Thursday, May 21, 2009

498 (A) வரமா? சாபமா?

என்ன இது ஏதோ தமிழ் பட பெயர் மாதிரி இருக்கா?? நம்ம என்னிக்கி பட விமர்சனம் எல்லாம் எழுதி இருக்கோம்?? இது வரை தொனுத்தி ஆறு பதிவு எழுதியாச்சு ஒரு ரெண்டு பதிவ தவிர எல்லாமே படம் காட்டியாச்சு.. ஏதாவது உருப்பிடியா ஏதாவது எழுதலாம்னு தான் இந்த பதிவு.. இதன் மூலம் யாரையும் நோகடிக்கும் எண்ணம் எதுவும் இல்ல.. முன்னுரை போதும்னு நினைக்கிறன்.. விஷயத்துக்கு வரேன்...



அது என்ன 498(A)??? .. பெண்களை வரதக்ஷிணை கொடுமையில் இருந்தும் அவர்களை கொடுமைப்படுத்தும் ஆண்களிடம் இருந்தும் காப்பாற்றும் சட்டம்.. இந்த சட்டம் பெண்களுக்கு உண்மையிலேயே உதவ கூடியதாக இருந்தாலும் பல பெண்கள் இந்த சட்டத்தை தங்களுடைய சுயநலத்துக்காக பயன் படுத்தும் பொழுது ஆண்களுக்கு சாபமாக இருக்கிறது..

சென்ற வாரம் சனிக்கிழமை செய்தி தாளில் வந்த செய்தி... " இந்த சட்டத்தின் மூலம் ஒரு பெண் புகார் செய்தால் வாரண்ட் இல்லாமலும் எந்த ஒரு சாட்சியும் இல்லாமல் ஒரு ஆணை கைது செய்யலாம்.. மேலும் அந்த ஆண் நிரபராதி என்று நிரூபிக்க பட்டாலும் அந்த பெண்ணுக்கு தப்பான புகார் செய்ததற்காக எந்த தண்டனையும் கிடையாது".. என்ன கொடுமை சரவணன் இது!!!!.. வரமாக இருக்க வேண்டிய சட்டம் சாபமாக மாறியது யாருடைய குற்றம்.. இந்த சட்டத்தின் தவறான பயன்பாட்டினால் சில ஆண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.ஆண்களுக்கு உதவுவதற்கு சில இயக்கங்களும் ஏற்படுத்த பட்டுள்ளது.....



பெண்கள் புகார் செய்வதற்கு முன் யோசிப்பார்களா??

யோசிப்போமா???


பி.கு.:- இந்த பதிவு யாரையும் புண்படுத்த எழுதவில்லை.. என்னுடைய சொந்த கருத்துகளை மட்டுமே தெரிவித்துளேன்.. யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் மன்னிக்கவும்...

This number (3500895, Tuesdays and Fridays, 7 p.m. to 9 p.m.) is strictly for husbands and their close relatives who find themselves charged with offences under IPC 498A and the Dowry Prohibition Act in Bangalore

Saturday, April 18, 2009

Back with a Bang!!!!!!

எல்லாருக்கும் வணக்கம்!!!
ரொம்ப நாளா ப்ளாக் பக்கமே வர முடியாத சூழ்நிலை... முன்னாடி எல்லாம் ஆபீஸ்ல வேலை செஞ்ச நேரம் போக (யாருப்பா அது இது எல்லாம் ரெம்ப ஓவர்னு சொல்றது) கொஞ்சம் ப்ளாக் எழுதறதுக்கும் நேரம் இருக்கும்.. வேலையை விட்டாலும் விட்டேன் ப்ளாக் பக்கம் வரதுக்கு கூட நேரமே இல்லாம போச்சு..
இப்ப தான் கீதா மேடம் சொன்ன மாதிரி என்னோட கணினிய சரி பண்ணி புது நெட் தொடர்பு எல்லாம் எடுத்து மீண்டும் வந்தாச்சு எல்லாரையும் தொந்தரவு பண்ண... பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகுதுன்னு....
வந்துட்டு சும்மா போனா எப்படி.. நம்ம ஸ்பஷாலிடியே படம் காட்டறது தானே...



Wednesday, April 23, 2008

ஈர்ப்பு விசை எதிரி கவிஜ!!!




