Friday, March 30, 2007

மல்லிகா ஷெராவத்தின் அரிய புகைப்படம்.!!!

மல்லிகா ஷெராவத்தின் இது வரை யாரும் காணாத புகைப்படம் எனக்கு சமீபத்தில் கிடைத்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறென்.. நீங்களும் கண்டு போற இடத்துக்கு புண்ணியம் சேர்த்துக்கோங்க..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Scroll down
.
.
.
.
.
.
.
.
.
.
அரிய புகைப்படத்தை பார்க்க கொஞ்சம் சிரமம் எடுங்க...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.



என்னங்க படம் பார்த்தீங்களா?? புடிச்சுதா?? இதுக்கா இவ்வளவு பில்ட்ப்புனு கேட்கற்து காதுல விழுது.. என்ன பண்றது மல்லிகா புடவை கட்டறது அரிய விஷயம் தானே.. அதுனால தான் இது அரிய புகைப்படம்..

எப்படி விளக்கம்.. சூப்பரா?? சரி வந்தது வந்தீங்க நிறைய கமெண்ட போட்டுட்டு போங்க...

Thursday, March 29, 2007

5 Weird Things!!!

"அடுத்த பதிவு எல்லாரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் "மல்லிகா ஷெராவத்தின் அரிய புகைப்படம்."உங்களுடைய ப்ரவுஸர்களில்

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி.. அந்த மாதிரி அழகா சமூக சேவை மட்டுமே தேவைனு இருந்த என்னை மாட்டி விட்டுடாரு பரணி.

நம்மளுக்கு தான் எழுதவே தெரியாதே !! அதுனால தான் படத்தை படத்தை போட்டு ஒட்டிட்டு இருக்கோம் .. இது தெரியாத ஒரு சில நல்ல அத்மாக்கள் நம்மளுக்கு ஒரு டாக்டர் பட்டம் குடுத்து கௌரவிச்சிட்டாங்க..



1) ஒண்ணு :- எனக்கு சில நடிகர்/ நடிகைகள் எல்லாரையும் ரொம்ப பிடிக்கும். (இதுல என்ன வியர்ட்னு கேட்கர்து எனக்கு தெரியுது!!) என்னனா, எனக்கு அவங்களோட ரொம்ப நல்ல நண்பியா இருக்கணம்னு ஒரு ஆசை வரும் அடிக்கடி.இப்போ எனக்கு விக்ரம ரொம்ப பிடிக்கும் .அவரோட ஒரு நல்ல பிரண்டா இருக்கணம்னு ஆசை. (நடக்காதுனு தெரியும்..ஆனா யாரும் ரங்கமணிக்கிட்ட போட்டு குடுத்துடாதீங்க..!!!)
அப்பா!! ஒரு வழியா விக்ரம் போடறத்துக்கு ஒரு சான்ஸ் கிடைச்சுது!!!



2) டூ :- எங்க வீட்டுல ரெண்டு பாத்ரூம் இருக்கு. (அதான் எல்லாருடைய வீட்லையும் இருக்கேன்னு சொல்லப்படாது) எனக்கு ஒரு குறிப்பிட்ட பாத்ரூம்லதான் குளிக்க பிடிக்கும். இதுக்கு ரெண்டு பேருக்கும் சண்டை வரும்.. இதுல வேற நான் தான் சொந்த செலவுல சூன்யம் வச்சிண்டு இருக்கேனே அம்பினு ஒருத்தர அவர் வேற மறக்காம நாராயணா!! நாராயணா!! வேலைய செய்வாரு.


3) தீன்:- எனக்கு ஒருத்தர பிடிச்சி போச்சுனா அவங்களை பத்தின ஹிஸ்டரி ஜியாக்ரபி எல்லாம் தெரிஞ்சுக்க கொஞ்சம் யோசிப்பேன். எனக்கு அது எல்லாம் தேவையில்லாததுனு நினைப்பேன்.


4) நாலுகு:- இந்த கீரைக்காரி, பூக்காரி இவங்க கிட்ட பேரம் பேசறது பிடிக்காது. அவங்களுக்கே ஒரு ஒரு ரூபா, இரண்டு ரூபா கிடைக்கும் அதுல வேற ஏன் நாம் கைய வைக்கணும்? நகை கடை, புடவை கடை இங்கே எல்லாம் நம்பளால பேரம் பேச முடியுமா??


