நம்ப பாட்டுக்கு ஏதோ நம்பளுக்கு தெரிஞ்சா மாதிரி பொண்ணுங்க போட்டோ எல்லாம் போட்டுட்டு இருந்தா நம்ப குரு வந்து வேற ஏதாவது எழுதுங்கனு சொல்லிட்டாரு... அதை வேற இன்னோரு நண்பர் வழி மொழிஞ்சுட்டு போய்ட்டாரு!!!
சரி ஏதாவது எழுதிடனம்னு முடிவு பண்ணி இன்னிக்கி எழுதரேன்!!! யாரெல்லாம் துப்பனமோ வந்து துப்பிட்டு போங்கப்பு!!
கோயிலுக்கு எதுக்கு போகனும்???

அது தான் வீட்டிலேயே படம் எல்லாம் வச்சி விளக்கு ஏத்தி சாமி கும்பிடரோமே அப்புறம் எதுக்கு கோயிலுக்கு போகனும்?? அதே சாமி தானே அங்கேயும்னு சொல்ரது காதுல விழுது!!!

கோயிலில் ஒரு ஒரு நேரத்துக்கும் ஒரு ஒரு மாதிரி மந்திரங்கள் சொல்ல படுகின்றன... அவ்வாறு சொல்ல படுகின்ற மந்திரஙளில் இருந்து எழும் அதிர்வுகள் கோயிலின் உட்புரத்திலேயே சுற்றி சுற்றி வருகின்றன.. கோயிலின் அமைப்பும் அவ்வாரே அமைக்கபட்டுள்ளது!! (முக்கோண வடிவில்)
நாம் நம்முடைய மன சஞ்சலத்துடன் அங்கே செல்கிறோம்!!

அங்கு செல்லும் போது அங்குள்ள அதிர்வுகளில் உள்ள நமக்கு தேவையானவற்றை நம்முடைய உடம்பு கிரக்கித்து கொள்கின்ரது!! ஆதலால் தான் நமக்கு ஒரு வித மன அமைதி கிடைக்கின்றது!!!

மேலும் பழைய கோயில்களில் எல்லாம் கருங்கற்கள் போட்டு இருப்பார்கள் பிரகாரத்தில்!! அதன் மீது நடக்கும் போது அது நம்முடைய கால்களுக்கு நல்ல ஒரு அக்கு பிரஷர் முறையாக கருதபட்டது!! அதனால் தான் ஒரு சுற்று செய்ய கூடாது!! மூன்று சுற்றாவது சுற்ற வேண்டும் என்றனர்...
Disclaimer: இது அனைத்தும் ஒரு புத்தகத்தில் படித்தவையே!!
ஏதெனும் தவறு இருப்பின் மன்னிக்கவும்!!
ஏதெனும் திருத்தம் தேவைபட்டால் அதையும் தெரிவிக்கலாம்!!
யார் யார் கல் எரிய நினைக்கிறீங்களோ எரியலாம்.. ஆனால் சிறிய கற்களாக இருத்தல் நல்லது