புவி தன் ஈர்ப்பு விசையினால் அனைத்து
பொருட்களையும் தன்வசம் இழுக்கும்
ஆனால் அன்பே உன் கண்களின்
ஈர்ப்பு விசையினால் நானோ காற்றில் மிதக்கிறேன்!!!

Thursday, April 10, 2008

முதல் மொக்கை................!!!!!!!!

ரொம்ப நாள் ஆச்சு பதிவு எழுதி.. ஏற்கனவே நமக்கு நிறைய விஷயம் இருக்கும் எழுதறதுக்கு.. இதுல ரொம்ப நாள் வேற ஆச்சா அதுனால மூளை வேலையே செய்ய மாட்டேன்கிறது.. (அது யாருப்பா மூளை எல்லாம் உங்களுக்கு இருக்கான்னு கேள்வி கேட்கறது.. கேள்வி கேட்கறது ரொம்ப சுலபம் ஆனா பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம் தெர்யுமா.. :) ).
இத்தனை நாள் நடந்த விஷயங்கள பத்தி எழுதினாலே ஒரு ரெண்டு/மூணு பதிவு போட்டுரலாம் .. நம்ம தானை தலைவி (க்ர்ர்ர்ர் வார்த்தையின் மொத்த மொத்த குத்தகையே இவங்க கிட்ட தான் ..... கோச்சிகாதீங்க ஆபிசர்........) கீதா மேடம் ஒரு நாள் சாட்ல வந்து உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சுன்னு கேட்டாங்க.. அதுக்கு நான் பத்து வருஷத்துக்கு மேலேயே ஆகிடிச்சினு சொன்னேன்... அவங்க உடனே.. 7year marriage itch எல்லாம் தாண்டி வந்துடீங்கலானு கேட்டாங்க.. நானும் எஸ்ஸுனு சொன்னேன்.. அதுக்கு அவங்க மௌலி சார்க்கு ஒரு போட்டி வெச்சி இருக்கேன்னு சொல்லிட்டாங்க.. மௌலி சார் வேற டிடி அக்கா எனக்கு உதவி பண்ணுங்க 7 year marriage itch அப்படினா என்னனு ஒரு பதிவு போடுங்கனு சொல்லிடாரு.. மேட்டரே இல்லாம திண்டாடிட்டு இருந்த நம்மக்கு நல்ல மேட்டர் கிடைச்சுதுன்னு இப்ப 7 year marriage அதை பத்தி பேச போறேன்..
பெருசா ஒண்ணும் இல்லீங்க .. அதாவது கல்யாணம் ஆனா ஆம்பளைங்க எல்லாம் சுமார் ஏழு வருஷம் தான் பொண்டாட்டிக்கு துரோகம் செய்யாம இருபான்களாம் அதுக்கு அப்புறம் வேற ஆள பார்க்க ஆரம்பிசிடுவாங்கனு ஒரு கருத்தாய்வு சொல்லுதாம்.. இத மையமா வெச்சி 1954ல ஒரு படம் எடுத்து இருக்காங்க.. அதுல மர்லின் மான்றோ நடிச்சி இருக்காங்க.. இதுல உலக பிரசித்தி பெற்ற அவங்களோட ப்ராக் இடுப்புக்கு மேல பறக்குற காட்சி வருது.. ஆனா அது அந்த காலத்துல தடை செய்யப்பட்டு படத்தில் காட்ட படவில்லை என்று நம்ம கூகுளார் தகவல்..




நாம தடை செய்யாம மேல போட்டுருகோம்ல .... மன்னிச்சிக்குங்க அப்பு சிறுசா தான் கிடைச்சிச்சு படம்.. இப்பதிக்கி இவ்வளவு தாங்க நம்ம மொக்கை... மீண்டும் அதுத்த பதிவுல சந்திக்கலாமா இன்னொரு மொக்கையோட??

அப்புறம்... நம்ம எப்பவும் போடுற மாதிரி நமக்கு கிடைச்ச அழகி - மிதுனா பார்த்துக்குங்க..






கடைசியா கிடைத்த தகவலின் படி நான் போட்ட அந்த அழகான பெண் ஒரு ஹாலிவுட் நடிகையாம்...

Thursday, February 21, 2008

நன்றிகள் சொல்ல உங்களுக்கு வார்த்தைகள் இல்லையே எனக்கு...