5) ஐது:- எந்த விஷயத்துக்கு சிலர் கோப படுவாங்களோ அதுக்கு நான் கோபமே படமாட்டேன். ஆனா சின்ன விஷயத்துக்கு ரொம்ப கோப படுவேன். அதே மாதிரி நான் சொன்ன விஷயத்தை உடனே ஒ.கேனு சொல்லிடனும். இல்லாட்டி அப்புறம் எத்தனை தடவை என்னை கன்வின்ஸ் பண்ணினாலும் நோ தான்.

அப்பாடி ஒரு வழியா அஞ்சு விஷயம் எழுதியாச்சு..

இப்போ இன்னும் அஞ்சு பேருக்கு ஆப்பு.

1) தகவல் தொடர்பு துறை அமைச்சர் அம்பி..பக்கத்து வீட்டுல இருந்துண்டு இது கூட செய்யலேனா எப்படி??
2) மனம் விரும்புதே உன்னை சுமதி
3) Close your eyes டீரிம்ஸ்.
4)பூவாகவே ராஜி
5) சர்வம் கிருஷ்ணார்ப்பணம் வேதா

நீயே வியர்ட் தான் .. உன்னை போய் ஒருத்தன்/ஒருத்தி டாக் பண்ணினாங்க பாரு.. அவங்க எவ்வளவு வியர்டா இருப்பாங்கனு என்னோட ரங்கமணி கேக்கறாரு...

Che Family total damage

Tuesday, March 27, 2007

ஸ்ரீராம நவமி





இன்று ஸ்ரீராம நவமி!!!
அதுக்கு என்னனு கேக்கரீங்களா?? இல்ல நீங்க கேக்கலேனா நான் தான் சொல்லாம் விட்டுடுவேனா??


நாம இந்த அஷ்டமி நவமி ஆகிய இரண்டு திதிகள்லேயும் எந்த நல்ல காரியமும் செய்யரது இல்லை. அதுனால இந்த ரெண்டு திதிக்கும் கோவம் வந்துச்சாம். ரெண்டு திதியும் அவர்களோட அதிபதி கிட்ட இதை பத்தி புகார் செஞ்சுதாம். அதுனால தான் கிருஷ்னரும், ராமரும் அஷ்டமி மற்றும் நவமி திதிகள்ல அவதாரம் செஞ்சு ஒரு பெருமைய தேடி தந்தாங்க.


பெற்றோர் சொல்லை மதிப்பது, உடன் பிறப்புக்களை நேசிப்பது, மாற்றான் தாயின் பிள்ளையாய் இருந்தாலும் அவங்களிடம் அன்பு செலுத்துவது இப்படி பல நல்ல குணங்களை நாம இராமர்கிட்டேர்ந்து கத்துக்கணும்.

வித்தையை கற்று குடுத்த குருவை மதிப்பது, எல்லாரிடமும் ஏற்ற தாழ்வு பாராட்டாமல் நட்பு பாராட்டுவது, வாழ்க்கைல வருகின்ற ஏற்ற தாழ்வுகளை புரிந்து கொள்வது,மாற்றான் பொருளுக்கு ஆசை படாமல் இருப்பது, எதிரி நிராயுதபாணியாக இருப்பின் அவனுடன் சண்டை போடாமல் இருப்பது, ஆண்டவனிடம் எதிர்ப்பார்ப்பு இல்லாத அன்பு செலுத்துவது இப்படி நிறைய நாம் இந்த ஸ்ரீராமநவமில கத்துப்போமே..
எல்லாருக்கும் கத்துக்குடுப்போமே.




இது வந்து ராமர் அந்த காலத்துல ஸ்ரீலங்காவுக்கு கட்டின பாலத்தோட சாடிலைட் போட்டோ.

Monday, March 26, 2007

தீபம் ஏற்றலாம் வாங்க!!!



டிஸ்கி:- இது ஒரு சீரியஸான பதிவு!!!

