சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி.. அந்த மாதிரி அழகா சமூக சேவை மட்டுமே தேவைனு இருந்த என்னை மாட்டி விட்டுடாரு பரணி.
நம்மளுக்கு தான் எழுதவே தெரியாதே !! அதுனால தான் படத்தை படத்தை போட்டு ஒட்டிட்டு இருக்கோம் .. இது தெரியாத ஒரு சில நல்ல அத்மாக்கள் நம்மளுக்கு ஒரு டாக்டர் பட்டம் குடுத்து கௌரவிச்சிட்டாங்க..

1) ஒண்ணு :- எனக்கு சில நடிகர்/ நடிகைகள் எல்லாரையும் ரொம்ப பிடிக்கும். (இதுல என்ன வியர்ட்னு கேட்கர்து எனக்கு தெரியுது!!) என்னனா, எனக்கு அவங்களோட ரொம்ப நல்ல நண்பியா இருக்கணம்னு ஒரு ஆசை வரும் அடிக்கடி.இப்போ எனக்கு விக்ரம ரொம்ப பிடிக்கும் .அவரோட ஒரு நல்ல பிரண்டா இருக்கணம்னு ஆசை. (நடக்காதுனு தெரியும்..ஆனா யாரும் ரங்கமணிக்கிட்ட போட்டு குடுத்துடாதீங்க..!!!)
அப்பா!! ஒரு வழியா விக்ரம் போடறத்துக்கு ஒரு சான்ஸ் கிடைச்சுது!!!

2) டூ :- எங்க வீட்டுல ரெண்டு பாத்ரூம் இருக்கு. (அதான் எல்லாருடைய வீட்லையும் இருக்கேன்னு சொல்லப்படாது) எனக்கு ஒரு குறிப்பிட்ட பாத்ரூம்லதான் குளிக்க பிடிக்கும். இதுக்கு ரெண்டு பேருக்கும் சண்டை வரும்.. இதுல வேற நான் தான் சொந்த செலவுல சூன்யம் வச்சிண்டு இருக்கேனே அம்பினு ஒருத்தர அவர் வேற மறக்காம நாராயணா!! நாராயணா!! வேலைய செய்வாரு.

3) தீன்:- எனக்கு ஒருத்தர பிடிச்சி போச்சுனா அவங்களை பத்தின ஹிஸ்டரி ஜியாக்ரபி எல்லாம் தெரிஞ்சுக்க கொஞ்சம் யோசிப்பேன். எனக்கு அது எல்லாம் தேவையில்லாததுனு நினைப்பேன்.

4) நாலுகு:- இந்த கீரைக்காரி, பூக்காரி இவங்க கிட்ட பேரம் பேசறது பிடிக்காது. அவங்களுக்கே ஒரு ஒரு ரூபா, இரண்டு ரூபா கிடைக்கும் அதுல வேற ஏன் நாம் கைய வைக்கணும்? நகை கடை, புடவை கடை இங்கே எல்லாம் நம்பளால பேரம் பேச முடியுமா??

5) ஐது:- எந்த விஷயத்துக்கு சிலர் கோப படுவாங்களோ அதுக்கு நான் கோபமே படமாட்டேன். ஆனா சின்ன விஷயத்துக்கு ரொம்ப கோப படுவேன். அதே மாதிரி நான் சொன்ன விஷயத்தை உடனே ஒ.கேனு சொல்லிடனும். இல்லாட்டி அப்புறம் எத்தனை தடவை என்னை கன்வின்ஸ் பண்ணினாலும் நோ தான்.
அப்பாடி ஒரு வழியா அஞ்சு விஷயம் எழுதியாச்சு..
இப்போ இன்னும் அஞ்சு பேருக்கு ஆப்பு.
1) தகவல் தொடர்பு துறை அமைச்சர் அம்பி..பக்கத்து வீட்டுல இருந்துண்டு இது கூட செய்யலேனா எப்படி??
2) மனம் விரும்புதே உன்னை சுமதி
3) Close your eyes டீரிம்ஸ்.
4)பூவாகவே ராஜி
5) சர்வம் கிருஷ்ணார்ப்பணம் வேதா
நீயே வியர்ட் தான் .. உன்னை போய் ஒருத்தன்/ஒருத்தி டாக் பண்ணினாங்க பாரு.. அவங்க எவ்வளவு வியர்டா இருப்பாங்கனு என்னோட ரங்கமணி கேக்கறாரு...
Che Family total damage













































