Thursday, August 13, 2009

சாம்பார்

சாம்பார் செய்ய முதலில் சாம்பார் பொடி தேவை ... அது எப்படி தயார் செய்வதுன்னு மொதல்ல பார்க்கலாம்...


சாம்பார் பொடி செய்வது எப்படி??

தேவையான பொருட்கள்..







மி.வத்தல் - 500 கிராம்
கொத்தமல்லி விதை - 500 கிராம்
துவரம் பருப்பு - 200 கிராம்
கடலை பருப்பு - 200 கிராம்
மிளகு - 50 கிராம்
கடுகு - 100 கிராம்
வெந்தயம் - 50 கிராம்
வரளி மஞ்சள் - 5 ரூபாய்க்கு (ஆறு முதல் ஏழு வரளி மஞ்சள் இருக்கும் ...)

மேற்கூறிய சாமான்களை நன்றாக வெயிலில் உலர்த்தி பிறகு மாவு மஷினில் குடுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும்...
அப்படி அருகில் மிஷின் இல்லாதவர்கள் வானலியில் ஒவ்வொன்றாக வறுத்து எடுத்து மிக்சியில் பொடித்து சலித்து வைத்து. கொள்ளவும்...
அப்படி வறுக்கும் பொது கவனிக்க வேண்டியது:-
மிளகாயை நன்றாக வறுக்கவும்
கொத்தமல்லி விதை, வெந்தயம் இரண்டையும் கை பொறுக்கும் சூட்டிற்கு வறுத்தால் போதுமானது
பருப்பு வகைகளை சிவக்க வறுக்கவும்
மிளகு/கடுகை வெடிக்கும் வரை வறுக்கவும்.
மிக்சியில் பொடிப்பவர்கள் வரளி மஞ்சளை தவிர்த்து 25கிராம் மஞ்சள் தூளை சேர்த்து கலக்கவும்
இனி சாம்பார் எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்...
(இது சுமார் ஆறு பேருக்கு)(serves 6)
துவரம் பருப்பு - 3/4 cup
காய்கறிகள் - 3 கப் ( சின்ன வெங்காயம், வெள்ளை பூசணிக்காய், முருங்கக்காய் முதலியன)
புளி - எலுமிச்சை அளவு
சாம்பார் பவுடர் - 2 tablespoon
உப்பு - 1 to 2 teaspoon
சர்க்கரை - 1/2 teaspoon(தேவை பட்டால்)
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - 1 tablespoon
கருவேப்பிலை - 1 tablespoon

தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 2 அல்லது 3
வெந்தயம் - சிறிதளவு
பெருங்காய பொடி - சிறிதளவு
எண்ணெய் - 1 teaspoon

செய்முறை
1) துவரம் பருப்பை ஒன்றரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக வேக வைத்து கொள்ளவும். ஆரியவுடன் நன்றாக மசிக்கவும்
2) புளியை ஒரு கப் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து கரைக்கவும்
3) ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கிய பின்னர் மற்ற காய்கறிகளையும் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் விட்டு அனைத்தையும் வேக விடவும்...
4) முக்கால் பாகம் வெந்த பின்னர் பச்சை மிளகாய், உப்பு, சாம்பார் பவுடர் மற்றும் புளி தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
5) பிறகு மசித்து வைத்து இருக்கும் பருப்பை விட்டு கருவேப்பிலை போடவும்.
6) ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, வெந்தயம் தாளித்து, பெருங்காய பொடி போட்டு அதனை சாம்பாரின் மீது கொட்டவும்



கவனிக்க:-
1) சாம்பார் பொடி வறுத்து மிக்சியில் பொடிக்கும் பட்சத்தில் புளி தண்ணீர் பச்சை வாசானை போக கொதித்த பிறகு சேர்த்தால் போதுமானது.
2) நெய்யில் தாளிதம் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் ( இது வெங்காயம் போட்டு செய்யும் சாம்பாருக்கு மட்டுமே பொருந்தும்.)..
3) இட்லிக்கு சாம்பார் செய்ய வேண்டுமெனில் சிறிதளவு பாசி பருப்பும் சேர்த்து வேகவைத்து கொள்ளலாம். பிறகு கடைசியில் சிறிது தனியா, வத்த மிளகாய், மூன்று அல்லது நான்கு சிறிய வெங்காயமும் சேர்த்து வதக்கி அதனுடன் சிறிது தேங்காய் சேர்த்து அரைத்து விட்டால் மிகவும் ருசியாக இருக்கும்...