எல்லா இந்துக்களின் வீடுகளிலும் தீபம் ஏற்றும் பழக்கம் உண்டு..சில வீடுகளில் மாலையில் ஏற்றும் பழக்கமும். சில வீடுகளில் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளையிலும் ஏற்றும் பழக்கமும் உண்டு. சிலர் நாள் முழுவதும் (அகண்ட தீபம்) ஏற்றும் பழக்கமும் உண்டு.எந்த விசேஷம்/விழாவாக இருந்தாலும் நாம் தீபம் ஏற்றி அந்த விசேஷம்/விழா முடிவு பெறும் வரை அந்த தீபம் அணையாமல் காப்போம்...



ஒளி என்பது இருள் மற்றும் வெளிச்சம் இரண்டையும் குறிக்கும்.கடவுளே ஞானத்தின் ஆதாரமாகவும் அதன் ஒளியை நமக்கு ஏற்றுபவராகவும் கருதப்படுகின்றார். நாம் தீபத்தை வழிபடுவதற்க்கும் இதுவே மூலக்காரணம். இருளை ஒளி நீக்குவது போல அஞ்ஞானத்தை ஞானம் நீக்குகின்றது.

ஞானம் ஒன்றே நமக்கு அழியாத சொத்து. அது நம்மிடம் இருந்தால் நம்மால் மற்ற எல்லா செல்வங்களையும் அடைய முடியும்.அதனால் தான் நாம் தீபத்தை ஏற்றி ஞானத்திற்க்கு தலை வணங்குகிறோம்.
இருளை நீக்க எந்த விளக்காக இருந்தால் என்ன? தீபம் ஏன் ஏற்ற வேண்டும்? அதற்கும் ஒரு தாத்பர்யம் உள்ளது.


தீபத்தில் உள்ள நெய்/எண்ணை நம்முடைய தேவையற்ற குணங்கள்.
அதிலுள்ள திரியானது நம்முடைய அகங்காரமாகும். ஆன்மீக ஞானத்தால் நம்முடைய தேவையற்ற குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நம்முடைய அகங்காரம் முழுவதுமாக அழிந்துவிடுகின்றது.


நாம் தீபம் ஏற்றும்போது இவ்வாறு சொல்கிறோம்..
தீபஜோதி பரம்ப்ரம்மா
தீப சர்வ தமோபாஹஹா
தீபனே சாத்யதே சாரம்
சந்தியா தீபோ நமோஸ்துதே.
இதன் விளக்கம்.
ஞானம் என்னும் ஒளியால் அஞ்ஞானம் என்னும் இருளை நீக்கி அதன் மூலம் வாழ்க்கையில் அனைத்தும் பெற செய்யும் தீபத்தை நான் வணங்குகிறேன்.

Sunday, March 25, 2007

GOOD MORNING EVERYONE!!!




இந்த போட்டோ சிறியதாக உள்ளது.. தயவு செய்து அதன் மேல் கிளிக் செய்து பெரியதாக்கி படிக்கவும்..சிரமத்துக்கு மன்னிக்கவும்.


பி.கு:-
விரைவில் எதிர் பாருங்கள் "மல்லிகா ஷெராவத்தின் அரிய புகைபடம்"உங்களுடைய அபிமான ப்ரவுஸர்களில்

Friday, March 23, 2007

ஆண்களுக்கான பதிவு - Part II !!!!

முதல் பகுதி இங்கே பார்க்கவும்...

இப்போ பகுதி இரண்டு!!!



ஒரு பெண் உங்களிடம் மயங்க நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து!!!
1) நீ இன்று மிகவும் அழகாக இருக்கிறாய் அப்படினு தினமும் சொல்லனும்
2) இந்த கலர் ரொம்ப பொருத்தமா இருக்கு உனக்கு அப்படினு எந்த கலர் போட்டுக்கிட்டாலும் சொல்லனும்.
3) நீ இப்போ எல்லாம் ஒழுங்காவே சாப்பிடுவது இல்லை (ரொம்ப இளைத்து போய்விட்டாய்)னு சொல்லனும்.
4) ஒவ்வோரு நாளும் உன் வயது குறைந்துக்கொண்டே வருகிறதுனு சொல்லனும்.
5)உன்னுடன் பேசும் போது என் கவலை எல்லாம் பஞ்சா பறந்து போகுதுனு சொல்லனும்.



