
ரொம்ப நாளைக்கு அப்புறம் நேத்திக்கி கே டிவில தளபதி பார்த்தேன்!!!
என்ன நல்ல படம்!! ஒரு ஒரு காட்சியும் ரசிச்சு எடுத்து இருப்பார் மணிரத்னம்!!!
ரஜினியொட நடிப்பாகட்டும், மம்முட்டியொட நடிப்பாகட்டும், அரவிந்த சுவாமி ஆகட்டும் எல்லாரும் நல்லா நடிச்சு இருப்பாங்க!!!
தனியா காமெடி டிராக் எதுவுமே இல்லேனாலும் போர் அடிக்காத படம்...
ரஜினியோட அறிமுகமாகட்டும், மம்முட்டியோட அறிமுகமாகட்டும் எல்லாம் சூப்பர்...
ரஜினி அமரிஷ் பூரிகிட்ட தனக்கு தேவராஜ் தான் முக்கியம்னு சொல்லும் போதும்...அதுக்கு மம்முட்டி வந்து ரஜினி கிட்ட என்கிட்ட யாராவது வந்து "சூர்யா விட்டுடு நான் உன்ன பெரிய ஆளாக்கி காட்டரேன்னு சொல்லி இருந்தா நான் போயிருபேனோ என்னவோனு சொல்லும் போதும் சரி ரெண்டு பேரும் நல்லா நடிச்சு இருப்பாங்க.
அதே மாதிரி மம்முட்டி ரஜினிக்காக போய் பெண் கேட்கும் போதும்.. அது மறுக்க படும் போது மம்முட்டி அதுக்காக வருத்தபடும்போதும் , அதை ரஜினி அழகாக புரிஞ்சுக்கும் போதும் ரெண்டு பேரும் வெளுத்து வாங்கி இருப்பாங்க!!!
ஷ்ரிவித்யாவும் ஜெயசங்கரும் எல்லாருமே நல்லா நடிச்சு இருப்பாங்க!!!!
பானுப்ரியா தான் கொஞ்சம் வேஸ்ட்னு தோனும்...
அதன் மூலம் கூட இவங்க நட்போட அழத்தை அழ்காக விளக்கி இருப்பார்!!!
இளையராஜாவோட இசை சொல்லவே வேண்டாம்.. எப்பொழுதும் போல சூப்பர்...
கடைசி காட்சில கூட சூப்பர் ஸ்டார் சூப்பர் நடிப்பு!!!!
நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுத்த படம்....
மணிரத்னம் நினைத்தால் கூட இப்படி ஒரு படத்தை திரும்ப தர முடியுமா அப்படிங்கரது சந்தேகம் தான்!!!!