Thursday, July 05, 2007

சமைக்கும் கேஸ் வாங்கலியோ கேஸ்...


அம்பியோட கல்யாணத்துக்கு முன்னாடி சில சாமான்கள் எல்லாம் வாங்கி வீட்டை நேர் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து ஒரு லிஸ்ட் தயார் செய்தோம். அதில் சோபா செட், கட்டில் மற்றும் கேஸ் ஆகியவை அடங்கும்..
சோபாவும், கட்டிலும் சுலபமா வாங்கியாச்சு... அதுனால கேஸ் வாங்கறதுக்கும் ஏதாவது செஞ்சிடலாம் அப்படின்னு முடிவு பண்ணிட்டோம்.. அதுவும் சுலபமா கிடைக்கும் நினைச்சா வந்துது சனி!!!



நம்ம வாங்குற கேஸ் கம்பெனிக்கு போன் பண்ணி கேட்டா ரேஷன் கார்டு வேணும் அப்படி இப்படின்னு ஒரே அலம்பல்.. சரினு நம்ம வீட்டுக்கு சப்ளை பண்ற ஆளை கேட்டா மேடம் ஒன்பதாயிரம் ரூபாய்ல ஒரு திட்டம் இருக்கு நேர்ல போனா உங்களுக்கு விவரங்கள் கிடைக்கும்னு ஒரு திருவார்த்தை அருளிட்டாரு... எங்க ரெண்டு பேருக்கும் ஒரே குஷி..
சரின்னு நாள், நட்சத்திரம் எல்லாம் பார்த்து ஒரு சுபயோக சுபதினத்தில கேஸ் கம்பனிக்கு போயாச்சு.. நான் அங்கே இருந்த ஒரு ரிச்ப்ஷனிஸ்ட் கிட்ட புது கேஸ் வேணும் என்ன பண்ணனும்னு கேட்டா அவங்க ரொம்ப ஈஸியா அது எல்லாம் குடுக்கறது இல்லை மேடம்னு சொல்லி தன்னுடைய வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. நான் விடுவேனா நம்ம சப்ளை பாய் பன்னீரு சொன்னாரு ஏதோ ஒரு திட்டம் இருக்கு அதுல கிடைக்கும்னு சொன்னாரேனு ஒரு தூண்டில் போட அந்த பொண்ணு நம்மள அந்த கம்பெனி முதலாளிய கை காமிச்சு விட்டுச்சி... சரின்னு அவருக்கிட்ட போய் நம்க்கு தெரிஞ்ச கன்னடத்துல மாத்தாடினேன்.(அதுதாங்க பேசினேன்)..அவருக்கு நம்மள பார்த்த கன்னடக்காரங்க மாதிரி தெரியாம பஞ்சாபி மாதிரி தெரிஞ்சுது போல..அவரு நமக்கு ஹிந்தில பதில் சொன்னாரு...என்ன கொடுமை இது!!!
சரின்னு மேனேஜர் கிட்ட போய் அந்த திட்டம் என்ன கொஞ்சம் தெளிவா சொல்லுங்கனு சொன்னேன்..
அவரும் ஒரு பேப்பர் பேனா எல்லாம் எடுத்து எவ்வளவு ரூபா எதுக்கு கட்டணம்னு சொன்னாரு.. சரின்னு அதை எடுத்து பார்த்தா ரெண்டு சிலிண்டருக்கான டெப்பாசிட்டு, ரெண்டு சிலிண்டருக்கான பைசா, ரெகுலேட்டர், பைப்பு, கேஸ் அடுப்பு அப்படின்னு எல்லாம் போட்டுட்டு நடுவுல வாட்டர் ஹீட்டர்னு போட்டு நாலாயிரத்தி சொச்சம் போட்டு இருந்துது..
என்னடா இது நாம எதுவும் ஹீட்டர் எல்லாம் கேக்கலியேனு மேனேஜர் கிட்ட கேட்டேன்.. அவரு ஹீட்டர் வாங்கினா தாங்க கேஸு அதுதாங்க புது திட்டம்னு சொல்லி ஒரு பெரிய அணுகுண்டை தூக்கி போட்டுடாரு..
சரி அப்புறம் என்ன ஆச்சு.. நாங்க கேஸ் வாங்கினோமா இல்லையானு தெரிஞ்சுக்க அடுத்த பதிவுக்கு கொஞ்சம் பொறுங்கள்...

26 comments:

Sumathi. said...

ஹாய் சுதா,

//நினைச்சா வந்துது சனி!!!//

நீங்க பாத்தீங்களா முனி?

ஆஹா, இது சூப்பர் போங்க..
அது சரி அந்த கம்பனி டேமேஜருக்கு கொஞ்சம் அழுத்தியிருந்தாலே போதுமே
ஈசியா குடுத்துடுவானே....