ஒரு பெண்ணை ஆச்சர்யப்படுத்த செய்ய வேண்டிய ஐந்து!!
1)போன் செஞ்சு அவங்க எதிர்ப்பார்க்காத தருணத்தில் நான் உன்னை காதலிக்கிரேன்னு சொல்லனும்.
2) அவங்க வேலை செய்யற ஆபீஸுக்கு அப்பப்போ பூ மற்றும் சாக்லேட் அனுப்பனும்.
3) மெழுகுவர்த்தி ஒளியில் ஒரு டின்னருக்கு கூட்டி போகனும்.
4) அவங்க நீண்ட நாளா வாங்கனம்னு இருக்கிற விஷயத்தை வாங்கி குடுத்து ஆச்சர்யபடுத்தனும்.
5) இரண்டு பேர் மட்டும் தனியாக ஊருக்கு சென்று அங்கு அவங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கவும்.

எல்லாவற்றையும் விட சுலபமான வழி நம்ம அம்பி சொல்லிட்டாரு..ப்ளாக் எழுதனுமாம்..(செய்தி தொடர்புதுறை அமைச்சராச்சே.. தட்டாதீங்க!!!)

இத பார்த்துட்டு என்னொட ரங்கமணியோட புலம்பல்கள்..போட்ட பத்து விஷயத்துக்கும்..

1) இல்லாட்டி பூரி கட்டை தான் பறக்கும்.
2) எந்த கலர் போட்டாலும் ஒரு வித்தியாசமும் தெரியல. தலையெழுத்து.
3) ஆமாம் ரொம்ப இளைத்து தான் போயிட்டே.. முன்னாடி ஆல்டோ கார் வச்சி இருந்தேன்.. இப்போ மடடார் வான் வச்சி இருக்கேன்.
4) ஆமாமாம் என்னோட பாட்டியோட பார்த்தா நீ இளமையா தான் இருக்கே..
5) உன்னோட பேசறத விட எனக்கு கவலையான விஷயம் இல்லை அது தான்.
6) அவஙக எதிர்பார்க்காத தருணத்தில் அப்படினா நம்ம சுயநினைவு இழந்து இருக்கும் போதுனு அர்த்தம்.
7) அப்போ தானே அவங்க ஆபீஸ்ல இருக்கிறவங்க எல்லாம் கொஞ்சம் நம்ம கஷ்டத்தை புரிஞ்சுக்கிட்டு யாரும் கல்யாணமே பண்ணிக்க மாட்டாங்க.
8) நிறைய லைட் எல்லாம் இருந்து உன்னோட முகத்தை பார்த்தா அப்புறம் சாப்பிட்ட மாதிரி தான்.
9) என்ன பெரிய நீண்ட நாள் ஆசை.. எங்க அம்மாவ விட எல்லா தீபாவளிக்கும் அதிகமா ஜரிகை போட்ட புடவை வேணும் அது தானே?
10) இரெண்டு பேர் மாத்திரம் ஊருக்கு போகாம பின்ன என்னோட நண்பர்களை வேற கூட்டிப் போய் நான் உங்கிட்ட படற அவஸ்த்தை எல்லாம் தெரிஞ்சுக்கணுமா??
11) @ அம்பி: இதெல்லாம் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி சொல்ல கூடாதா??? நல்லா இரு!!! ம்ம்ம்ம் நான் எதுவும் கேக்கலை !!! எனக்கில்லை எனக்கில்லை!! சொக்கா!!

Thursday, March 22, 2007

ப்ளாக்கர்களே!! என் சோக கதையை கேளுங்கள்!!!




நான் இருப்பது இந்தியாவின் சிலிக்கான் நகரமான பெங்களூர்ல.. இதுல என்ன சோகம்னு கேக்கரீங்களா?? சொல்ரேன் கேளுங்கபப்பு.. கேட்டுட்டு நீஙகளே ஒரு தீர்ப்பு சொல்லுங்க!!!
இங்க வார இறுதிகளில் எல்லாருக்கும் ரெண்டு முக்கியமான வேலை உண்டு!!ஒண்ணு பப்புக்கு(Pub) போறது இண்ணொன்னு மாலுக்கு (Shopping Mall) போறது!!!

