Monday, November 19, 2007

சூறாவளி சுற்று பயணம் - புது டில்லி

டில்லில இந்திரா காந்தி அம்மையார் வீட்டை பார்த்த அப்புறம் போன இடம் குதுப் மினார்...



இரவு நேரத்தில் குதுப்மினார்

அழகான கட்டிட கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.. குதுப் உதின் ஐபக் என்பவரால் ஆரம்பிக்க பட்டு அவருடைய மருமகன் இல்டுமிஷ் என்பவரால் மேலும் சில மாடிகள் கட்டப்பட்டு பிருஸ் ஷா என்பவரால் முடிக்க பட்டது.. இது 72.5மீட்டர் உயரம் உடையது. உலகிலேயே மிக உயரமான கற்களால் செய்ய பட்ட மினரெட் இந்த குதுப்மினார் ....





குதுப்மினரோட அழக ரசிச்சிகிடே நாம அடுத்ததா போக போற இடம் தாமரை கோவில்.. இதுக்கு இன்னொரு பெயர் ஜந்தர் மந்தர்.. இந்த இடம் மிகவும் அழகாக தாமரை பூவை போன்று வடிவமைக்க பட்டுள்ளது.. ஒன்பது நுழைவாயில்களை கொண்ட இந்த கோவிலில் இரண்டயிராத்து ஐந்நூறு பேர் உட்காரும் வசதி படைத்தது ... இதன் உள்ளே நுழைந்தால் மனதில் ஒரு பெரிய அமைதி நம்மை ஆட்கொள்கிறது என்றால் மிகைஆகாது.. உள்ளே நுழைவதற்கு முன்பே நம்மை அமைதி காக்க வேண்டுகின்றனர்.


முகலாய கட்டிட கலைக்கு ஒரு குதுப்மினார் என்றால் நம்முடைய கட்ட கலைக்கு ஒரு அக்ஷர்தாம் கோவில் என்றால் அது தவறல்ல ..அழகான ராஜஸ்தானில் இருந்து எடுத்து வந்த பிங்க் நிற கற்களால் செய்ய பட்டுள்ளது...

மார்பிளிலும் சிற்பங்கள் செதுக்க பட்டுள்ளது.. நான் எத்தனை அந்த கோவிலை பற்றி கூறினாலும் அதன் அழகை நீங்களே கண்களால் கண்டு களியுங்கள்.. உங்கள் பார்வைக்காக சில படங்கள்..





அங்கு ஒரு மூன்று மணி வாக்கில் சென்றால் இரவு ஏழு மணி வரை நிடனமாக காணலாம்.. கேமரா, செல்போன் ஆகியவை உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை.. இரவில் விளக்குகளில் இதன் அழகை கான கண் கோடி வேண்டும். இரவில் இங்கு இசைகேற்ப நடமாடும் தண்ணீர் வீழ்ச்சி உள்ளது.. மற்றும் படகு சவாரியும் உள்ளது..
இதில் இன்ட்ரோ என்ற இடத்தில் க்ளிக்கவும்...இங்கு க்ளிக்கி அக்ஷர்தாமை நேரில் பார்த்த புண்ணியத்தை பெறவும்..

பதினேழு நிமிட வீடியோ பார்க்கவும்..

அடுத்து நாம் ஹரித்வாரில் சந்திப்போம்...

Thursday, November 15, 2007

சூறாவளி சுற்று பயணம் - தலைநகரம் டில்லி .....

அலகாபாத்லேர்ந்து ராத்திரி ரயில் ஏறி கார்த்தால ஏழு மணிக்கு டில்லி போய் சேர்ந்துடும்னு சொன்னாங்க... ஆனா கார்த்தால ஏழு மணிக்கு சொல்றாங்க.. மதியம் ஒரு பன்னிரெண்டு மணி ஆகிடும்னு சாதாரணமா சொல்றாங்க.. என்ன கொடுமை இது பிகர பார்த்த ஏமாந்த சிங்கம்லே ஏஸ்!!!! சரின்னு ரயில்ல கிடைச்ச பிரட் சாப்டுட்டு மதியம் சூப்பரா தலைநகரத்துக்கு வந்தாச்சு... வெயில் ஜாஸ்தியா இருந்துச்சு..


அங்கேர்ந்து ஹோடல்லுக்கு போய் நல்ல குளிச்சி கீழ போய் அன்னபூர்ணா அப்படின்னு ஒரு ஹோட்டல்ல சாப்டோம் சும்மா சொல்ல கூடாது சூப்பரா இருந்துது சாப்பாடு.. சாப்டுட்டு டில்லி சுத்தி பார்க்க கிளம்பியாச்சு... மொதல்ல போன இடம் இந்திரா காந்தி வீடு.. பெரிய வீடு.. நிறைய இருக்கு பார்க்க .. ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி இருவரின் சின்ன வயசு படங்கள் பார்க்க இனிமை..

ராஜிவ் காந்தி குழந்தையாக....