என்னுடைய பிறந்த நாளுக்கு தொலைப்பேசி/ ப்ளாக் யுனியன் பதிவு/ ப்ளாக் யுனியன் யாஹூ க்ரூப்ஸ்/ ஜி-டாக்.. மூலமாக வாழ்த்துக்கள் கூறிய அனைத்து அன்பு நெஞ்சஙளுக்கும் என்னுடைய நன்றிகள்.....


Wednesday, January 30, 2008

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ..............

என் தம்பிங்க எல்லாம் இந்த பொண்ணு யாருன்னு தெரியாம ரொம்ப கஷ்ட படறாங்க.. கொஞ்சம் உதவி தேவை...





Tuesday, January 22, 2008

ஆப்பு வைக்க அணி திரண்டு வாரீர்..

நம்முடைய வலைதளத்தில் அதிக நாளாக இல்லாமல் குறைந்த காலமே இருந்தாலும் எல்லாருக்கும் ஆப்பு வைக்கிற தைரியம் வந்துள்ள துள்ளும் ஒரு சிறிய மீனுக்கு வலை விரித்து வித விதமான ஆப்புகள் வைக்க உங்கள் அனைவருக்கும் அழைப்பு விட படுகின்றது.. எல்லாரும் வித விதமான ஆப்புகளை அள்ளி தெளிகுமாறு கேட்டு கொள்கிறேன். ..
தன்னுடைய ஒரே பதிவின் மூலம் தானை தலைவிக்கும், ப்ளாக் யூனியன் தலைவிக்கும், அனைவருக்கும் ஆப்பு வைக்கும் அம்பிக்கும், அபி அப்பாவிற்கும் ஆப்பு வைத்துள்ளார்.. சில காலமே பதிவு திறந்து ஆகிறது என்றாலும் ஏன் இப்படி என்று தெரியவில்லை.. .சரி நீங்க வாங்க உங்க ஆப்பை அள்ளி தெளிங்க.....

ஸ்டார்ட் மீஜிக்........

Wednesday, January 09, 2008

New Year Resolution

அடுத்த பதிவு "ஒருத்தருக்கு ஆப்பு" வைப்பதற்கான அழைப்பா இருக்கும்.. எல்லாரும் வந்து உங்க ஆப்புகளை தாராளமாக அள்ளி தெளித்து உங்கள் ஆதரவை தர வேண்டுகிறேன்..

புத்தாண்டு சபதத்தை பற்றி எழுத கீதா மேடம் நமக்கு அழைப்பு விடுட்டுடாங்க.. ப்ளாக் உலகத்துக்கே தலைவிய இருக்கறவங்க, ஆன்மீக பயணத்துல கலக்குரவங்க, அம்பியுடன் அடிக்கடி மோதரவங்க, மொக்கை பதிவுகளால் கலக்குரவங்க, எவ்வளவு அடிச்சாலும் தாங்கரவங்க (கம்மென்ட்ட சொன்னேங்க..) இத்தனை பெருமைக்குரியவங்க கூப்பிட்டு நம்ம பதிவு போடலேனா நமக்கு தானே கேவலம்.. அதுனால தான் .. (இது என்ன புத்தாண்டு சபதமா இல்ல தலைவியின் பிரதாபமா?? அப்படின்னு சந்தேகமா இருக்கா .. என்ன பண்றது தலைவி தான் தன்னை பத்தி நல்லதா நாலு வார்த்தை எழுதனம்னு சொன்னாங்க....)
அவிங்களுக்கு என்ன கோவமோ என்ன இழுத்து விட்டுட்டாங்க.. பொதுவா எனக்கு இந்த சபத்துல எல்லாம் நம்பிக்கை கிடையாதுங்க.. நாம சபதம்னு ஒன்னு எடுத்தா அதை எப்படி பண்ணாம இருக்கறதுன்னு மொதல்ல பார்ப்போம். அது செஞ்சா என்னல்லாம் நெகடிவ் பாயிண்ட் இருக்குன்னு மொதல்ல தேடற நல்ல மனசு.. அதுனால இந்த வம்புக்கே நான் போறது இல்ல..
இந்த வாட்டி நம்மள எழுத சொன்னதால ஏதாவது சபதம் எடுக்கலாம்னு யோசிச்சி ரெண்டு எடுத்து இருக்கேன்..
1) மொதல்ல என்னோட ரங்கமணி நல்லா கவிதை எல்லாம் எழுதுவாரு.. இந்த வருஷம் முடியர்த்துக்குள்ள அவர ஒரு நல்ல கவிதை எழுத சொல்லி என்னோட பதிவுல அதை போடணும்.. (சே!! ரங்குவ கவிதை எழுத வைக்க நான் சபதம் போட வேண்டி இருக்கு.)
2) இந்த தடவை கொஞ்சம் நிறைய காமெடி பதிவு எழுதனும்.. (எதுக்கு உனக்கு வராதது எல்லாம் அப்படின்னு நீங்க கேகர்த்து காதுல விழுது.. ஆனா வராதத செய்யறது தானே சபதம்.. இல்லீங்கள??) ஹி ஹி ஹி ...