ஷாப்பிங் மால்ல போய் ஷாப்பிங் எல்லாம் பண்ண முடியாது.. பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை வேடிக்கை பார்த்த மாதிரி வேடிக்கை தான் பார்க்கணும்!!
அதை தவிர இப்போ தான் எல்லா ஷாப்பிங் மால்லயும் புட் கோர்ட் அப்படின்னு ஒண்ணு வந்திருக்கே!! அங்கே போய் சாப்பிட வேண்டியது தான்!!! (பின்ன வாரம் முழுக்க வீட்டிலேயே சமைச்சா எப்படி .. ஒரு சேஞ்சு வேண்டாம்!!!)

நானும் என்னோட ரங்கமணியும் எல்லாத்துலயும் ஏழாம் பொருத்தம்...
அவரு சினிமாக்கு போகலாம்னு சொன்னா நான் சாப்பிட போகலாம்னு சொல்லுவேன்...
அவரு ஷாப்பிங் போகலாம்னு சொன்னா நான் சினிமாவுக்கு போகலாம்னு சொல்லுவேன்...
இந்த மாதிரி ரொம்ப ஒருதருக்கோருத்தர் விட்டு கொடுத்து கடைசில எங்கேயும் போகமாட்டோம்!!!அப்படி ஒரு ராசி!!

அப்படி பட்ட ஒரு வார இறுதில தான் எனக்கு ஒரு அனுபவம்...


அப்படி தான் ஒரு வாரம் ரெண்டு பேரும் ரொம்ப பொருந்தி வந்து சரி சினிமாவுக்கு போகலாம்னு முடிவு பண்ணி ஒரு மாலுக்கு போயாச்சு!!!


சரி நம்ப தமிழ் படம் மொழி ரொம்ப நல்லா இருக்குனு போனோம்...

அங்கே போனா படத்தோட பானர் எல்லாம் தொங்க விட்டிருந்தாங்க!! ஒரே சந்தோஷம்... சரினு டிக்கட் கவுண்ட்டர்க்கு போய் மொழி படத்துக்கு ரெண்டு டிக்கட் குடுங்கனு பணத்தை நீட்டினா கவுண்டர்ல டிக்கட் குடுக்குறவர் ஒரு பார்வை பார்த்தாரு பாருங்க.. கஷ்டமா போச்சு!!!

என்னடானு கேட்டா பெங்களூர்ல எங்கயுமே தமிழ் படமே ஒடர்து இல்லயே உங்களுக்கு தெரியாதானு கேட்டாரு...
ஏங்கனு நான் அப்பாவியா கேட்க அவரு அப்படியே பார்வையலயே சிவ பெருமான் மாதிரி நம்பள எரிச்சுடுவாரு போல இருந்து.. காவிரி ப்ரச்சனைக்காக தமிழ் படமே ரீலீஸ் பண்ரது இல்லைனு சொல்லிட்டாரு.. ஒரே அழுகாச்சி அழுக்காச்சி வந்துச்சு எனக்கு... என்னடா இது ஒரு நாளும் இல்லாம திருநாளுக்கு போனா திருநாளும் வெறுந்நாளா ஆன கதையாயிடிச்சேன்னு ஒரு ஹிந்தி படத்தை பார்த்துட்டு வந்தேன்....

எனக்கு சந்தேகம் இது தான்...
1) காவிரி தீர்ப்புக்கும் தமிழ் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்?
2) உதயா, கிரன் எல்லாம் சன் டிவியோட கன்னடா சேனல் தானே.. அப்போ ஏன் அது எல்லாம் மட்டும் ஒளிபரப்புறாங்க???
3) காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து இவங்க தான் மனு போட்டு இருக்காங்களே.. அப்புறம் ஏன் தடை செய்ய வேண்டும்??
4) நல்ல தமிழ் படங்களை ஏன் அப்புறம் கன்னடத்துல எடுக்கறாங்க???
5) காவிரி ப்ரச்சனையை மாநில அளவுல பார்க்காம நம்முடைய நாடு என்று பார்க்க கூடாதா??
6) இல்ல சில அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல்த்துக்காக இப்படி செய்யராங்களா???

உங்களுக்கு என்ன தோனுதுனு சொல்லுங்கப்பு!!!