ஜாடிகேத்த மூடி (இதன் சுவைக்கு சுவை கூட்டுபவை...):-
1) உருளைக்கிழங்கு/வாழைக்காய் கார கறி.
2) உருளைக்கிழங்கு/வாழைக்காய் பொடிமாஸ்
3) பீன்ஸ் கறி

18 comments:

நிஜமா நல்லவன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

நிஜமா நல்லவன் said...

சாம்பார் கேட்டா சாம்பார் பொடி செய்முறை இலவசமா???

நிஜமா நல்லவன் said...

சாம்பார் கேட்ட அன்னத்தை அன்னம்65 போட்டாச்சு போல...ஆளையே காணும்:)))

நிஜமா நல்லவன் said...

/சாம்பார் செய்ய முதலில் சாம்பார் பொடி தேவை ... அது எப்படி தயார் செய்வதுன்னு மொதல்ல பார்க்கலாம்../


நான் உங்க கிட்ட விஜிடபிள் பிரியாணி செய்முறை கேட்டு இருக்கே...அப்படின்னா விஜிடபிள் பயிரிடும் முறை எல்லாம் சொல்லுவீங்களா????

Sumathi. said...

ஹாய் டிடி,

நி.நல்லவரே, மொதல்ல சாம்பார் வைக்க என்ன செய்யனும் னு தெரியுமா?

Sumathi. said...

//சாம்பார் கேட்டா சாம்பார் பொடி செய்முறை இலவசமா???//

அதனாலத் தான் அக்கா முன்னெச்சரிக்கையா மொதல்ல சாம்பார் பொடி எப்படி பண்றது னு சொல்லிட்டாங்க, இது எப்படி?

Sumathi. said...

//நான் உங்க கிட்ட விஜிடபிள் பிரியாணி செய்முறை கேட்டு இருக்கே...// இங்க பாருங்க நல்லவரே
இந்த "விஜி" டபுள் அப்பறம் பேரெல்லாம் சொல்லி கேட்டா எப்படி?

//அப்படின்னா விஜிடபிள் பயிரிடும் முறை எல்லாம் சொல்லுவீங்களா????//

ஆஹா... இது நல்ல ப்ளான். அடுத்ததாக ஒரு புது ப்ளாக் ஆரம்பிக்க ஒரு ஐடியா குடுத்து இருக்கீங்களே?

Sumathi. said...

யக்கா, இப்படி பல ப்ளாக் ஆரம்பிச்சு எங்களுக்கும் ஏன் நாட்டுக்குமே உங்கள் சேவை எவ்வளவு தேவை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டாமா?

Annam said...

dubukku akka remba danksu:)

Annam said...

//////////////நிஜமா நல்லவன் said...
சாம்பார் கேட்ட அன்னத்தை அன்னம்65 போட்டாச்சு போல...ஆளையே
காணும்:)))//////////////////////


:)))))

Annam said...

சாம்பார் பொடி செய்முறை பெரிய வேலையா இருக்கும் போல:))

Annam said...

dubukku akka வாசனை இங்க வரைக்கும் வருது
நாளைக்கு trial விட்டுற வேண்டியது தான்:)

Annam said...

சக்தி சாம்பார் பொடி எல்லாம் டூப்பு டுபுக்கு அக்கா செஞ்ச சாம்பார் பொடி தான் டாப்பு:))

Sumathi. said...

//சக்தி சாம்பார் பொடி எல்லாம் டூப்பு டுபுக்கு அக்கா செஞ்ச சாம்பார் பொடி தான் டாப்பு:))//

கா... கா.... கா...
அன்னம்மா நல்லாவே காக்கா பிடிக்கறீங்க...

Annam said...

// Sumathi. said...
//சக்தி சாம்பார் பொடி எல்லாம் டூப்பு டுபுக்கு அக்கா செஞ்ச சாம்பார் பொடி தான் டாப்பு:))//

கா... கா.... கா...
அன்னம்மா நல்லாவே காக்கா பிடிக்கறீங்க...///////

எங்க அக்காவ காக்கா பிடிக்க வேண்டிய அவஸியமில்லை.....கேட்டா உடனே குடுத்துருவாங்க:)))

Porkodi (பொற்கொடி) said...

idhellam saaptu paakradhu yaaru ambiya DD akka? :P padam inum konjam azhaga edukalamle.. apdi enna avasaramo?

gils said...

avvvvvvvvvvvvvvvvvv....one dbt...sambar liquida thaana irukum..sambar podinu potrukeenga?? :D heheh...intha kostinlenthay enaku nenga evlo coaching tharanumnu purinjirukum :D

gils said...

//கா... கா.... கா...
அன்னம்மா நல்லாவே காக்கா பிடிக்கறீங்க//

haha..annam chicken sapduthu..kaaka pudikuthu!!mothathula paravai inathiaye gali panidum polrukay :D