Sunday, December 16, 2007

மாதங்களில் நான் மார்கழி..



சென்ற ஆண்டு மார்கழி மாதத்தில் போட்ட பதிவு... சில மாற்றங்களுடன்..

மார்கழி மாததிற்கு என்ன சிறப்பு??

தேவர்களுக்கு நம்முடைய ஒரு ஆண்டு ஒரு நாளை போன்றது..ஒரு மாதம் அவர்களுக்கு இரண்டு மணி நேரம். அப்படி அவர்களின் ஒரு நாளில் இந்த மாதம் காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை. அவர்களின் பிரம்ம முகூர்தாமதலால் இது மிகவும் விசேஷமான மாதமாக கருதப்படுகின்றது..

கண்ணன் ஏன் மாதங்களில் தான் மார்கழி என்று கூறினான்...



மார்கழி மாத்தில் மட்டுமே எல்லா மதத்தினருக்கும் பண்டிகை அமைந்துள்ளது

இந்துக்களுக்கு - வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்,ஹனுமத் ஜெயந்தி..

கிறுத்துவர்களுக்கு - கிறுஸ்துமஸ்

முஸ்லீம்களுக்கு - பக்ரீத்

அது மட்டுமல்ல!!

மார்கழி மாதத்தில் தான் ஒஸோன் படலம் பூமிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.. இது காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பூமிக்கு மிக அருகாமையில் உள்ளது.. ஒஸோனை சுவாசித்தால் முடைய உடம்புக்கு நல்லது.. ஆகவே பெண்களை காலையில் கோலமும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர்...




ஆண்டாள் பிறந்த ஊரான ஸ்ரீவல்லிப்புத்தூரின் கோவில் கோபுரம் தான் நமது தமிழ்நாட்டின் சின்னமாக வைக்க பட்டுள்ளது..

மேற்கூறிய காரணங்களால் தான் மார்கழி மாதம் சிற்ப்பானதாக உள்ளது.காலையில் சீக்கிரமாக எழுந்து எல்லாரும் பயன் பெறுவோமாக..

Monday, November 19, 2007

சூறாவளி சுற்று பயணம் - புது டில்லி

டில்லில இந்திரா காந்தி அம்மையார் வீட்டை பார்த்த அப்புறம் போன இடம் குதுப் மினார்...



இரவு நேரத்தில் குதுப்மினார்

அழகான கட்டிட கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.. குதுப் உதின் ஐபக் என்பவரால் ஆரம்பிக்க பட்டு அவருடைய மருமகன் இல்டுமிஷ் என்பவரால் மேலும் சில மாடிகள் கட்டப்பட்டு பிருஸ் ஷா என்பவரால் முடிக்க பட்டது.. இது 72.5மீட்டர் உயரம் உடையது. உலகிலேயே மிக உயரமான கற்களால் செய்ய பட்ட மினரெட் இந்த குதுப்மினார் ....





குதுப்மினரோட அழக ரசிச்சிகிடே நாம அடுத்ததா போக போற இடம் தாமரை கோவில்.. இதுக்கு இன்னொரு பெயர் ஜந்தர் மந்தர்.. இந்த இடம் மிகவும் அழகாக தாமரை பூவை போன்று வடிவமைக்க பட்டுள்ளது.. ஒன்பது நுழைவாயில்களை கொண்ட இந்த கோவிலில் இரண்டயிராத்து ஐந்நூறு பேர் உட்காரும் வசதி படைத்தது ... இதன் உள்ளே நுழைந்தால் மனதில் ஒரு பெரிய அமைதி நம்மை ஆட்கொள்கிறது என்றால் மிகைஆகாது.. உள்ளே நுழைவதற்கு முன்பே நம்மை அமைதி காக்க வேண்டுகின்றனர்.