Tuesday, March 20, 2007

நீண்ட இடைவெளிக்கு பிறகு - மீண்டும்!!!

Udita Goswami!!!!


கண்களில் திராட்சையும்
கன்னங்களில் ஆப்பிளையும்
உதடுகளில் செர்ரியையும்
சுமக்கும்
நீ,
மறுபடியும்
உண்கிறாய்
செர்ரிகளை..

உன் உதட்டையும்
செர்ரியையும்
வைத்துகொண்டு
எது ரியல்
என்று கேட்டால்
சாப்பிட்டுத் தான்
சொல்வேன் என்று
பதில் சொல்கிறது
என் மனசு..




தலை சாய்த்து
பார்க்கிறாய்..
விழுந்து போனது
என் உள்ளம்..



இப்படி எல்லாம்
பார்க்காதே பெண்ணே..
அணுகுண்டு இருக்குமிடம்
உன் கண்கள் என
அமெரிக்க சட்டிலைட்
வட்டமிட்டு சொல்கிறது..


சாய்ந்து நிற்கிறாய்
நீ..
உன்னை சுற்ற
எழுந்து
சென்று விட்டது
என் இதயம்..

கவிதை உபயம்!!! கார்த்திக்


இந்த போட்டோவ பார்த்துட்டுACE உளறியது!!!

உதித்தா(ல்)
"Go" சாமியா??

பெயரிலே
பொதிந்த
பிழை அது
பெண்ணே!!

நீ
உதித்தா(ல்)
நான்
"come" சாமி

Monday, March 19, 2007

GOOD MORNING EVERYONE!!!

A MESSAGE FROM ONE OF MY FRIENDS!!! IT WAS NICE SO SHARING WITH U ALL!!!







HOPE U ALL LIKE IT

Wednesday, March 14, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை!!!!

எல்லாரும் இந்த தலைப்பில ஒரு ரீலே தொடர் கவிதை எழுதி இருக்காங்க!!
அந்த வரிசைல நம்மளோட உளறல் இதோ!!




முட்களுடனே ரோஜா மலர் மலருமாம்!!
என்ன இது!!
என்னுடைய ரோஜா
முட்கள் இல்லாமலேயே மலர்ந்துள்ளதே!!!



பாலைவனத்தில் மழை பெய்யாது!!
யார் சொன்னது!!
என் மனம் என்னும் பாலைவனத்தில்
நீ வந்தப்பின் (அன்பு) மழை மட்டுமே பெய்கின்றதே



உளறினால் கூட அழகாக
இருக்குமா என்ன??
உளறுவது உன் பெயராக
இருந்தால் அழகாக தான் இருக்கும்!!!




உளறுதல் என் உள்ளத்தின்
வேலை மட்டும் அல்ல!!
உன் சிரிப்பை பார்த்த
பலரின் வேலையும் அது தான் கண்ணே!!!


அப்பாடி ஒரு வழியா தலைப்புக்கு ஒரு ஜ்ஸ்டிபிகேஷன் பண்ணியாச்சு!!

மத்தவங்க எழுதின கவிதைகள்!!!
1) கார்த்திக்
2) பரணி
3) வேதா
4) மணி ப்ரகாஷ்
5) ஜி
6) அம்பி
7) டீரிம்ஸ்
8) ரம்யா
9) ப்ரியா
10) கிட்டு மாமா
11) பக்கா தமிழன்
12) ராஜி
13)ACE
14)G3

எல்லாருடைய பெயரும் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்... யாருடைய பெயராவது விட்டுப்போயிருந்தால் மன்னிக்கவும்!!!

Note 1:- ஸ்!!அப்பா!! வீட்டுல பூத்த ரோஜா பூவ ப்ளாக்ல போடறதுக்கு என்ன எல்லாம் பண்ண வேண்டி இருக்கு!!!!!

Note 2:- Rose Picture courtesy : Information and broadcasting minister The Great "Mr.AMBI"!!!

வாங்க வந்து துப்பிட்டு போங்க!!!

Tuesday, March 13, 2007

ஆண்களுக்கான பதிவு - Part I !!!!

