Friday, September 18, 2009

நவராத்திரி ஸ்பெஷல்!!!!

அழகியின் ஒன்பது அவதாரங்கள்!!!!

எல்லாமே ரொம்ப அழகா இருக்குல்ல... (உடைகளை தான் சொன்னேன்.. :))

யாருக்காவது ஏதாவது கவிஜை தோனிச்சுனா தயவு செய்து கம்மன்டவும்..









Thursday, September 10, 2009

பிசி பேளா ஹுளி அன்னா..

எனதருமை தம்பி திரு.கில்ஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த சமையல் குறிப்பு..

முதலில் இதற்கு தேவையான பொடி செய்வது எப்படின்னு பார்க்கலாம்...

பொடி செய்ய தேவையான பொருட்க்கள்...
காய்ந்த மிளகாய் - 6
ஜீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
தனியா - 3 டீஸ்பூன்
கிராம்பு - 4
பட்டை - 2 துண்டு
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
துருவிய கொப்பரை - 1 கப்..
எண்ணெய் - வறுக்க தேவையான அளவு..

மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்று ஒன்றாக வறுத்து பின்பு கரகரப்பாக பொடி செய்து வைத்து கொள்ளவும்.. தேவையான சமயத்தில் உபயோகிக்கலாம்..




துவரம் பருப்பு - 1/2 கப்
அரிசி - 1 கப்
புளி - 1/2 கப் (நன்றாக கெட்டியாக கரைத்தது.. )
அறிந்த காய்கறிகள் - 1/2கப்( காரட், உருளை கிழங்கு, பீன்ஸ், பட்டாணி)
அறிந்த பச்சை மிளகாய்- 4
நெய் - 1tbsp
கடுகு - 1/2 tsp
மஞ்சள் பொடி - 1 tsp
கருவேப்பிலை - சிறிதளவு
கடலை பருப்பு - 1/2 tsp
உளுத்தம் பருப்பு - 1/2 tsp
முந்திரி பருப்பு - 3 tsp
உப்பு - தேவைக்கேற்ப

அரிசி பருப்பு இரண்டையும் நன்கு களைந்து அனைத்து காய்கறிகளையும் சேர்த்து
மஞ்சள் பொடி, பிசி பேளா பொடி உப்பு சேர்த்து குக்கரில் ஒரு கப்புக்கு நான்கு கப் வீதம் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைத்துக்கொள்ளவும். பிறகு குக்கரை திறந்து நன்றாக கொதிக்க வைத்த புளி தண்ணீரை அதில் சேர்த்து கிளறவும்.. நெய்யில் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு, கருவேப்பிலை அனைத்தையும் தாளித்து அதில் சேர்த்து சுட சுட ராய்தாவுடன் பரிமாறவும்.. அப்பளத்துடனும் பரிமாறலாம்..