Tuesday, May 08, 2007

மைசூர் அரண்மனை.. என் பார்வையில் - II!!!!

அலமேலம்மா ஒடினார் என்று போன பதிவை முடித்து இருந்தேன். ஒடிய அலமேலம்மா தலக்காடு என்ற இடத்துக்கு வந்தவுடன் அங்கு தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டார். அவ்வாறு தற்கொலை செய்துக்கொள்வதற்க்கு முன்பு அவர் மூன்று சாபங்களை கொடுத்ததாக தெரிகிறது.. அவை:
1) தலக்காடு மண்ணாகப்போகட்டும்.
2) மாலிங்கி நீர் சூழலில் சிக்கி அழியட்டும்.
3) உடையார் வம்சத்தினர்க்கு வம்சம் தழைக்க குழந்தைகள்(அதாவது வாரிசுகள்) இல்லாமல் போகட்டும்..

இவையே அந்த மூன்று சாபங்கள்!!!.
அதற்கு பின்னர் தலக்காடு மண்ணுக்குள் புதைந்து விட்டதாக கூறுகின்றனர்.
மாலிங்கியின் அருகில் ஓடி கொண்டிருந்த காவேரி தன்னுடைய பாதையை மாற்றிக்கொண்டு சிக்கமாலிங்கி மற்றும் மாலிங்கியை மூழ்கடித்து விட்டதாக தெரிகிறது.
இன்று வரை உடையார்களுக்கு நேரடி ஆண் வாரிசுகள் இல்லை என்றே கூறலாம்.
இப்பொழுது இருக்கும் ஸ்ரீகாந்ததத்தவுடையார் அதற்கு முன்பு இருந்தவருடைய தத்து பிள்ளை என்றே கூறுகின்றனர்.ஸ்ரீகாந்ததத்தவுடையாருக்கும் நேரடி வாரிசுகள் இல்லை. நடந்தவை அனைத்தும் பதினாராம் நூற்றாண்டுக்கு பின்னரே நிகழ்ந்துள்ளது..

இவை அனைத்தும் அலமேலம்மாவின் சாபத்தின் எதிரொலியா?? இல்லையா என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால் இன்று வரை அல்மேலம்மாவின் தங்க விக்ரகம் மைசூர் அரண்மனையில் வைத்து உடையார்கள் பூஜித்து வருவதாக சொல்கின்றனர்.. அது மட்டுமில்லாமல் நவராத்திரி விழாவின் ஒன்பதாவது தினம் அல்மேலம்மாவிற்கு பூஜை செய்தே விழாவை முடிப்பதாகவும் சொல்கின்றனர்..
சசி சிவராமகிருஷ்ணர் என்பவர் அந்த சாபத்தை பற்றி ஒரு டாகுமெண்டரி எடுத்துள்ளார்... அதற்கு இங்கே சொடுக்கவும்.

12 comments:

Sumathi. said...

ஹாய் சுதா,

//இவை அனைத்தும் அலமேலம்மாவின் சாபத்தின் எதிரொலியா?? //

ஓஹோ...அப்படியா? இப்ப கூட அவங்க வம்சத்திற்கு நேரடி வாரிசு இல்லையா சுதா?

Sumathi. said...

சுதா,

அந்த லிங்க் எனக்கு சரியா வரலயே?

dubukudisciple said...

ammam ippovum avangaluku neradi varisu illai!!

dubukudisciple said...

ippo vera mathi potu iruken.. parunga

Anonymous said...

puthiya saithi....thanks...

/Mathurayampathi

dubukudisciple said...

thanks
maduraiampathi.. seri enge ungaloda details
blog_union@yahoo.com - intha idku anupunga

Raji said...

Ahaha inaikku thaan 1st 2nd partu padichaen..DD ipdi oru kadhai irukka...

Neenga mysore palaceaa lights oda potta padam namma toura gyabagam vandhuchu..Naanga last time dasara anaikku thaan ponoam..Chanceailla superaa mysore fulla lightings aa irundhuchu ....

ulagam sutrum valibi said...

பெண்பாவம் பொல்லாதது என்பது இதுதானா?

Arunkumar said...

alamelu ammavukku enna venumo kuduthu anuppungappa...

MyFriend said...

யப்பா.. நான் பயந்து போயிட்டேன்.. நீங்கதான் என்னமோ உங்க பதிவை படிக்கிறவங்களுக்கு சாபம் கொடுக்கிறீங்களோன்னு.. ஹீஹீ...

ambi said...

super info. intha video mattera enkitta sollave illaye. :(

//அந்த லிங்க் எனக்கு சரியா வரலயே?
//

@sumathi, ungalukku mattum link sariyaa varathaam! DD akka apdi set panni vechrukaanga. :p

Anonymous said...

nalla alamelu amma! :-(

-porkodi