ஏற்கனவே கல்யாணம் ஆனவஙக, புதுசா கல்யாணம் ஆனவங்க, கல்யாணம் பண்ணிக்க போறவங்க, காதலிக்கறவங்க, காதலிக்க போறவங்க இப்படி எல்லா ஆண்களுக்கும் பெண்களை (பொண்டாட்டி/காதலி யாரா வேணும்னாலும் இருக்கலாம்) எப்படி கவரர்துனு தெரியாம இருக்காங்க..
அவங்களுக்கு உதவி செயறதுக்கு தானுங்க இந்த பதிவு!!!
இது ரெண்டு பாகமா வர போகுது!!!
இப்போ பாகம் ஒண்ணு!!!




மொதல்ல நீங்க உங்க மனைவி / காதலிக்கிட்ட சொல்ல கூடாதது!!!

1) கண்ணே!! நீ கொஞ்சம் வெயிட் போட்டு இருக்கே!!
2) நீ சமீப காலமா நிறைய அனாவசிய ஷாப்பிங்/சிலவுகள் செய்கிறாய்!!!
3) உன்னுடைய சமையல் சூப்பர்.. ஆனா என்னோட அம்மா சேர்க்கின்ற ஏதோ ஒண்ணு குறையுது!! அவங்களுக்கு போன் போட்டு கொஞ்சம் கேளேன்...
4) எனக்கு கொஞ்சம் பிரேக் தேவை படுது .. அதனால நான் என்னோட நண்பர்களோட கொஞ்ச நாள் ஊர்க்கு போறேன்.. என்னுடைய செல் போன் ஆப் ஆகி இருக்கும்!!
5) உன்னுடைய உடை உடுக்கும் விதம் சரியில்லை!! நீ அதை மாற்ற வேண்டும்!!!



நீங்கள் உங்கள் மனைவி/காதலியிடம் மறக்க கூடாதது!!

1) அவளுடைய பிறந்த நாள்!!
2) உங்களுடைய மண நாள்!!!
3) வேலன்டைன்ஸ் டே!!!
4) அவளுக்கு பிடித்த பூ மற்றும் வாசனை திரவியம்(perfume)!!!
5) அவளுடைய போன் நம்பர் மனபாடமாக (அவிங்க போன் கனக்க்ஷன் எடுத்து 10 நிமிடம் ஆகியிருந்தாலும்)

இப்போதிக்கி இவ்வளவு தானப்பு!!!
அடுத்த பகுதி நாளை தொடரும்...
உங்க மேலான கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன!!!

Stress Reliever Yogasan - எப்படி நம்பள நல்லா பார்த்துக்கறது!!!

நம்ப ஆபிச்சுல நிறைய வேலை செஞ்சு களைத்து போனா என்ன யோகாசனம் செஞ்சா நம்பள நல்லா பார்த்துக்க முடியுனு பார்த்துட்டு போங்கப்பு!!!


இந்த யோகசனம் ஒரு நல்ல Stress Reliver !!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.





எப்படி இருக்கு இந்த யோகசனம்??

எவ்வளவு சுலபமான யோகசனம் இல்ல!!!

எல்லாரும் செஞ்சு பயனடைஞ்சுக்கோங்க!!!

எல்லாருக்கும் பிடிச்சு இருக்கா???

வந்து சொல்லிட்டு போங்கப்பு!!!

ஹி ஹி ஹி!!!!

Sunday, March 11, 2007

ஆரஞ்சு பழத்தில் அற்புதங்கள்!!!!

அடடா!!!
ஆரஞ்சு பழத்தில் இப்படி எல்லாம் கூட செய்ய முடியுமா???

நம்பளோட தாஜ் மஹால் கூட இருக்கு!!!

நம்ம கிட்ட குடுத்தா உரிச்சு சாப்பிடுவோம் இல்லாட்டி ஜூஸ் போட்டு குடிப்போம்!!!









Thursday, March 08, 2007

உலக மகளிர் தினம்!!!!

மகளிர் தினத்துக்காக செலினா ஜெட்லி!!!!








ஹி ஹி !!!
குருவே தப்பா நினைச்சுக்காதீங்க!!!
இப்போத்திக்கி இது தான் முடியும்!!!
கூடிய விரைவில் நல்லதா எழுதறேன்....