Tuesday, May 15, 2007

த(அ)ம்பி கல்யாணம்னா சும்மாவா???

எல்லா மக்களுக்கும் வணக்கம்..
எப்படி நடந்தது அம்பி கல்யாணம்.. யாருமே சொல்லலியேனு எல்லாரும் வருத்த பட்டுக்கிட்டு இருக்காங்க.. சரி நாம தான் எல்லா வேளையும் இருந்தோமே சொல்லிடலாம்னு ஆரம்பிச்சாச்சு.. போட்டோக்கள் நாளை நம்ம யாஹூ க்ருப்ஸ்ல போடப்படும்.
அக்கா நீங்க தான் எல்லாம்...கண்டிப்பா வந்து நடத்தி தரணும் அப்படினு நம்ம அம்பி(தம்பி) கேட்டு கொண்டதற்க்கிணங்க நானும், ரங்குவும் சனிக்கிழமையே சென்னை போயாச்சு..

ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் ஒரு எழு மணிக்கு என்னோட அம்மா வீட்டிலிருந்து கிளம்பி மாப்பிள்ளை அழைப்புக்கு போயாச்சு..அங்கே எனக்கு முன்பாக தி.ரா.சா சாரும் அவரோட தங்கமணியும் இருந்தாங்க.. எல்லாரும் நம்மள அம்பியோட அன்னப்பூரணி அப்படினு சிறப்பா கவனிச்சாங்க...
நான் போனபோது அம்பி கோயிலுக்கு போயிருந்தார்..அம்பியோட தங்கமணி உடம்பெல்லாம் ஜரிகைப்போட்ட வைர ஊசி போட்ட மேரூம் கலர் புடவை, அம்பிவந்து ப்ளேசர் போட்டு இருந்தாரு.. எதோ மண்டபம் முழுக்க குளிர் சாதனவசதி ஊட்டப்பட்டிருந்தால் பொழச்சாரு.. இல்லாட்டி அவ்வளவு தான்.அவர் வந்தப்பிறகு அவரையும் அவரொட தங்கமணியும் பார்த்துட்டு போட்டோ எல்லாம் எடுத்துட்டு.. நம்ம வந்த முக்கியமான வேலைக்கு போயாச்சு( அது தாங்க சாப்பாடு).
தலை வாழை இலை போட்டு அதுல பால் பாயசம், பூந்தி தயிர் பச்சடி,இனிப்பு பச்சடி,பாசி பருப்பு மற்றும் கடலை பருப்பு கோசம்பரி,அத்திரிக்காய் கறி,வெள்ளை பூசனிக்காய் கூட்டு, பருப்பு வடை, போளி, ஊறுகாய், அப்பளம், சாம்பார்,ரசம், அப்பளம்,தயிர் என்று எல்லாவற்றையும் போட்டு வெகு விமர்சையாக இருந்தது சாப்பாடு..மூணு நேரமும் இப்படி தான் சாப்பாடு.. எப்பவுமே கல்யாணத்துல இந்த காபில தான் கலாட்டாவே அரம்பிக்கும். சாப்பாடு ஹால்ல தனியா ஒருத்தர் எப்பவும் காபிக்கு தேவையான அனைத்தையும் வைத்து கொண்டு எப்போழுது காபி கேட்டாலும் குடுக்க தயாராக இருந்தார்....அதுக்கு வழியே இல்லாம செஞ்சிட்டாங்க...அடுத்த நாள் கார்த்தால.. டிபன்.. இட்லி, தோசை, பொங்கல், வடை, அசோகா அல்வானு அமர்க்களப்பட்டுச்சி.. சீக்கிரமே முகூர்த்தம் அப்படிங்கர்தால பத்து மணிக்கு சாப்பாடு தொடங்கிட்டாஙக்.. நடுவுல பைனாப்பிள், திராட்சை, இஞ்சி-எலுமிச்சை ஜூஸு வேற..