நேரு இந்திரா காந்தியின் கல்யாணத்துக்கு நெய்து குடுத்த புடவை....


இந்திரா காந்தியின் கணவர் அவருக்கு செய்து குடுத்த பரிசு ....


காலன் பிரதமரை சந்தித்த இடம்


காலனை சந்தித்த போது உடுத்தியிருந்த புடவை


ராஜிவ் காந்தியை குண்டுகள் துளைத்தப்போது அவர் அணிந்திருந்த உடை...

சந்தோஷத்தோடு வீட்டுக்குள் போன போதும் கனத்த மனசுடன் தான் வெளியே வர முடிகிறது... :(

மீண்டும் டில்லியில் சந்திக்கலாம் ... அடுத்த முறை குதூப் மினார், ஜந்தர் மந்தர் மற்றும் அக்ஷர்தம் கோவில்களை பார்க்கலாம்.....

Wednesday, November 14, 2007

சூறாவளி சுற்று பயணம் - அலகாபாத்

கயா எல்லாம் சுத்தி பார்த்தாச்சு.. புத்த கயா பார்க்க நேரமின்மை காரணமா அங்கேர்ந்து ரயில்ல அலகாபாத் வந்தாச்சு.. அலகாபாத்ல நிறைய இடங்கள் இருக்கு சுத்தி பார்க்க.. ஆனந்த் பவன், ஹனுமான் மந்திர், காளி கோவில் இப்படி நிறைய இருக்கு.. போய் சேர்ந்த அன்னிக்கி ரெஸ்ட். என்னா ரயில்ல போய் சேரும் போது இராத்திரி ஆகிடிச்சி.. அதனால போய் தூங்கிட்டு காலை ஏழு மணிக்கு எல்லாம் ரெடி ஆயாச்சு. அங்கே திருமதிகள் எல்லாம் வேணி தானம் அப்படின்னு ஒன்னு பண்றாங்க...



அது என்னனா தம்பதிகள் ரெண்டு பேரும் சேர்ந்து உக்கார்ந்து எனக்கு தெரிஞ்சோ தெரியாமலோ என்னோட கனவிலோ நினைவிலோ உனக்கு துரோகம் செஞ்சு இருந்தா அதை எல்லாம் இன்னியோட இந்த திரிவேணி சங்கமத்துல கரைசிக்கிரேன்.. இனிமே அந்த மாதிரி தவறுகள் செய்ய மாட்டேன் அப்படின்னு பூஜை செய்து திரிவேணி சங்கமத்துக்கு போய் அங்கே திருவாளர் திருமதிக்கி தலைக்கு பின்னல் போட்டு கடைசில கொஞ்சமா முடியை வெட்டி சங்கமத்துல போடணும். அது மட்டும் இல்லாம பூஜை செய்து சங்கமதுல குளிக்கும்போது புது புடவை கட்டிக்கணும் அதை நமக்கு பூஜை செய்றவங்களுக்கு தானமா குடுத்துட்டு வரணும். இங்கேயும் இறந்து போனவங்களுக்கு திதி குடுக்கறாங்க... கங்கை, சரஸ்வதி, யமுனா ஆகிய மூணு நதி சங்கமம் ஆகிற இடம் தான் திரிவேணி சங்கமம். கங்கையும், யமுனையும் தான் கண்ணுக்கு தெரியுது ஆனா சரஸ்வதி தெரிவது இல்ல.. ஏன்னா அது கண்ணுக்கு தெரியாம கீழ ஓடுவதாக ஐதீகம். நம்ம ஜடைல மூணு கால்கள் போட்டு பின்னல் போட்டாலும் ரெண்டு தான் தெரியும்.. அதுப்போல ....

சரி நம்ம திரிவேணி சங்கமத்துல குளிச்சாச்சு.... அங்கேர்ந்து வெளில வந்தவுடன் ஒரு ஹனுமான் கோவில் இருக்கு. முழுக்க தரைல செதுக்கினது சஞ்சீவி மலைய தூக்கிட்டு போகற மாதிரி.. அது எல்லாம் பார்த்துட்டு போய் சாப்டுட்டு மாலைல ஆனந்த பவன்..



இங்கே தான் நேருஜி அப்புறம் இந்திர காந்தி ரெண்டு பேரும் பிறந்தாங்க.. நேருஜி வளர்ந்த வீடு வாழ்ந்த வீடு ஒரு சின்ன டாகுமெண்டரி பிலிம் காட்றாங்க. அதுலேர்ந்து கொஞ்ச தூரத்துல துளசிதாசோட கோவில் அப்புறம் படே ஹனுமான் மந்திர், ஒரு தேவி கோவில் இருக்கு அலகாபாத்ல பார்க்க..




இது எல்லாம் சுத்தி பார்த்துட்டு நாம அடுத்ததா தலைநகர் டெல்லிக்கு பயணம் செய்ய போறோம்.. சரியா... மீண்டும் சந்திக்கலாம் டெல்லில ....