஷர்தம் கோவில் இருக்கும் அனைத்தையும் பொறுமையாக ரசிக்க வேண்டும் என்றால் 4 மணி நேரம் பத்தாது என்பது என் கருத்து. படகு சவாரி, வாழ்க்கை வரலாறு, திரைப்படம் எல்லாவற்றையும் காண இன்னும் நேரம் எடுக்கும்.

நான் ரசித்தது இரண்டு விசயங்கள், சுத்தம் & பசுமை, கட்டங்களில் பிராமாண்டம், அழகு & கை வேலைகள்.

கண்டிப்பாக காண வேண்டிய இடம் அது.

தாமரை கோவில் பற்றி விரிவாக சொல்லி இருக்கலாம். அது எந்த மதத்தை குறிப்பிடுகின்றது என்பது வரை.

dubukudisciple said...

முதல் கமெண்டுக்கு நன்றி சிவா....
ஏங்க என்ன வம்புல மாட்டி விடறீங்க.. எனக்கு தெரியாதுங்க எந்த மதத்தை பற்றியதுனு..

ரசிகன் said...

எனக்கு இந்த மாதிரி நெறய சித்திரம் வரைஞ்ச/செதுக்கியதெல்லாம் பாக்க ரொம்ப புடிக்கும்..
எல்லா படங்களும் தெளிவா கலைநயத்தோட எடுக்கப்பட்டிருக்கு .சூப்பர்..

Anonymous said...

படங்கள்லாம் கலக்கலாய் இருக்கு...அக்க்ஷர் தாம் டெல்லியிலா?? (நான் அகமதாபாத்தில் போயிருக்கிறேன்) ஒரு இடம் விட்டுவைக்காம சுத்திருக்கீங்க போல...கலக்கல் போங்க :))

dubukudisciple said...

அஷ்ர்தம் கோவில் மட்டும் இன்னும் போகல :( படங்களெல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு :)//
Thanks veda

dubukudisciple said...

எனக்கு இந்த மாதிரி நெறய சித்திரம் வரைஞ்ச/செதுக்கியதெல்லாம் பாக்க ரொம்ப புடிக்கும்..
எல்லா படங்களும் தெளிவா கலைநயத்தோட எடுக்கப்பட்டிருக்கு .சூப்பர்..//
Thanks Rasigan... :)))

dubukudisciple said...

படங்கள்லாம் கலக்கலாய் இருக்கு...அக்க்ஷர் தாம் டெல்லியிலா?? (நான் அகமதாபாத்தில் போயிருக்கிறேன்) ஒரு இடம் விட்டுவைக்காம சுத்திருக்கீங்க போல...கலக்கல் போங்க :))///
akshardam ippa delhila open panni irukaanga.. main ahmedabad thaan

மெளலி (மதுரையம்பதி) said...

இப்போதான் இந்த பதிவினை பார்த்தேன். படங்கள் சூப்பர்