Friday, May 25, 2007

கவிஜ!!! கவிஜ!!!

என்ன மக்கள்ஸ் எல்லாரும் நலமா??
ரெம்ப நாள் ஆச்சு பதிவு போட்டு..
நாம பதிவு போடறது நம்ம டேமேஜருக்கு கண்ண உறுத்தி அதுனால கடப்பாரையா பார்த்து குடுத்துட்டாரு..புடுங்கறதுக்கு..
இன்னிக்கி கொஞ்சம் ப்ரீ.. அதுதான் உங்களை எல்லாம் கவிஜ சொல்லி மொக்கை போடலாம்னு..



என்ன அதிசயம்
ஒரு இசை கருவியே
வயலின் மீட்டுகின்றதே!!!





செடியில் இல்லாமல்
இங்கு ஒரு மலர் தடாகத்தில்
இருக்கின்றதே..
ஒ!! இது தான் தாமரையோ!!!



நீ மழையில்
நனைந்து உன்னை குளிர்வித்துக்கொண்டு
எனக்கு மட்டும்
ஏன் சூடை ஏற்றுகின்றாய்!!!!



என்னங்க.. எல்லாரும் ரெண்டு கவிஜையும் ரசிச்சீங்களா?? எங்க கிளம்பிட்டீங்க கல் அடிக்கவா?? சின்னதா அடிங்க.. ஆனா நிறைய கல் அடிங்க...சரியா??

Tuesday, May 15, 2007

த(அ)ம்பி கல்யாணம்னா சும்மாவா???

எல்லா மக்களுக்கும் வணக்கம்..
எப்படி நடந்தது அம்பி கல்யாணம்.. யாருமே சொல்லலியேனு எல்லாரும் வருத்த பட்டுக்கிட்டு இருக்காங்க.. சரி நாம தான் எல்லா வேளையும் இருந்தோமே சொல்லிடலாம்னு ஆரம்பிச்சாச்சு.. போட்டோக்கள் நாளை நம்ம யாஹூ க்ருப்ஸ்ல போடப்படும்.
அக்கா நீங்க தான் எல்லாம்...கண்டிப்பா வந்து நடத்தி தரணும் அப்படினு நம்ம அம்பி(தம்பி) கேட்டு கொண்டதற்க்கிணங்க நானும், ரங்குவும் சனிக்கிழமையே சென்னை போயாச்சு..

ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் ஒரு எழு மணிக்கு என்னோட அம்மா வீட்டிலிருந்து கிளம்பி மாப்பிள்ளை அழைப்புக்கு போயாச்சு..அங்கே எனக்கு முன்பாக தி.ரா.சா சாரும் அவரோட தங்கமணியும் இருந்தாங்க.. எல்லாரும் நம்மள அம்பியோட அன்னப்பூரணி அப்படினு சிறப்பா கவனிச்சாங்க...
நான் போனபோது அம்பி கோயிலுக்கு போயிருந்தார்..அம்பியோட தங்கமணி உடம்பெல்லாம் ஜரிகைப்போட்ட வைர ஊசி போட்ட மேரூம் கலர் புடவை, அம்பிவந்து ப்ளேசர் போட்டு இருந்தாரு.. எதோ மண்டபம் முழுக்க குளிர் சாதனவசதி ஊட்டப்பட்டிருந்தால் பொழச்சாரு.. இல்லாட்டி அவ்வளவு தான்.அவர் வந்தப்பிறகு அவரையும் அவரொட தங்கமணியும் பார்த்துட்டு போட்டோ எல்லாம் எடுத்துட்டு.. நம்ம வந்த முக்கியமான வேலைக்கு போயாச்சு( அது தாங்க சாப்பாடு).
தலை வாழை இலை போட்டு அதுல பால் பாயசம், பூந்தி தயிர் பச்சடி,இனிப்பு பச்சடி,பாசி பருப்பு மற்றும் கடலை பருப்பு கோசம்பரி,அத்திரிக்காய் கறி,வெள்ளை பூசனிக்காய் கூட்டு, பருப்பு வடை, போளி, ஊறுகாய், அப்பளம், சாம்பார்,ரசம், அப்பளம்,தயிர் என்று எல்லாவற்றையும் போட்டு வெகு விமர்சையாக இருந்தது சாப்பாடு..மூணு நேரமும் இப்படி தான் சாப்பாடு.. எப்பவுமே கல்யாணத்துல இந்த காபில தான் கலாட்டாவே அரம்பிக்கும். சாப்பாடு ஹால்ல தனியா ஒருத்தர் எப்பவும் காபிக்கு தேவையான அனைத்தையும் வைத்து கொண்டு எப்போழுது காபி கேட்டாலும் குடுக்க தயாராக இருந்தார்....அதுக்கு வழியே இல்லாம செஞ்சிட்டாங்க...அடுத்த நாள் கார்த்தால.. டிபன்.. இட்லி, தோசை, பொங்கல், வடை, அசோகா அல்வானு அமர்க்களப்பட்டுச்சி.. சீக்கிரமே முகூர்த்தம் அப்படிங்கர்தால பத்து மணிக்கு சாப்பாடு தொடங்கிட்டாஙக்.. நடுவுல பைனாப்பிள், திராட்சை, இஞ்சி-எலுமிச்சை ஜூஸு வேற..


