ரெம்ப நாள் ஆச்சு பதிவு போட்டு..
நாம பதிவு போடறது நம்ம டேமேஜருக்கு கண்ண உறுத்தி அதுனால கடப்பாரையா பார்த்து குடுத்துட்டாரு..புடுங்கறதுக்கு..
இன்னிக்கி கொஞ்சம் ப்ரீ.. அதுதான் உங்களை எல்லாம் கவிஜ சொல்லி மொக்கை போடலாம்னு..

என்ன அதிசயம்
ஒரு இசை கருவியே
வயலின் மீட்டுகின்றதே!!!

செடியில் இல்லாமல்
இங்கு ஒரு மலர் தடாகத்தில்
இருக்கின்றதே..
ஒ!! இது தான் தாமரையோ!!!

நீ மழையில்
நனைந்து உன்னை குளிர்வித்துக்கொண்டு
எனக்கு மட்டும்
ஏன் சூடை ஏற்றுகின்றாய்!!!!
என்னங்க.. எல்லாரும் ரெண்டு கவிஜையும் ரசிச்சீங்களா?? எங்க கிளம்பிட்டீங்க கல் அடிக்கவா?? சின்னதா அடிங்க.. ஆனா நிறைய கல் அடிங்க...சரியா??
15 comments:
ஹாய் சுதா,
//அதுனால கடப்பாரையா பார்த்து குடுத்துட்டாரு..புடுங்கறதுக்கு..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
என்ன கொடும ஏஸ்? ஒரு சின்ன பொண்ணப் பாத்து இவ்வளவு கொடுமையா?
ஹாய் சுதா,
//உங்களை எல்லாம் கவிஜ சொல்லி மொக்கை போடலாம்னு..//
ஆஹா..நீங்களுமா?
ஹாய் சுதா,
எல்லாம் சரி, உடனே மக்கள்ஸ் ஜொள்ளு விட ஆரம்பிப்பாங்க...பாருங்க...
DD, இப்படி எல்லாம் படத்தை போட்டுற உங்க பாசத்தை நினச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மூன்றாவது படத்திற்கு..
இப்படியெல்லாம்
இருக்காதே பெண்ணே!
பிளந்து கிடக்கிறது
பழங்கள் என்று
ஆசையோடு
வந்துவிடப்போகிறது
கிளிகள் கூட்டம்!
neenga nallavara kettavara?
k4k annathe blog a poi paarunga.. for the feedback [:)]
//என்ன அதிசயம்
ஒரு இசை கருவியே
வயலின் மீட்டுகின்றதே!!!//
அது வயலின் இல்லீங்கோ.. கிதாரு.....
//என்னங்க.. எல்லாரும் ரெண்டு கவிஜையும் ரசிச்சீங்களா?? //
கணக்கு சுத்தமா வராதா? ரெண்டு இல்லீங்கோ மூணு....
படம் மட்டும் நல்லா செலக்ட் பண்ணி போட தெரியுது....
//உங்களை எல்லாம் கவிஜ சொல்லி மொக்கை போடலாம்னு..//
Neengalum starting aa ?
Yeenunga, Photoveh kavithai iruku idhula unga kavithai innum superoooh super, adhuvum indha நீ மழையில்
நனைந்து உன்னை குளிர்வித்துக்கொண்டு
எனக்கு மட்டும்
ஏன் சூடை ஏற்றுகின்றாய்!!!!
Supero super
//
DD, இப்படி எல்லாம் படத்தை போட்டுற உங்க பாசத்தை நினச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
ripeeatu :)
படத்துக்கு ஒரு ஓஓஓ!
கவிஜக்கு ஒரு சின்ன ஓ! :)
கவிஞர் கவிதை எழுதுவது இயல்பு.
ஆனால் ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே-
ஷாபாஆஆஆஆ - தாங்கல்லடா சாமி(உங்கல இல்லிங்கோ, நான் எழுதினத சொல்லரேன்)
படத்கிற்கும் கவிதைக்கும் பாராட்டுக்கள்
சௌதி சாம்பு
படம் எல்லாம் range ஆ இருக்கு! சூப்பர்! நான் திரும்ப வந்துட்டேன் அக்கா!
15!
Post a Comment