எல்லா மதமும் எதாவது ஒரு வகையில் மனிதனை அச்சர்யபட வைக்கும் .. அது போல இந்து மதத்தில் உள்ள எத்தனையோ விஷயங்கள் என்னை அச்சர்ய பட வைத்துள்ளது.. அவற்றில் ஒன்றை தான் நான் உங்களோடு இப்பொழுது பகிர்ந்து கொள்ள போகிறேன்..மேலை நாட்டவர்கள் டார்வின் தியரி அவர்களுக்கே சொந்தமானதாக நினைக்கிறார்கள்.ஆனால் இந்து மதத்தில் அது பல காலம் முன்பாகவே சொல்ல பட்டுள்ளது. நம்மில் பல பேருக்கு அது தெரியாது.. எங்கே எப்படி சொல்ல பட்டுள்ளது ... ???இதோ விளக்கம்........படித்து பயன் பெறவும்.இந்து மதத்தின்படி விஷ்ணுவின் அவதாரங்கள் பத்து.
1)முதல் அவதாரம் - மீனாவதாரம்..இது நீரில் மட்டும் வாழும் தன்மை கொண்டது..
2)இரண்டாவது அவதாரம் - ஆமை அவதாரம்.. இது நீர் மற்றும் நிலம் இரண்டிலும் வாழும் தன்மை கொண்டது..
3)மூன்றாவது அவதாரம் பன்றி அவதாரம் - இது நிலத்தில் வாழும் உயிரினம் ..ஆனால் இது ஆமையின் அடுத்த பரிணாம வளர்ச்சியுடையது...
4)நான்காவது அவதாரம் நரசிம்மர் - இது மனிதன் பாதி மிருகம் பாதி.
5)ஐந்தாவது அவதாரம் - வாமன அவதாரம் - இது மனிதனின் முதல் பரிணாமம்.
6)ஆறாவது அவதாரம் - பரசுராமர் - இந்த அவதாரம் கையில் கோடாலியுடன் - இது தான் மனிதன் முதலில் உபயோகம் செய்த அயுதம்.
7) எழாவது அவதாரம் - ராமாவதாரம் ... இந்த அவதாரம் வில்லுடன் கூடியது .. வில் மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சியாகும்
8 & 9) எட்டாவது மற்றும் ஒன்பதாவது அவதாரம் - பலராமர் மற்றும் கிருஷ்ணர்- இவர்கள் இருவரும் மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சியை வெளிபடுத்தினர் -- அது இவர்களுடைய போர் திறனில் வெளிப்பட்டது.
10) பத்தாவது அவதாரம் (எடுக்க போவது) கல்கி - இந்த அவதாரம் குதிரை மீது இருப்பதாகும்.. இந்த யுகத்தின் முடிவில் பெட்ரோலின் தட்டுபாடு வரும் என்று எதிர்ப்பார்க்கபடுகின்றது. அதானால் தான் கல்கி அவதாரம் குதிரை மீது...
ஆகையால் டார்வினின் பரிணாம வளர்ச்சி தியரி நம்முடைய இந்து மதத்தில் ஏற்கனவே சொல்ல பட்டுள்ளது என்பதற்கு இதுவே சான்றுதங்கள் கருத்துகளை பின்னுட்டத்தின் மூலம் தெரிவிக்கவும்