என்னங்க கங்கை ஆரத்தி எல்லாம் நல்லா பார்த்தீங்களா?? போய் சேர்ந்த அன்னிக்கி அது தான் பார்த்தேன்..

கங்கைக்கு சில புனிதங்கள் எல்லாம் இருக்கு..அந்த தண்ணில மாத்திரம் பாசியே பிடிக்காது அதுனால நீங்க எவ்வளவு நாட்கள் வேணும்னாலும் அதனை ஒரு பாட்டிலிலோ இல்ல சொம்பிலோ வச்சிக்கலாம். அந்த தண்ணீல குளிச்சா பாவம் எல்லாம் போயிடும்னு நம்பறாங்க..அவ்வளவு சக்தி இருக்கு அந்த தண்ணீல. எல்லா விதமான அசுத்தங்களையும் போக்கும் சக்தி அந்த ஜலத்துக்கு இருக்கு..

இந்த காட் அப்படிங்கறதுல ரெண்டே ரெண்டு காட்ல தான் இறந்து போனவர்களுக்கான காரியங்கள் செய்ய விடுவாங்க.. அது வந்து மனிகர்னிகா காட், ஹரிஷ் சந்திரா காட். இந்த இடங்களுல பிணத்தை எரிப்பதை எல்லாம் நாம கண்ணால பார்க்கலாம். இங்கே தச அச்வமேத காட் அப்படினு ஒண்ணு இருக்கு. இங்கே பத்து அஸ்வமேத யாகங்கள் பிரம்மா செய்ததாக ஐதிகம்.துளசி காட் அப்படிங்கறது வந்து துளசிதாஸுக்கு அப்புறமா பேர் வந்தது.. அதுக்கு முன்னாடி இதுக்கு லொலர்க் காட் அப்படின்னு பேர் இருந்ததா சொல்லறாங்க..இங்கே தான் துளசிதாசர் தன்னோட ராமாயணத்தை பாடினதா சொல்றாங்க. அப்படி பாடும் போது அவருடைய சுவடி கங்கையில் விழுந்துவிட்டதாம். ஆனாலும் அச்சுவடி தண்ணீல முழுகாம மேலேயே மிதந்ததாம்.

அடுத்த நாள் காலையில ஒரு படகுல எல்லாரும் ஏறி ஹசி காட்லேர்ந்து ஒவ்வொரு காட்டா பார்த்து ரசிச்சிக்கிட்டே பஞ்ச கங்கா காட் கிட்ட வந்தாச்சுஅங்கேதான் இறங்கி கங்கைல குளியல்..குளியல் போட்ட அப்புறம் அங்கேயே மேலே வேணி மாதவன் கோயில் பார்க்கலாம்.அங்கே போய் அதை பார்த்த அப்புறம் அங்கேர்ந்து கொஞ்ச தூரத்துல காசி விஸ்வநாதர் கோயில் இருக்கு.. ரொம்ப சின்னதா இருக்கு இந்த கோயில்.. அதுக்கு பக்கத்துல நந்திக்கு தனியா ஒரு கோயில் இருக்கு அங்கேர்ந்து பார்த்தா ஒரு மசூதி தெரியும். முன்னாடி அதுதான் காசி விஸ்வனாதர் கோயிலா இருந்ததாக கூறுகின்றனர்..

காசி விஸ்வனாதர் தரிசனத்துக்கு பால், தூத்பேடா,கங்கை ஜலம், வில்வ மாலை எல்லாம் எடுத்துட்டு போறாங்க.கோயிலுக்குள் ஒரு பேனா கூட எடுத்து போக முடியாத படி பாதுக்காப்பு போட்டு வச்சிருக்காங்க.. அதுனால வெறும் கைய வீசிட்டு போவது நல்லது. இல்லாட்டி அங்கே ஏதாவது கடையில தான் வச்சிட்டு போகனும்.

காசி விஸ்வநாதரை தரிசனம் செஞ்சுட்டு வந்தா அப்புறம் விசலாட்க்ஷி,அன்னப்பூரணி அப்புறம் வட விருட்ஷம்
இது எல்லாம் தரிசனம் செய்யலாம்.இந்த வட விருட்ஷம் அப்படிங்கறது என்னனா ஒரு ஆல மரம். அதோட இலை எல்லாம் கயாவிலும், தண்டு இங்கே காசிலயும், வேர் அலகாபாத்லயும் இருக்கறதா ஐதிகம். காசிக்குனு ஒரு மூணு விஷயம் ப்ரபலமா இருக்கு அது என்னனு அடுத்த பதிவுல பார்க்கலாமா??
மீண்டும் காசியில் சந்திப்போம்...