நன்கு படித்த வேதவிற்ப்பன்னர்கள் மந்திரம் ஓத..
நாணத்தால் சிவந்ததோ இல்லை கட்டிய சிவப்பு சேலையினால் சிவந்ததோ என்றறியாத முகத்துடன் தந்தையின் மடியில் மணமகள் அமர்ந்திருக்க
பட்டு வேட்டியுடனும், நினைத்த பெண் தனக்கு மனைவியாக அமைந்த சந்தோஷத்துடன் மணமகனும்
தனக்கு இனி அனைத்து வேலைகளிலும் துணையிருக்க வந்துவிட்டாள் ஒரு பெண் என்று
மணமகனின் பெற்றொர்கள் அகமகிழ
இல்லை ஒரு பிள்ளை என்ற ஏக்கத்தை தணிக்க மாப்பிள்ளை ரூபத்தில் ஒருத்தர் வந்துவிட்டதை எண்ணி பெண்ணின் பெற்றொர் ஒருபுறம் அகமகிழ
சுற்றம், நண்பர்கள் எல்லாம் வாழ்த்தை மலர்களால் சொரிய
மங்கள வாத்தியம் முழங்க
இனிதே அம்பி எங்கிற ரஙகராமனே
ப்ரியா எங்கிற சீதாலட்சுமியின்
கழுத்தில் மூன்று முடியிட்டு
இனிதே திருமண வைபவம் முடிந்தது..


மதியமும் நல்ல சாப்பாடு..

மாலையில் இருவரும் தங்கள் திருமணம் சுபமாக முடிந்த சந்தோஷத்தை கண்களிலும்,
இனி துடங்கவிருக்கும் வாழ்ககை இனிதே நடக்க வேண்டும் எங்கிற கனவுகளை நெஞ்சம் முழுவதும் சுமந்து கொண்டும் இருந்தனர்..
எல்லாவற்றிற்க்கும் மேலாக.. அம்பியின் தம்பிக்கு அவருடைய பாதையின் தடை கல் விலகியதில பெரும் மகிழ்ச்சி..
அம்பி அழகிய கிரீம் நிற ஷெர்வானியிலும்
அம்பியின் பாதி நல்ல அழகிய வேலைப்பாடுகள் செய்த ராஜரத்தின கல் நிறத்தில்(Sand Stone color) சேலையும் அணிதிருந்தனர்....

என்னுடன் தி.ரா.சா, வேதா, ஜி3, மற்றும் பொன்னரசி கோதண்டராமனும் நேரிலும்
அருண்,மு.கார்த்திகேயன்,பரணி ஆகியோர் தொலைபேசியிலும், மற்ற ப்ளாக் யுனியன் மக்கள் அனைவரும் தங்களின் மனதிலும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Tuesday, May 08, 2007

மைசூர் அரண்மனை.. என் பார்வையில் - II!!!!

அலமேலம்மா ஒடினார் என்று போன பதிவை முடித்து இருந்தேன். ஒடிய அலமேலம்மா தலக்காடு என்ற இடத்துக்கு வந்தவுடன் அங்கு தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டார். அவ்வாறு தற்கொலை செய்துக்கொள்வதற்க்கு முன்பு அவர் மூன்று சாபங்களை கொடுத்ததாக தெரிகிறது.. அவை:
1) தலக்காடு மண்ணாகப்போகட்டும்.
2) மாலிங்கி நீர் சூழலில் சிக்கி அழியட்டும்.
3) உடையார் வம்சத்தினர்க்கு வம்சம் தழைக்க குழந்தைகள்(அதாவது வாரிசுகள்) இல்லாமல் போகட்டும்..

இவையே அந்த மூன்று சாபங்கள்!!!.
அதற்கு பின்னர் தலக்காடு மண்ணுக்குள் புதைந்து விட்டதாக கூறுகின்றனர்.
மாலிங்கியின் அருகில் ஓடி கொண்டிருந்த காவேரி தன்னுடைய பாதையை மாற்றிக்கொண்டு சிக்கமாலிங்கி மற்றும் மாலிங்கியை மூழ்கடித்து விட்டதாக தெரிகிறது.
இன்று வரை உடையார்களுக்கு நேரடி ஆண் வாரிசுகள் இல்லை என்றே கூறலாம்.
இப்பொழுது இருக்கும் ஸ்ரீகாந்ததத்தவுடையார் அதற்கு முன்பு இருந்தவருடைய தத்து பிள்ளை என்றே கூறுகின்றனர்.ஸ்ரீகாந்ததத்தவுடையாருக்கும் நேரடி வாரிசுகள் இல்லை. நடந்தவை அனைத்தும் பதினாராம் நூற்றாண்டுக்கு பின்னரே நிகழ்ந்துள்ளது..

இவை அனைத்தும் அலமேலம்மாவின் சாபத்தின் எதிரொலியா?? இல்லையா என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால் இன்று வரை அல்மேலம்மாவின் தங்க விக்ரகம் மைசூர் அரண்மனையில் வைத்து உடையார்கள் பூஜித்து வருவதாக சொல்கின்றனர்.. அது மட்டுமில்லாமல் நவராத்திரி விழாவின் ஒன்பதாவது தினம் அல்மேலம்மாவிற்கு பூஜை செய்தே விழாவை முடிப்பதாகவும் சொல்கின்றனர்..
சசி சிவராமகிருஷ்ணர் என்பவர் அந்த சாபத்தை பற்றி ஒரு டாகுமெண்டரி எடுத்துள்ளார்... அதற்கு இங்கே சொடுக்கவும்.

Wednesday, May 02, 2007

ANYWAY!!!











I am not available for the next two to four days.. But anyway keep visiting my blog and posting comments.. thanks.. I will visit all your blog on Monday (7th of May)