நன்கு படித்த வேதவிற்ப்பன்னர்கள் மந்திரம் ஓத..
நாணத்தால் சிவந்ததோ இல்லை கட்டிய சிவப்பு சேலையினால் சிவந்ததோ என்றறியாத முகத்துடன் தந்தையின் மடியில் மணமகள் அமர்ந்திருக்க
பட்டு வேட்டியுடனும், நினைத்த பெண் தனக்கு மனைவியாக அமைந்த சந்தோஷத்துடன் மணமகனும்
தனக்கு இனி அனைத்து வேலைகளிலும் துணையிருக்க வந்துவிட்டாள் ஒரு பெண் என்று
மணமகனின் பெற்றொர்கள் அகமகிழ
இல்லை ஒரு பிள்ளை என்ற ஏக்கத்தை தணிக்க மாப்பிள்ளை ரூபத்தில் ஒருத்தர் வந்துவிட்டதை எண்ணி பெண்ணின் பெற்றொர் ஒருபுறம் அகமகிழ
சுற்றம், நண்பர்கள் எல்லாம் வாழ்த்தை மலர்களால் சொரிய
மங்கள வாத்தியம் முழங்க
இனிதே அம்பி எங்கிற ரஙகராமனே
ப்ரியா எங்கிற சீதாலட்சுமியின்
கழுத்தில் மூன்று முடியிட்டு
இனிதே திருமண வைபவம் முடிந்தது..


மதியமும் நல்ல சாப்பாடு..

மாலையில் இருவரும் தங்கள் திருமணம் சுபமாக முடிந்த சந்தோஷத்தை கண்களிலும்,
இனி துடங்கவிருக்கும் வாழ்ககை இனிதே நடக்க வேண்டும் எங்கிற கனவுகளை நெஞ்சம் முழுவதும் சுமந்து கொண்டும் இருந்தனர்..
எல்லாவற்றிற்க்கும் மேலாக.. அம்பியின் தம்பிக்கு அவருடைய பாதையின் தடை கல் விலகியதில பெரும் மகிழ்ச்சி..
அம்பி அழகிய கிரீம் நிற ஷெர்வானியிலும்
அம்பியின் பாதி நல்ல அழகிய வேலைப்பாடுகள் செய்த ராஜரத்தின கல் நிறத்தில்(Sand Stone color) சேலையும் அணிதிருந்தனர்....

என்னுடன் தி.ரா.சா, வேதா, ஜி3, மற்றும் பொன்னரசி கோதண்டராமனும் நேரிலும்
அருண்,மு.கார்த்திகேயன்,பரணி ஆகியோர் தொலைபேசியிலும், மற்ற ப்ளாக் யுனியன் மக்கள் அனைவரும் தங்களின் மனதிலும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

21 comments:

Sumathi. said...

ஹாய் சுதா,

ஆஹா... இந்த வர்ணனனயை படித்தப்போது (என் சிறு வயதில் கிரிகெட் கமெண்ட்ரி கேட்பது போல்) அத்தனை சிறப்பாக எழுதியுள்ளீர்கள். அதுவும் அந்த முக்கியமான சாப்பாடு பற்றியும் மிக மிக சிறப்பாக எழுதியுள்ளீர்கள். மணமனும் மணமகளும் பல்லாண்டு சீரோடும் சிறப்போடும்(சிரிப்போடும்) வாழப் போகிறார்கள் என்பது உறுதி. மேலும் அவர்களின் உடையை பற்றியும் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி சுதா, ஒரு விஷயம் சாப்பாடு நன்றாகவுள்ளது என்று சொன்னீர்கள், இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நீங்கள் நன்றாக மூன்று வேளையும் மூக்கப் பிடிக்க சாப்பிட்டுளீர்கள் என்பது தெரிகிறது. நன்றி சுதா...

Sumathi. said...

ஹாய்,

அட.. இப்பவும் நான் தான் பஷ்டா?
இந்த கோப்ஸ் மிச்சவங்கல்லாம் எங்கே போனாங்க?

Dreamzz said...

ஆஹா.. சூப்பர்!! கல்யாணம் கலக்கல் போல!! சீக்கிரம் போட்டோவ போடுங்க!

Anonymous said...

//அப்பளம், சாம்பார்,ரசம், அப்பளம்,//


appalatha rendu thada pottu irukeenga..rendu vagaiyana appalama????


//அம்பிவந்து ப்ளேசர் போட்டு இருந்தாரு//

neenga mattum than ketpeengala thangs enna color saree appadinu..nangalum kepom illa

Rangs ambi enna color pottu iruntharu??


vedha ice cream pathi solli irunthagale....neeng atha vitu teeengale

Arunkumar said...

superb commentary...

blue-la irukkura sentence chance-ae illa... suthu potaalum enakku apdi ezhuda varaadhu :)

ACE !! said...

