சமையலில் முதலில் இன்று காபி போடுவது எப்படின்னு சுமதி அக்காவின் வேண்டுகோளுக்கிணங்க போடறேன்...
காபி பொடி:- நற நற என்றும் இருக்க கூடாது. அது போல மிகவும் மென்மையாகவும் இருக்க கூடாது..காப்பி பவுடரில் ஐந்து முதல் பதினைந்து சதவிகிதம் சிக்கரி இருத்தல் உசிதம்.
பால்: கொஞ்சம் திக்காக இருத்தல் நலம்
தேவையான பொருட்கள் :-
காபி பவுடர் :- ஒரு ஸ்பூன் ( ஒரு நபருக்கு)
பால்: அரை லிட்டர்
சர்க்கரை : தேவைக்கேற்ப.
செய்முறை..
1) முதலில் பில்டரில் மூன்று ஸ்பூன் காப்பி பவுடர் போட்டு நன்றாக பில்டர் குடையை கொண்டு அழுத்தவும்.
2) தண்ணீரை நன்றாக கொதிக்கவிட்டு பில்டரில் விட்டு திக்காக டிகாக்ஷன் இறக்கி கொள்ளவும்..
3) பாலில் தேவையான அளவு தண்ணீர் விட்டு காய்ச்சி கொள்ளவும்
4) பிறகு பாலில் டிகாக்ஷன் விட்டு சர்க்கரை போட்டு கலந்து குடிக்கவும்
கவனிக்க வேண்டியவை:-
1) டிகாக்ஷன் திக்காக இறக்கி கொள்ளவும்.. தண்ணியாக இருந்தால் காப்பி நன்றாக இருக்காது.
2)பால் காய்ச்சும் போதே தேவையான தண்ணீரை விட்டு கொள்ளவும்.. காய்ச்சிய பிறகு தண்ணீர் சேர்க்க கூடாது..
3)டிகாக்ஷனை எக்காரணம் கொண்டும் நேரடியாக சூடாக்க கூடாது. அப்படியே சூடாக்க வேண்டும் என்றால் அதனை கொதிக்கும் நீரில் இரு டம்ப்லரிலோ ஒரு பாத்திரத்திலோ விட்டு வைத்து சூடாக்கவும்.
4)பாலுடன் டிகாக்ஷனை சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்க கூடாது. இதனால் காபியின் சுவை கெட்டுவிடும்
5)டிகாக்ஷன் மீந்து போய் குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பட்சத்தில் டிகாக்ஷனில் சிறிதளவு சர்க்கரை போட்டு வைக்கவும்.
சமீபத்தில் வந்த மடல்.. இன்றைக்கு போட்ட பதிவுக்கு பொருத்தமா இருக்குறதால இந்த படத்தையும் போடாச்சு...
ஆஸ்த்ரேலியாவில் 3604 காப்பி கோப்பைகளால் செய்த ஓவியம் இது.
அடுத்தாக அன்னம் அவர்கள் கேட்ட சாம்பார் !!!!
Tuesday, August 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
ஹையா எனக்கு தான் காபி!
/அடுத்தாக அன்னம் அவர்கள் கேட்ட சாம்பார் !!!!/
அவங்க எல்லாம் கோழி சாம்பார் வைக்கிறவங்க:)))))
வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்றதுன்னு கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்:)))))
காபி செம டேஸ்ட்..அதுக்காக அப்படியே போய்டுவேன்னு நினைக்காதீங்க...வந்ததுக்கு கொஞ்சம் கமெண்ட்ஸ் போட்டுட்டு போய்டுறேன்:))))
/காபி பொடி:- நற நற என்றும் இருக்க கூடாது. அது போல மிகவும் மென்மையாகவும் இருக்க கூடாது../
அப்படின்னா கொற கொறன்னு கரடு முரடா இருக்கணும்னு சொல்லுறீங்க...ரைட்டு:))
/பால்: கொஞ்சம் திக்காக இருத்தல் நலம்/
க்கும்...ஏற்கனவே தண்ணில பாலை கலந்து கொடுக்குறாய்ங்க...இதிலே திக்கா வேற வேணுமா...காபி ஆசைய மறந்திட வேண்டியது தான்:))))
/தேவையான பொருட்கள் :-
காபி பவுடர் :- ஒரு ஸ்பூன் ( ஒரு நபருக்கு)
பால்: அரை லிட்டர்
சர்க்கரை : தேவைக்கேற்ப./
காபி பவுடர் ஒரு நபருக்கு ஒரு ஸ்பூன்னு சொன்னீங்க...சரி...ஆனா அரை லிட்டர் பால் எத்தனை பேருக்குன்னு சொல்லலையே...எனக்கு காபி நல்லா முக்கா லிட்டர்ல வேணும்:))))
/முதலில் பில்டரில் மூன்று ஸ்பூன் காப்பி பவுடர் போட்டு நன்றாக பில்டர் குடையை கொண்டு அழுத்தவும்./
எங்க வூட்ல பில்டர் குடை இல்லைங்க....மான் மார்க் குடை தான் இருக்கு....அதை கொண்டு அழுத்தலாமா????
danks akka
/3) பாலில் தேவையான அளவு தண்ணீர் விட்டு காய்ச்சி கொள்ளவும்/
ஹையோ...ஹையோ...பாலில் தான் வாங்கும் போதே தேவையான அளவு தண்ணீர் இருக்கே...அப்புறம் என்னாத்துக்கு மறுபடியும்?????