முகலாய கட்டிட கலைக்கு ஒரு குதுப்மினார் என்றால் நம்முடைய கட்ட கலைக்கு ஒரு அக்ஷர்தாம் கோவில் என்றால் அது தவறல்ல ..அழகான ராஜஸ்தானில் இருந்து எடுத்து வந்த பிங்க் நிற கற்களால் செய்ய பட்டுள்ளது...

மார்பிளிலும் சிற்பங்கள் செதுக்க பட்டுள்ளது.. நான் எத்தனை அந்த கோவிலை பற்றி கூறினாலும் அதன் அழகை நீங்களே கண்களால் கண்டு களியுங்கள்.. உங்கள் பார்வைக்காக சில படங்கள்..





அங்கு ஒரு மூன்று மணி வாக்கில் சென்றால் இரவு ஏழு மணி வரை நிடனமாக காணலாம்.. கேமரா, செல்போன் ஆகியவை உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை.. இரவில் விளக்குகளில் இதன் அழகை கான கண் கோடி வேண்டும். இரவில் இங்கு இசைகேற்ப நடமாடும் தண்ணீர் வீழ்ச்சி உள்ளது.. மற்றும் படகு சவாரியும் உள்ளது..
இதில் இன்ட்ரோ என்ற இடத்தில் க்ளிக்கவும்...இங்கு க்ளிக்கி அக்ஷர்தாமை நேரில் பார்த்த புண்ணியத்தை பெறவும்..

பதினேழு நிமிட வீடியோ பார்க்கவும்..

அடுத்து நாம் ஹரித்வாரில் சந்திப்போம்...

Thursday, November 15, 2007

சூறாவளி சுற்று பயணம் - தலைநகரம் டில்லி .....

அலகாபாத்லேர்ந்து ராத்திரி ரயில் ஏறி கார்த்தால ஏழு மணிக்கு டில்லி போய் சேர்ந்துடும்னு சொன்னாங்க... ஆனா கார்த்தால ஏழு மணிக்கு சொல்றாங்க.. மதியம் ஒரு பன்னிரெண்டு மணி ஆகிடும்னு சாதாரணமா சொல்றாங்க.. என்ன கொடுமை இது பிகர பார்த்த ஏமாந்த சிங்கம்லே ஏஸ்!!!! சரின்னு ரயில்ல கிடைச்ச பிரட் சாப்டுட்டு மதியம் சூப்பரா தலைநகரத்துக்கு வந்தாச்சு... வெயில் ஜாஸ்தியா இருந்துச்சு..


அங்கேர்ந்து ஹோடல்லுக்கு போய் நல்ல குளிச்சி கீழ போய் அன்னபூர்ணா அப்படின்னு ஒரு ஹோட்டல்ல சாப்டோம் சும்மா சொல்ல கூடாது சூப்பரா இருந்துது சாப்பாடு.. சாப்டுட்டு டில்லி சுத்தி பார்க்க கிளம்பியாச்சு... மொதல்ல போன இடம் இந்திரா காந்தி வீடு.. பெரிய வீடு.. நிறைய இருக்கு பார்க்க .. ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி இருவரின் சின்ன வயசு படங்கள் பார்க்க இனிமை..

ராஜிவ் காந்தி குழந்தையாக....


நேரு இந்திரா காந்தியின் கல்யாணத்துக்கு நெய்து குடுத்த புடவை....


இந்திரா காந்தியின் கணவர் அவருக்கு செய்து குடுத்த பரிசு ....


காலன் பிரதமரை சந்தித்த இடம்


காலனை சந்தித்த போது உடுத்தியிருந்த புடவை


ராஜிவ் காந்தியை குண்டுகள் துளைத்தப்போது அவர் அணிந்திருந்த உடை...

சந்தோஷத்தோடு வீட்டுக்குள் போன போதும் கனத்த மனசுடன் தான் வெளியே வர முடிகிறது... :(

மீண்டும் டில்லியில் சந்திக்கலாம் ... அடுத்த முறை குதூப் மினார், ஜந்தர் மந்தர் மற்றும் அக்ஷர்தம் கோவில்களை பார்க்கலாம்.....