அட சூப்பர் வர்ணனை தான்... சாப்பாடு சூப்பரோ சூப்பரா இருந்திருக்கு.. :D:D

அருண்:

//blue-la irukkura sentence chance-ae illa... //

எல்லாமே வயலட் கலர்ல தானே இருக்கு... :(:( bold-அ தான் blue-னு சொல்றீங்களா??

நாகை சிவா said...

வர்ணனை அருமை!

எல்லாரும் சாப்பாட்டுல தான் குறியா இருக்காங்க... நம்மள போலவே...

;-)

Anonymous said...

இதுக்கு தான் வெயிட்டிங்....டெய்லி வந்து பார்த்துக்கிட்டு இருந்தேன். ரொம்ப நன்றி...ஒருத்தருமெ போட்டோ போடலியா...க்ர்ர்ர்ர்ர்ர்ர்

Anonymous said...

avvvvvvvvvvvvvvvvvvvvvvvvv! enakku ille enakku ille :-(

-porkodi

ACE !! said...

//அசோகா அல்வானு //

இது என்ன?? நான் கேள்வி பட்டதே இல்ல..

//எல்லாரும் சாப்பாட்டுல தான் குறியா இருக்காங்க... நம்மள போலவே...//

புலி, நாமெல்லாம் வாழறதே சாப்பிட தானே?? :D :D

ACE !! said...

//பால் பாயசம், பூந்தி தயிர் பச்சடி,இனிப்பு பச்சடி,பாசி பருப்பு மற்றும் கடலை பருப்பு கோசம்பரி,அத்திரிக்காய் கறி,வெள்ளை பூசனிக்காய் கூட்டு, பருப்பு வடை, போளி, ஊறுகாய், அப்பளம், சாம்பார்,ரசம், அப்பளம்,தயிர்//

நம்க்கு ரொம்ப பிடிச்ச, வத்த குழம்பு இல்லயா?? இல்ல நீங்க மிஸ் பண்ணிட்டீங்களா??

My days(Gops) said...

yakka,

kannaalatha nerla paartha effect... radio fm maadhiri summa asathi eduthuteeeeeega.. gud gud...

nalla irukeeengala..

13 place pudichiten ...v a r e n..

mgnithi said...

kalyantha nerla paartha maathiri
irunthuchu.. Thanks for the commentary.

kalyana saapadu saapita maathiri oeu feel...


Kalyanthoda excellent commentary kudutha Ambiyin Annapoorani vaazhga vaazhga...

Anonymous said...

அருமையா வர்ணித்துள்ளீர்கள்...நன்றி.

வாழ்த்துக்கள் அம்பிக்கும் அவரது தர்மிணிக்கும்.

மதுரையம்பதி.

Dubukku said...

நானும் கல்யாணத்திற்கு வராலாமென்று தான் இருந்தேன். சில பல தடங்கல் அதான் வர முடியலை. உங்களையும் ரங்கமணியையும் மெயினா பார்க்கலாம்ன்னு நினைச்சேன்...அதனாலென்ன அடுத்த தரம் ஊருக்கு வரும் போது கண்டிப்பா பெங்களூர் உண்டு கண்டிப்பா மீட் பண்ணுவோம்

SKM said...

azhagana varnanai.G3 update koduthanga.But adhu usual g3 style lil irukalai.Unga ninaivu vandhu parthen.padichuttu thripthiya irukku.next vedha idam poi reception patri padikiren.Thanks a lot for the updates.Nanum angae irundhu enjoy pannadhu pola thonudhu.Thanks.

Aani Pidunganum said...

Surakottai Govindamay moyi 1000 rubaaai.....

மு.கார்த்திகேயன் said...

நானே நேரா வந்து கல்யாணம் அட்டென்டன்ட் பண்ணின மாதிரி ஒரு நிறைவு உங்க பதிவை படிச்சப்ப DD

Raji said...

Super nga Sudha..Nerula vara mudiyalanu feel pannuravanga indha padhiva padicha feel panna maatanga...

ஜி said...
This comment has been removed by the author.
ஜி said...

unga posta paditchathum nerula paaththa mathiriye irunthathu kka.. :))