Tuesday, December 12, 2006

இந்து மதத்தின் டார்வின் தியரி!!!

எல்லா மதமும் எதாவது ஒரு வகையில் மனிதனை அச்சர்யபட வைக்கும் .. அது போல இந்து மதத்தில் உள்ள எத்தனையோ விஷயங்கள் என்னை அச்சர்ய பட வைத்துள்ளது.. அவற்றில் ஒன்றை தான் நான் உங்களோடு இப்பொழுது பகிர்ந்து கொள்ள போகிறேன்..மேலை நாட்டவர்கள் டார்வின் தியரி அவர்களுக்கே சொந்தமானதாக நினைக்கிறார்கள்.ஆனால் இந்து மதத்தில் அது பல காலம் முன்பாகவே சொல்ல பட்டுள்ளது. நம்மில் பல பேருக்கு அது தெரியாது.. எங்கே எப்படி சொல்ல பட்டுள்ளது ... ???இதோ விளக்கம்........படித்து பயன் பெறவும்.இந்து மதத்தின்படி விஷ்ணுவின் அவதாரங்கள் பத்து.
1)முதல் அவதாரம் - மீனாவதாரம்..இது நீரில் மட்டும் வாழும் தன்மை கொண்டது..

2)இரண்டாவது அவதாரம் - ஆமை அவதாரம்.. இது நீர் மற்றும் நிலம் இரண்டிலும் வாழும் தன்மை கொண்டது..

3)மூன்றாவது அவதாரம் பன்றி அவதாரம் - இது நிலத்தில் வாழும் உயிரினம் ..ஆனால் இது ஆமையின் அடுத்த பரிணாம வளர்ச்சியுடையது...

4)நான்காவது அவதாரம் நரசிம்மர் - இது மனிதன் பாதி மிருகம் பாதி.

5)ஐந்தாவது அவதாரம் - வாமன அவதாரம் - இது மனிதனின் முதல் பரிணாமம்.

6)ஆறாவது அவதாரம் - பரசுராமர் - இந்த அவதாரம் கையில் கோடாலியுடன் - இது தான் மனிதன் முதலில் உபயோகம் செய்த அயுதம்.

7) எழாவது அவதாரம் - ராமாவதாரம் ... இந்த அவதாரம் வில்லுடன் கூடியது .. வில் மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சியாகும்

8 & 9) எட்டாவது மற்றும் ஒன்பதாவது அவதாரம் - பலராமர் மற்றும் கிருஷ்ணர்- இவர்கள் இருவரும் மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சியை வெளிபடுத்தினர் -- அது இவர்களுடைய போர் திறனில் வெளிப்பட்டது.

10) பத்தாவது அவதாரம் (எடுக்க போவது) கல்கி - இந்த அவதாரம் குதிரை மீது இருப்பதாகும்.. இந்த யுகத்தின் முடிவில் பெட்ரோலின் தட்டுபாடு வரும் என்று எதிர்ப்பார்க்கபடுகின்றது. அதானால் தான் கல்கி அவதாரம் குதிரை மீது...

ஆகையால் டார்வினின் பரிணாம வளர்ச்சி தியரி நம்முடைய இந்து மதத்தில் ஏற்கனவே சொல்ல பட்டுள்ளது என்பதற்கு இதுவே சான்று

தங்கள் கருத்துகளை பின்னுட்டத்தின் மூலம் தெரிவிக்கவும்

10 comments:

Sumathi. said...

ம்ம்ம்ம்ம்ம்..... நல்லாதான் எழுதி இருக்கீங்க... ஏங்க ஒரு டவுட்டு..சயின்ஸ் ரொம்ம்ம்ப படிப்பீங்களோஓஓஓஒ...... எதேதோஓ சொல்லுரீங்க....

Hariharan # 03985177737685368452 said...

டார்வின் தியரி மட்டுமில்லை, க்ளோனிங்கும் முன்னமே இந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரத்தத் துளிகளில் இருந்து மீண்டும் பல உயிர்கள் உயிர்த்தெழுவது, டெஸ்ட் டியூப் பேபி கான்சப்ட், சர்ரோகேட் மதர் கான்சப்ட், என்பதான உயிரியல் உயர் தத்துவங்கள் இருக்கிறது.

வேதத்தின் பிரிவான தனுர் வேதத்தில் ஆர்டில்லரி, மிஸ்ஸைல் டெக்னாலஜி, ஏரொனாடிக்ஸ் ஸ்பேஸ் கிராப்ட் கான்சப்ட்கள் இருக்கிறது.

கன்ஸ்டிரக்ஷன் அண்ட் மெக்கானிக்ஸ் டெக்னாலஜி ஸ்தபதிசாஸ்திரத்தில் இருக்கிறது.

ஆயுர்வேதம் பாரம்பரிய வேத மருத்துவம் சொல்கிறது.

இந்துமதம் உள்ளடக்காத அறிவியல், விஞ்ஞானம், தொழில் நுட்பம் இல்லை எனலாம்!

Syam said...

என்னமோ சொல்றீங்க...பேசாம இப்பவே ஒரு குதிரை வாங்கி ஓட்டி பழகறது நல்லதுனு தோனுது :-)

dubukudisciple said...

//sumathi said...
ம்ம்ம்ம்ம்ம்..... நல்லாதான் எழுதி இருக்கீங்க... ஏங்க ஒரு டவுட்டு..சயின்ஸ் ரொம்ம்ம்ப படிப்பீங்களோஓஓஓஒ...... எதேதோஓ சொல்லுரீங்க....
//

தாங்ஸ் சுமதி!!
முதல் கமெண்ட் போட்டதுக்கு!!!
அது சயின்ஸனால இல்ல...இந்து மதத்தின் மீது உள்ள பற்று!!!

dubukudisciple said...

ஹரிஹரன் சார்...
நன்றி உங்க பின்னுட்டத்துக்கு..
இப்படி பல நல்ல கருத்துக்கள் உள்ள புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்களேன் நானும் படிச்சு என்னோட அறிவ கொஞ்சம் வளர்த்துக்கரேன்....

dubukudisciple said...

sayaam aNNA..
enna paNRathu !!! kuthirai maadu ellaam otta kaththukkaveeNdiyathu thaan!!!
-naam athai nookki thaan pooRoom...

நாமக்கல் சிபி said...

அட! நல்லா இருக்கே!

Adiya said...

சரி தான் நம் கமல்லும் dasaavatharathulla இததான் சொல்ல வராரு

இத் Relative analogy innum சொல்லாம்

நாமக்கல் சிபி said...

நல்லா யோசிச்சிதான் எழுதியிருக்கீங்க :-)

வெங்கட்ராமன் said...

நல்ல பதிவு.
யோசிக்க வைக்கும் பதிவு.