Wednesday, November 14, 2007

சூறாவளி சுற்று பயணம் - அலகாபாத்

கயா எல்லாம் சுத்தி பார்த்தாச்சு.. புத்த கயா பார்க்க நேரமின்மை காரணமா அங்கேர்ந்து ரயில்ல அலகாபாத் வந்தாச்சு.. அலகாபாத்ல நிறைய இடங்கள் இருக்கு சுத்தி பார்க்க.. ஆனந்த் பவன், ஹனுமான் மந்திர், காளி கோவில் இப்படி நிறைய இருக்கு.. போய் சேர்ந்த அன்னிக்கி ரெஸ்ட். என்னா ரயில்ல போய் சேரும் போது இராத்திரி ஆகிடிச்சி.. அதனால போய் தூங்கிட்டு காலை ஏழு மணிக்கு எல்லாம் ரெடி ஆயாச்சு. அங்கே திருமதிகள் எல்லாம் வேணி தானம் அப்படின்னு ஒன்னு பண்றாங்க...



அது என்னனா தம்பதிகள் ரெண்டு பேரும் சேர்ந்து உக்கார்ந்து எனக்கு தெரிஞ்சோ தெரியாமலோ என்னோட கனவிலோ நினைவிலோ உனக்கு துரோகம் செஞ்சு இருந்தா அதை எல்லாம் இன்னியோட இந்த திரிவேணி சங்கமத்துல கரைசிக்கிரேன்.. இனிமே அந்த மாதிரி தவறுகள் செய்ய மாட்டேன் அப்படின்னு பூஜை செய்து திரிவேணி சங்கமத்துக்கு போய் அங்கே திருவாளர் திருமதிக்கி தலைக்கு பின்னல் போட்டு கடைசில கொஞ்சமா முடியை வெட்டி சங்கமத்துல போடணும். அது மட்டும் இல்லாம பூஜை செய்து சங்கமதுல குளிக்கும்போது புது புடவை கட்டிக்கணும் அதை நமக்கு பூஜை செய்றவங்களுக்கு தானமா குடுத்துட்டு வரணும். இங்கேயும் இறந்து போனவங்களுக்கு திதி குடுக்கறாங்க... கங்கை, சரஸ்வதி, யமுனா ஆகிய மூணு நதி சங்கமம் ஆகிற இடம் தான் திரிவேணி சங்கமம். கங்கையும், யமுனையும் தான் கண்ணுக்கு தெரியுது ஆனா சரஸ்வதி தெரிவது இல்ல.. ஏன்னா அது கண்ணுக்கு தெரியாம கீழ ஓடுவதாக ஐதீகம். நம்ம ஜடைல மூணு கால்கள் போட்டு பின்னல் போட்டாலும் ரெண்டு தான் தெரியும்.. அதுப்போல ....

சரி நம்ம திரிவேணி சங்கமத்துல குளிச்சாச்சு.... அங்கேர்ந்து வெளில வந்தவுடன் ஒரு ஹனுமான் கோவில் இருக்கு. முழுக்க தரைல செதுக்கினது சஞ்சீவி மலைய தூக்கிட்டு போகற மாதிரி.. அது எல்லாம் பார்த்துட்டு போய் சாப்டுட்டு மாலைல ஆனந்த பவன்..



இங்கே தான் நேருஜி அப்புறம் இந்திர காந்தி ரெண்டு பேரும் பிறந்தாங்க.. நேருஜி வளர்ந்த வீடு வாழ்ந்த வீடு ஒரு சின்ன டாகுமெண்டரி பிலிம் காட்றாங்க. அதுலேர்ந்து கொஞ்ச தூரத்துல துளசிதாசோட கோவில் அப்புறம் படே ஹனுமான் மந்திர், ஒரு தேவி கோவில் இருக்கு அலகாபாத்ல பார்க்க..




இது எல்லாம் சுத்தி பார்த்துட்டு நாம அடுத்ததா தலைநகர் டெல்லிக்கு பயணம் செய்ய போறோம்.. சரியா... மீண்டும் சந்திக்கலாம் டெல்லில ....

Tuesday, October 30, 2007

சூறாவளி சுற்றுப் பயணம்..கயா

எல்லாரும் சௌக்கியமா?? ரொம்ப நாள் ஆச்சு நான் என்னுடைய பயணத்தை பத்தி எழுதி... நான் எல்லாரையும் மாதிரி ஆணி கடப்பாரைன்னு எல்லாம் பொய் எல்லாம் சொல்ல மாட்டேன். எல்லாம் ஒரு சோம்பேறிதனம் தாங்க.. மன்னிச்சிகோங்க.
சரி போன பதிவுல வரானாசிக்குனு ஒரு மூணு தனி சிறப்பு இருக்குன்னு சொன்னேன் இல்லையா.. அது என்னனா அங்கே காக்கைகளே கிடையாது, மாடு முட்டாது, அப்புறம் அங்கே மணமுள்ள மலர்களே கிடையாது..