Sumathi. said...

haai,

//பஞ்சாபி மாதிரி..//

இந்த அம்பி வேண்டாம்னாலும் மத்தவங்க விடவே மாட்டேங்கறாங்க
போங்க..

Sumathi. said...

ஹாய்,

//புது கேஸ் வேணும் என்ன பண்ணனும்..//

அதுக்கு மொதல்ல அப்ளை பண்ணனும்யா..

dubukudisciple said...

நீங்க பாத்தீங்களா முனி?
//
illenga pakala!!!
konjam illa... iruntha varuthathuku avaraye azhthi irupen.. enna panrathu

dubukudisciple said...

இந்த அம்பி வேண்டாம்னாலும் மத்தவங்க விடவே மாட்டேங்கறாங்க
போங்க..///
ambiyoda sernthu naanum appadiye agiten.. enna panrathu

dubukudisciple said...

அதுக்கு மொதல்ல அப்ளை பண்ணனும்யா..///
enna kandupidipu sumathi.. pidinga oru award.. ungaluku

G3 said...

Aaha.. Ambi.. unga velaiya sulabamaakka unga thangamaniyum DD yum overa help pandraangalae.. idhellam nyaayama :)

G3 said...

//பஞ்சாபி மாதிரி தெரிஞ்சுது போல..//

ambi punjaabi figurukkaa maathina getuplayae unga kooda vandhutaaro ;)

G3 said...

//அவரு ஹீட்டர் வாங்கினா தாங்க கேஸு அதுதாங்க புது திட்டம்னு சொல்லி ஒரு பெரிய அணுகுண்டை தூக்கி போட்டுடாரு..
//

Aaha.. ambi ungalukku suduthanni podara velayum michamaam... :P

G3 said...

rounda oru 10 pottu me the escapu :)

Manasa said...

DD akka,

ithu yenna chain reaction range ku irukku :) Heater vaankinaa Gas, cooler vaankina heater... ipdee poitae irukkumoo ;)

BTW nambalaiyum blog unionla konjam serthukonka :)

Dreamzz said...

enga paathaalum punjaabi ya! thaangalada saami!

Dreamzz said...

gas vaanga ippadi thollaiya! aahaa!

dubukudisciple said...

g3
danks vanthu commentinathuku

dubukudisciple said...

Manasa!!
unga mail idya thati vidunga...
ennoda idku!!!

dubukudisciple said...

gas vaanga ippadi thollaiya! aahaa///
innum iruku waitees

Porkodi (பொற்கொடி) said...

hahahaha! aiyo aiyo...

Porkodi (பொற்கொடி) said...

punjab punjab than karnataka karnataka thaan ;-)

Porkodi (பொற்கொடி) said...

meedhiya epo poduvinga?

Bharani said...

ennadhu ambi-ku gas connection thara maatraangala....yaaru adhu....auto anupidalaama sollunga...

My days(Gops) said...

//வீட்டை நேர் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து ஒரு லிஸ்ட் தயார் செய்தோம். //

gud gud.. adhula boori kattai escape aaagi irukumey?

My days(Gops) said...

//அதுவும் சுலபமா கிடைக்கும் நினைச்சா வந்துது சனி!!!//

appo neenga velli kilamai decide pannnuneeengala? :P

My days(Gops) said...

//நம்ம வாங்குற கேஸ் கம்பெனிக்கு போன் பண்ணி கேட்டா ரேஷன் கார்டு வேணும் அப்படி இப்படின்னு ஒரே அலம்பல்.//

oru chinna sandhegam...
ooru vitu ooru pona, ration card eduka mudiaadha?

My days(Gops) said...

//அவருக்கிட்ட போய் நம்க்கு தெரிஞ்ச கன்னடத்துல மாத்தாடினேன்.(அதுதாங்க பேசினேன்)..//

neenga paaatu edhuvum paadalai ey?

//அவருக்கு நம்மள பார்த்த கன்னடக்காரங்க மாதிரி தெரியாம பஞ்சாபி மாதிரி தெரிஞ்சுது போல..அவரு நமக்கு ஹிந்தில பதில் சொன்னாரு...//

nalla vera avaru punjab la reply pannama irundhaarey.. adhuvaraikum sandhosa padunga... he he

My days(Gops) said...

// நடுவுல வாட்டர் ஹீட்டர்னு போட்டு நாலாயிரத்தி சொச்சம் போட்டு இருந்துது..//

enna kodumai saravana / kodi idhu? :O.....

appo neenga water heater vikkira kadaila poitu oru water heater vaangunga.. ungalukku free ah gas kidaichidum :P

Raji said...

Ambikku gas connection illai nu sollitaangala....enna koduma sir idhu?