/2)பால் காய்ச்சும் போதே தேவையான தண்ணீரை விட்டு கொள்ளவும்.. காய்ச்சிய பிறகு தண்ணீர் சேர்க்க கூடாது../
திரும்ப திரும்ப பாலில் தண்ணீர் சேர்க்க சொல்லுறீங்களே..இங்க அன்னம் வந்து இருக்கே...அதுக்கு காபி கொடுத்தா எப்புடி குடிக்கும்????தண்ணிய எல்லாம் தனியா பிரிச்சிட்டு குடிக்குமா?
/சமீபத்தில் வந்த மடல்.. இன்றைக்கு போட்ட பதிவுக்கு பொருத்தமா இருக்குறதால இந்த படத்தையும் போடாச்சு...
ஆஸ்த்ரேலியாவில் 3604 காப்பி கோப்பைகளால் செய்த ஓவியம் இது.
அடுத்தாக அன்னம் அவர்கள் கேட்ட சாம்பார் !!!!/
சாம்பார் பதிவின் போது 4063சாம்பார் பாத்திரத்தால் செய்த ஓவியனும் ஏதாவது மெயில் வருதா பாருங்க...இல்லைன்னா நாமே செஞ்சி போட்டுடுவோம்:)))
Ahaa kavanikka vendiya section arumaya erukku :) first time here through annam, gils and few other blogs :)
aha indha nijama nallavan nijamave nallavara!!!! yenga konjam namma kadai pakkamellamum varalamle? ellarukum nallavana irukalame! :D coffe ku nandri hai akka..
// yenga konjam namma kadai pakkamellamum varalamle? ellarukum nallavana irukalame//
LOL :D porks lolluku alavay ila :D
ஹையா எனக்கு தான் காபி!//
உங்களுக்கு தான் காபி
அவங்க எல்லாம் கோழி சாம்பார் வைக்கிறவங்க:)))))//
அது எல்லாம் நமக்கு தெரியாதுங்க... வெறும் சைவ சமையல் தான் நமது..
வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்றதுன்னு கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்:)))))///
அடுத்ததாக செஞ்சிடிவோம்
காபி செம டேஸ்ட்..அதுக்காக அப்படியே போய்டுவேன்னு நினைக்காதீங்க...வந்ததுக்கு கொஞ்சம் கமெண்ட்ஸ் போட்டுட்டு போய்டுறேன்//
பின்ன காபி குடுத்ததே கம்மென்ட் போட தானே... :D
அப்படின்னா கொற கொறன்னு கரடு முரடா இருக்கணும்னு சொல்லுறீங்க...ரைட்டு:))//
ரைட்டு இல்ல ராங்கு..
காபி பவுடர் ஒரு நபருக்கு ஒரு ஸ்பூன்னு சொன்னீங்க...சரி...ஆனா அரை லிட்டர் பால் எத்தனை பேருக்குன்னு சொல்லலையே...எனக்கு காபி நல்லா முக்கா லிட்டர்ல வேணும்:))))
///
உங்கள மாதிரி ஆளுங்களுக்கு ஒரு லிட்டர் பாலுல ஒருத்தர் தான் குடிக்க முடியும்.. இல்லாட்டி அரை லிட்டர் பாலுல நான்கு பேரு குடிக்கலாம்..
சாம்பார் பதிவின் போது 4063சாம்பார் பாத்திரத்தால் செய்த ஓவியனும் ஏதாவது மெயில் வருதா பாருங்க...இல்லைன்னா நாமே செஞ்சி போட்டுடுவோம்:)))///
பதிவு எதுவும் வரல நீங்க தான் செஞ்சி போடணும் போல இருக்கு.. சீக்கிரம் செஞ்சி குடுங்க போட்டுருவோம்
danks akka//
welcome
Ahaa kavanikka vendiya section arumaya erukku :) first time here through annam, gils and few other blogs :)//
thanks srivats... please do visit often
coffe ku nandri hai akka..
//
thanks porkodi...
ஹாய் டிடி,
அட நான் தேன் லேட்டு... சரி அதனால் என்ன எனக்காக நான் கேட்ட காபி குடுத்ததுக்காக தேங்க்க்க்க்க்க்க்க்ஸ்.
//காபி பவுடர் :- ஒரு ஸ்பூன் ( ஒரு நபருக்கு)
பால்: அரை லிட்டர் //
ஆமாம் காபி பொடி மட்டும் 1 ஸ்பூன்
ஆனா பால் மட்டும் அரை லிட்டரா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அண்ணே, அக்கா இப்பத் தான் காபில ஆரம்பிச்சு இருக்காங்க, நீங்க அதுக்குள்ள
//வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்றதுன்னு கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்:))))// கேக்கலாமா?
நல்லவரே, நீங்க என்னைக்கு G3 ப்ளாக்குல மொத கமெண்ட் போடறீங்களோ அன்னைக்குத் தான் உங்களுக்கு நம்ம ஜி3 அக்கா இந்த வெஜிடபுள் பிரியானி தருவாங்கலாம், சரியா?
//எங்க வூட்ல பில்டர் குடை இல்லைங்க....மான் மார்க் குடை தான் இருக்கு....அதை கொண்டு அழுத்தலாமா????//
நீங்க எந்த குடை கொண்டு அழுத்தினாலும் சரி மொத்தத்துல குடையாலத் தான் அழுத்தனும். புரியுதா?
//அப்படின்னா கொற கொறன்னு கரடு முரடா இருக்கணும்னு சொல்லுறீங்க...ரைட்டு:))//
ரைட்டு இல்ல ராங்கு..//
ஹா ஹா ஹா ஹா ஹா....அக்கா சூப்பர் இது தான்.
Post a Comment