இது காசிலேர்ந்து கயா போகிற வழி...


இப்படியாக நல்லா காசிய சுத்தி பார்த்துட்டு அங்கேர்ந்து ஒரு கார்ல கயாக்கு கிளம்பினோம். காசிலேர்ந்து கயா ரோட்வழியா ஆறு மணிநேரம் ஆனது.. ஆனா டிரைவர் ஒரு எடத்துல கூட நிறுத்த மாட்டேன்னு சொல்லிட்டாரு.. அவ்வளவு நக்சல் பயம் வழி நெடுக. ஏதாவது ஹோட்ல்ல நிறுத்துங்க டீ குடிக்கனம்னு சொன்ன கூட முடியாதுன்னு சொல்லிட்டாரு. ஆத்திர அவசரத்துக்கு கூட முடியாதுன்னு சொல்லிட்டாரு.. அப்படி இப்படின்னு ஒரு வழியா ராத்திரி பத்து மணிக்கு வந்து சேர்ந்தோம் கயாக்கு... காலைல ஒரு ஏழு மணிக்கு எல்லா காரியங்களும் முடிச்சோம். எங்க கூட வந்த பெரியவங்க எல்லாம் இறந்து போனவங்களுக்கு காரியம் செய்ய போய்ட்டாங்க.

இது தான் விஷ்ணு பாதம் கோயில் ...

இது விஷ்ணு பாதம்...

இங்கே என்ன விசேஷம்னா இங்க இறந்து போனவங்களுக்கு ஒரு தரம் காரியங்கள் பண்ணிட்டா அப்புறம் வாழ்நாள் முழுக்க நம்மளால காரியம் பண்ண முடியலேனாலும் தவறு இல்ல. விஷ்ணு பாதம்னு ஒரு கோயில் இருக்கு அங்கே தான் இந்த காரியங்கள் எல்லாம் பண்றாங்க.


பால்குனி நதி ...

இந்த கோயில் பால்குனி நதிக்கரை ஓரத்துல இருக்கு. கயாசுர்னு ஒரு அசுரன் இருந்ததாகவும் அவனை விஷ்ணு தன்னுடைய காலால் மிதித்து கொன்று அவனை கல்லாக மாற்றியதாக தல புராணம். அப்படி மிதித்த போது ஏற்ப்பட்ட பாததிதின் சுவடை இந்த கோயிலில் வைத்து ஆராதனை செய்கின்றனர்.

ஆலமரம் ...

அதே போன்று மற்றொரு விசேஷமான விஷயம் இங்கே ஒரு ஆல மரம் இருக்கு அதன் மேல் பாகம் இங்கேயும் நடு பாகம் காசியிலும் வேர் பாகம் அலகாபாதிலும் இருப்பதாக கூறுகின்றனர். இந்த ஆல மரத்தை சாட்சியாக வைத்துக்கொண்டு தான் உங்களுக்கு மிகவும் பிடித்த பழம், காய்,ஸ்வீட் ஆகியவற்றை விட வேண்டும். உண்மையில் நமக்கு பிடித்துள்ள அகம்பாவம், கோவம், பொறாமை ஆகியவற்றை விட வேண்டும் கால போக்கில் அது மாறி விட்டது.

சரி கயா சுத்தி பார்த்தாச்சு.. இங்கேர்ந்து இருபத்தி ஐந்து கிலோமீட்டர் தூரத்துல தான் புத்தகயா இருக்கு இங்கே தான் புத்தர்க்கு போதி தந்த போதி மரம் எல்லாம் இருக்கு.. நேரமின்மை காரணமா நாங்க போகலை. சரி அடுத்து அலகாபாத் போக தயாரா இருங்க கூடிய விரைவில் சந்திக்கிறேன்.. :)

Wednesday, September 19, 2007

சூறாவளி சுற்றுப் பயணம்..வாரனாசி (2)

என்னங்க கங்கை ஆரத்தி எல்லாம் நல்லா பார்த்தீங்களா?? போய் சேர்ந்த அன்னிக்கி அது தான் பார்த்தேன்..



கங்கைக்கு சில புனிதங்கள் எல்லாம் இருக்கு..அந்த தண்ணில மாத்திரம் பாசியே பிடிக்காது அதுனால நீங்க எவ்வளவு நாட்கள் வேணும்னாலும் அதனை ஒரு பாட்டிலிலோ இல்ல சொம்பிலோ வச்சிக்கலாம். அந்த தண்ணீல குளிச்சா பாவம் எல்லாம் போயிடும்னு நம்பறாங்க..அவ்வளவு சக்தி இருக்கு அந்த தண்ணீல. எல்லா விதமான அசுத்தங்களையும் போக்கும் சக்தி அந்த ஜலத்துக்கு இருக்கு..


இந்த காட் அப்படிங்கறதுல ரெண்டே ரெண்டு காட்ல தான் இறந்து போனவர்களுக்கான காரியங்கள் செய்ய விடுவாங்க.. அது வந்து மனிகர்னிகா காட், ஹரிஷ் சந்திரா காட். இந்த இடங்களுல பிணத்தை எரிப்பதை எல்லாம் நாம கண்ணால பார்க்கலாம். இங்கே தச அச்வமேத காட் அப்படினு ஒண்ணு இருக்கு. இங்கே பத்து அஸ்வமேத யாகங்கள் பிரம்மா செய்ததாக ஐதிகம்.துளசி காட் அப்படிங்கறது வந்து துளசிதாஸுக்கு அப்புறமா பேர் வந்தது.. அதுக்கு முன்னாடி இதுக்கு லொலர்க் காட் அப்படின்னு பேர் இருந்ததா சொல்லறாங்க..இங்கே தான் துளசிதாசர் தன்னோட ராமாயணத்தை பாடினதா சொல்றாங்க. அப்படி பாடும் போது அவருடைய சுவடி கங்கையில் விழுந்துவிட்டதாம். ஆனாலும் அச்சுவடி தண்ணீல முழுகாம மேலேயே மிதந்ததாம்.



அடுத்த நாள் காலையில ஒரு படகுல எல்லாரும் ஏறி ஹசி காட்லேர்ந்து ஒவ்வொரு காட்டா பார்த்து ரசிச்சிக்கிட்டே பஞ்ச கங்கா காட் கிட்ட வந்தாச்சுஅங்கேதான் இறங்கி கங்கைல குளியல்..குளியல் போட்ட அப்புறம் அங்கேயே மேலே வேணி மாதவன் கோயில் பார்க்கலாம்.அங்கே போய் அதை பார்த்த அப்புறம் அங்கேர்ந்து கொஞ்ச தூரத்துல காசி விஸ்வநாதர் கோயில் இருக்கு.. ரொம்ப சின்னதா இருக்கு இந்த கோயில்.. அதுக்கு பக்கத்துல நந்திக்கு தனியா ஒரு கோயில் இருக்கு அங்கேர்ந்து பார்த்தா ஒரு மசூதி தெரியும். முன்னாடி அதுதான் காசி விஸ்வனாதர் கோயிலா இருந்ததாக கூறுகின்றனர்..



காசி விஸ்வனாதர் தரிசனத்துக்கு பால், தூத்பேடா,கங்கை ஜலம், வில்வ மாலை எல்லாம் எடுத்துட்டு போறாங்க.கோயிலுக்குள் ஒரு பேனா கூட எடுத்து போக முடியாத படி பாதுக்காப்பு போட்டு வச்சிருக்காங்க.. அதுனால வெறும் கைய வீசிட்டு போவது நல்லது. இல்லாட்டி அங்கே ஏதாவது கடையில தான் வச்சிட்டு போகனும்.


காசி விஸ்வநாதரை தரிசனம் செஞ்சுட்டு வந்தா அப்புறம் விசலாட்க்ஷி,அன்னப்பூரணி அப்புறம் வட விருட்ஷம்
இது எல்லாம் தரிசனம் செய்யலாம்.இந்த வட விருட்ஷம் அப்படிங்கறது என்னனா ஒரு ஆல மரம். அதோட இலை எல்லாம் கயாவிலும், தண்டு இங்கே காசிலயும், வேர் அலகாபாத்லயும் இருக்கறதா ஐதிகம். காசிக்குனு ஒரு மூணு விஷயம் ப்ரபலமா இருக்கு அது என்னனு அடுத்த பதிவுல பார்க்கலாமா??
மீண்டும் காசியில் சந்திப்போம்...